என்னது இந்த கார பராமரிக்க ஒரு கிமீ-க்கு வெறும் 39பைசா மட்டும்தான் செலவாகுமா! மாருதிக்கே டஃப் கொடுக்கும்போலையே!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் விலை குறைவான கார் மாடல்களில் நிஸான் மேக்னைட் (Nissan Magnite)-ம் ஒன்றாகும். இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் சமீத்திலேயே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மேக்னைட் ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த காரை பராமரிக்க ஒரு கிலோ மீட்டருக்கு வெறும் 39 பைசா மட்டுமே செலவாகும் என தயாரிப்பு நிறுவனமான நிஸான் தகவல் வெளியிட்டு இருக்கின்றது. 50 ஆயிரம் கிமீ வரை பயணிக்கும்போதே இந்த மிக குறைவான பராமரிப்பு செலவு என்பது ஏற்படும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இந்த தகவல் வாகன ஆர்வலர்கள் மத்தியில் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. நிஸான் நிறுவனம் மேக்னைட் கார் மாடலுக்கு 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிமீ வாரண்டியை ஸ்டாண்டர்டு வாரண்டி பிளானாக வழங்கிக் கொண்டிருக்கின்றது. எந்தவொரு கூடுதல் கட்டணமுமின்றி இந்த வாரண்டி திட்டத்தை நிஸான் வழங்குகின்றது. இதனை 6 ஆண்டுகள் அல்லது 1.50 லட்சம் கிலோ மீட்டராக கூட்டிக் கொள்ள முடியும்.

Nissan magnite maintenance costs

கூடுதல் கட்டணத்தின் வாயிலாகவே இந்த நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டத்தை நிஸான் வழங்குகின்றது. இந்த நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டத்தின்கீழ் பாகங்கள், ரிப்பேர்கள் மற்றும் பிற உயர்ந்த செலவுகளை வழங்கும் பிரச்னைகளுக்கு சுலபமான தீர்வுக் காண முடியும். இதுதவிர, ரொக்கமில்லாமல் நாடு தழுவிய அளவில் சர்வீஸைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்.

தொடர்ந்து, வரம்பற்ற கிளைம்களையும் பெற்றுக் கொள்ள முடியும். இதுதவிர நான்கு முறை லேபர்களுக்கான கட்டணம் இல்லா சர்வீஸையும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களிலும் பெற்றுக் கொள்ள முடியும். இதுமட்டுமில்லைங்க, நிஸான் நிறுவனம் இந்த மேக்னைட் காருக்கு 'நிஸான் மேக்னைட் கேர்' (Nissan Magnite Care) எனும் ப்ரீபெயிட் மெயின்டெனன்ஸ் திட்டத்தையும் வழங்குகின்றது.

இதை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களால் சுமார் 21 சதவீதம் வரை சர்வீஸின் போது பணத்தை மிச்சப்படுத்திக் கொள்ள முடியும். மேலும், துள்ளியமான கோளாறுகளைக் கண்டறிய பிரச்னைகளைக் கண்டறியும் அதிநவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டு மிகப் பெரிய செலவுகளை தவிர்ப்பதற்கான வேலைகளை கைதேர்ந்த நிபுணர்கள் பார்ப்பார்கள் என்றும் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

இந்த சர்வீஸை இரண்டு விதமான பேக்கேஜ்களின்கீழ் நிஸான் வழங்குகின்றது. கோல்டு மற்றும் சில்வர் ஆகியவையே அவை ஆகும். இதில் கோல்டு முழுமையான பராமரிப்பிற்கான திட்டம் ஆகும். சில்வர் அடிப்படை சேவைகளுக்கான திட்டம் ஆகும். வாடிக்கையாளர்கள் தொந்தரவற்ற மற்றும் தடையில்லா பயன்பாட்டை பெறும் நோக்கிலேயே 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிமீ ஸ்டாண்டர்டு வாரண்டி பிளான் உடன் இந்த பிளான்களை வழங்குகின்றது.

நிஸான் மேக்னைட் ரூ. 5.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் அதிகபட்ச விலை ரூ. இது அறிமுகத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டு இருக்கும் ஆஃபர் விலை ஆகும். முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களால் மட்டுமே இந்த ஆரம்ப விலையில் மேக்னைட் காரை வாங்கிக் கொள்ள முடியும்.

நிஸான் நிறுவனம் சமீபத்திலேயே இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது என்பது கவனிக்கத்தகுந்தது. கணிசமான மாற்றங்களைப் பெற்று இந்த கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த எஸ்யூவி காரில் பிரீமியம் அம்சங்களை சற்றே தாராளமாக நிஸான் வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், 16 அங்குல அலாய் வீல், சாஃப்ட்டான மெட்டீரியலால் இந்த கார் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

இதுதவிர, தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், காற்றை வடிகட்டி சுத்தமாக்கும் கருவி என ஏகப்பட்ட அம்சங்களை இந்த காரில் பெற்றுக் கொள்ள முடியும். 1.0 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் ஆகிய இரண்டு ஆப்ஷன்களில் புதிய மேக்னைட் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் மேக்னைட் காருக்கும் சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்தநிலையிலேயே தற்போது மேக்னைட் காரின் பராமரிப்பு செலவு பற்றிய விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. இது அதன் விற்பனையை இன்னும் பலமடங்காக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, October 25, 2024, 11:07 [IST]
English summary
New nissan magnite delivers best in class maintenance costs at just 39 paise per kilometre
மேலும்... #nissan #nissan magnite #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+