ஃபார்ச்சூனரின் மார்க்கெட்டை காலி பண்ண வரும் புது கார் - உருவாக்குவது யாரென்று தெரியுமா? ஃபேமலியா போக ஏற்ற கார்

ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) நிறுவனம் இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்ய பல்வேறு கார்களை தயார் செய்து வருகிறது. அதில் ஒன்றுதான், புதிய தலைமுறை கோடியாக் (Kodiaq) ஆகும். சற்று விலைமிக்க எஸ்யூவி காரான கோடியாக்கை முற்றிலும் புத்துணர்ச்சியான தோற்றத்தில் அறிமுகம் செய்ய ஸ்கோடா நிறுவனம் தயாராகி வருகிறது. இந்த நிலையில், புதிய ஸ்கோடா கோடியாக் கார் இந்தியாவில் முதல்முறையாக பொது சாலையில் ஓட்டி பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இணையத்தில் வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம், வாங்க.

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மேம்படுத்தப்பட்ட நியூ ஜென்ரேஷன் கோடியாக் காரை வெளியீடு செய்தது. அப்டேட்டான ஸ்டைலில், புத்துணர்ச்சியான உட்புற கேபின் மற்றும் கூடுதல் வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய கோடியாக் கார் நம் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டுவரப்படலாம் என அப்போதே தெரிவித்து இருந்தோம்.

skoda kodiaq spotted in india

அதன்படி, புதிய கோடியாக்கை இந்தியாவிற்கு கொண்டுவரும் வேலைகளில் ஸ்கோடா நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. இதன் வெளிப்பாடே தற்போது இந்தியாவில் இந்த காரின் சோதனை ஓட்டம் ஆகும். இந்த ரோடு டெஸ்ட்டிங்கின்போது கார் எந்தவொரு மறைப்பும் இல்லாமல் உள்ளது. இதனால், சர்வதேச சந்தையில் வெளியீடு செய்யப்பட்ட கோடியாக் காரை அப்படியே இந்தியாவில் ஸ்கோடா நிறுவனம் அறிமுகப்படுத்தும் என தெரிகிறது.

இந்த சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள கார் முழுவதுமாக வெள்ளை நிறத்தில் உள்ளது. ஒட்டுமொத்தமாக, பழைய கோடியாக் உடன் ஒப்பிடுகையில் இந்த புதிய கோடியாக் அளவில் பெரியதாக உள்ளது. காரின் முன்பக்கத்தில் எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட்கள் உடன் குவாட் ஹெட்லைட் செட்-அப் வழங்கப்பட்டுள்ளது.

skoda kodiaq spotted in india

இந்த கோடியாக் காரில் 20 இன்ச்சில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சக்கரங்களுக்கு மேலே சதுரமாக வளைவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. காரின் பின்பக்கத்தில் C-வடிவில் டெயில்லேம்ப்கள் கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சந்தைகளில் 5 மற்றும் 7 சீட்டர் வெர்சன்களில் ஸ்கோடா கோடியாக் கார் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், இந்தியாவில் 7-சீட்டர் வெர்சனில் மட்டுமே கோடியாக்கை ஸ்கோடா நிறுவனம் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் கோடியாக் காருக்கு உள்ளே 13 இன்ச்சில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்பிளே, ஹெட்-அப் டிஸ்பிளே உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இவற்றை இந்திய கோடியாக் காரிலும் எதிர்பார்க்கலாம்.

skoda kodiaq spotted in india

இவற்றுடன் வெளிநாட்டு கோடியாக் கார் மஸாஜ் இருக்கைகள், 4 யுஎஸ்பி-சி சார்ஜிங் துளைகள், 14-ஸ்பீக்கர் காண்டன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் பாக்ஸ் உள்ளிட்டவற்றையும் பெறுகிறது. பயணிகளின் பாதுகாப்பிற்கு மிக முக்கிய அம்சமாக அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டத்தை புதிய கோடியாக் காரில் ஸ்கோடா வழங்கியுள்ளது.

மற்றப்படி, என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இருக்காது. பழைய கோடியாக் காரில் வழங்கப்பட்ட அதே 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் தான் புதிய கோடியாக்கிலும் கொடுக்கப்படும். இந்த கார் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்க வாய்ப்பில்லை. வழக்கம்போல், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அப்பர்-மிடில் கிளாஸ் மக்களுக்கான கார் ஸ்கோடா கோடியாக் ஆகும். ஏனெனில், இதன் எக்ஸ்-ஷோரூம் விலை முன்பு ரூ.40 லட்சமாக இருந்தது. புதிய கோடியாக்கின் விலை நிச்சயமாக இதனை காட்டிலும் சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படும். மார்க்கெட்டில் பிரபலமான டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக ஸ்கோடா கோடியாக் விற்பனை செய்யப்படுவதால், கோடியாக்கின் நியூ ஜென்ரேஷன் எவ்வாறு இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Source: Zigwheels

More from DriveSpark

Article Published On: Thursday, June 20, 2024, 23:59 [IST]
English summary
Skoda kodiaq spotted in india check all details here
மேலும்... #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X