விலையை மட்டும் சரியா பிக்ஸ் பண்ணிட்டாங்க என்றால் போதும்!! விலை குறைவாக புது ஸ்கோடா கார்!

ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) காரை காட்டிலும் குறைந்த விலையில் புதிய எஸ்யூவி காரை கொண்டுவர ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தயாராகி வருகிறது. இந்த நிலையில், ஸ்கோடாவின் அந்த புதிய எஸ்யூவி கார் மும்பையில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களையும், காரின் சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட படங்களையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் எஸ்யூவி கார்களை வாங்க நாளுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் கடந்த 2021ஆம் ஆண்டில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஸ்கோடா குஷாக் காரை அறிமுகப்படுத்தியது. மற்ற கார்களை போல் இல்லாமல், குஷாக் காரை இந்திய கஸ்டமர்களுக்கென பிரத்யேகமாக ஸ்கோடா நிறுவனம் உருவாக்கியது.

new skoda suv car spotted

இதற்காகவே ஃபோக்ஸ்வேகன் உடன் கூட்டணி சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்திய மக்களின் இரசனைக்கு ஏற்ப கார்களை உருவாக்க வேண்டும் என்பதற்கு ஸ்பெஷலான எம்.க்யூ.பி-ஏ0-இன் பிளாட்ஃபாரத்தை வடிவமைத்தது. இந்த எம்க்யூபி-ஏ0-இன் பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டதே ஸ்கோடா குஷாக் ஆகும். குஷாக் மட்டுமின்றி, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன், விர்டுஸ் கார்களும் இதே பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டவையே.

ஸ்கோடாவில் இருந்து விரைவில் அறிமுகம் செய்யப்பட்ட உள்ள புதிய சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரும் இதே எம்க்யூபி-ஏ0-இன் பிளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டே உருவாக்கப்பட உள்ளது. இதற்கிடையில்தான், ஸ்கோடாவின் இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி கார் மும்பையில் பொது சாலையில் ஓட்டி பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட படங்களில், கார் முழுவதுமாக மறைக்கப்பட்டு இருப்பதை காணலாம்.

new skoda suv car spotted

அதாவது, காரின் தோற்றம் மற்ற கார் நிறுவனங்களுக்கு தெரிய கூடாது என்பதற்காக இவ்வாறு கார் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்டுள்ளது. மறைக்கப்படாமல் இருக்கும் பாகங்கள் என்று பார்த்தால், ஹெட்லைட்கள், டெயில்லைட்கள், கிரில் மற்றும் சக்கரங்கள் மட்டுமே ஆகும். இந்த புதிய ஸ்கோடா காரின் டெயில்லைட்கள் கிட்டத்தட்ட குஷாக் காரில் இருப்பதை போன்று உள்ளன.

டெயில்லைட்கள் மட்டுமின்றி, நிறைய பாகங்களை இந்த புதிய கார் ஸ்கோடா குஷாக்கில் இருந்தே பெற்றுவுள்ளது. இதனால், கார்களுக்கான உற்பத்தி செலவு குறையும் என்பது ஸ்கோடா ஆட்டோவின் திட்டமாக உள்ளது. என்னதான், பாகங்களை பெற்றாலும், ஸ்கோடா குஷாக் காரை காட்டிலும் இந்த புதிய கார் அளவில் சிறியதாகும். குறிப்பாக, காரின் நீளம் குறைவு என்பதை தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள ஸ்பை படங்களில் காணலாம்.

new skoda suv car spotted

இந்த காருக்கு இன்னும் ஸ்கோடா பெயர் வைக்கவில்லை. தற்போது மும்பை சாலைகளில் சோதனை செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஸ்கோடா காரின் முன்பக்கத்தில் இரண்டாக பிளவுப்பட்டதாக ஹெட்லைட் செட்-அப் கொடுக்கப்பட்டுள்ளது. இதில். எல்இடி டி.ஆர்.எல்-கள் மேலேயும், மெயின் ஹெட்லேம்ப் கீழேயும் வழங்கப்பட்டுள்ளன. ஸ்கோடா கார்களுக்கே உண்டான கிரில் பகுதியை இந்த புதிய காரிலும் காண முடிகிறது.

இந்த எஸ்யூவி காரில் ரூஃப்-ரெயில்களையும் பார்க்க முடிகிறது. குஷாக் காரில் பொருத்தப்படும் அதே 1.0 லிட்டர் டி.எஸ்.ஐ பெட்ரோல் என்ஜின் தான் இந்த புதிய காரில் வழங்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதிகப்பட்சமாக 113 பிஎச்பி மற்றும் 178 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தும் இந்த பெட்ரோல் என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் வாங்கலாம்.

new skoda suv car spotted

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விற்பனையில் ஹூண்டாய் வென்யூ, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் போன்ற கார்களுக்கு போட்டியாக விளங்கவுள்ள இந்த புதிய ஸ்கோடா காரின் அறிமுகத்தை அடுத்த 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் எதிர்பார்க்கிறோம். முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளதால், காரின் விலையை குறைவாகவே எதிர்பார்க்கலாம்.

Image Courtesy: Facebook/ Vaibhav Gagare

More from DriveSpark

Article Published On: Saturday, May 18, 2024, 16:58 [IST]
English summary
New skoda sub 4 meter suv car spotted in mumbai check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X