யாருக்கு காத்துக்கிட்டு இருக்கோ... மக்கள் பலரின் நம்பிக்கைக்குரிய கார் கூடுதல் வசதிகளுடன்!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. மாருதி சுஸுகி, ஹூண்டாய் நிறுவனங்களுக்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் 3வது பெரிய நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. குறிப்பாக, சமீப வருடங்களில் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் அடைந்திருக்கும் உயரம் பெரியது. டாடாவின் இந்த சமீப கால வளர்ச்சிக்கு காரணமான கார்களுள் முக்கியமானது பஞ்ச் (Punch) ஆகும். காம்பெக்ட்டான உடலமைப்பில் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய காராக இருப்பதால், பஞ்ச் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த ஆண்டில் பல மாதங்களில் அதிக பேரால் வாங்கப்பட்ட கார், டாடா பஞ்ச் ஆகும். இதன் காரணமாகவே, பஞ்ச் காரை அவ்வப்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அப்டேட் செய்துவிடுகிறது. அந்த வகையில், சமீபத்தில் டாடா பஞ்ச் கார் புதிய வசதிகள் உடன் அப்டேட் செய்யப்பட்டது. மேலும், பஞ்ச் காரின் வேரியண்ட்களிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

new tata punch reached dealerships

இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட புதிய டாடா பஞ்ச் கார்கள் நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், கிரே நிறத்திலான பஞ்ச் காரை காணலாம். மேலும், டாடா ஷோரூம் ஒன்றின் வளாகத்திற்குள் எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில், கிரே நிறத்தில் இரு டாடா பஞ்ச் கார்கள் காட்சி தருகின்றன.

பஞ்ச் ஆனது டாடா மோட்டார்ஸின் மைக்ரோ-எஸ்யூவி கார் ஆகும். அதாவது, அந்த அளவிற்கு சிறியதான டாடா எஸ்யூவி கார், பஞ்ச் ஆகும். அப்டேட் செய்யப்பட்ட புதிய பஞ்ச் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.12 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 10 விதமான வேரியண்ட்களில் அப்டேட் செய்யப்பட்ட டாடா பஞ்ச் விற்பனை செய்யப்படுகிறது.

new tata punch reached dealerships

ப்யூர், ப்யூர் (ஆப்ஷ்னல்), அட்வென்ச்சர், அட்வென்ச்சர் ரிதம், அட்வென்ச்சர் எஸ், அட்வென்ச்சர்+ எஸ், அக்கம்ப்ளிஷ்டு+, அக்கம்ப்ளிஷ்டு+ எஸ், க்ரியேட்டிவ்+ மற்றும் க்ரியேட்டிவ்+ எஸ் என்பன அந்த 10 வேரியண்ட்கள் ஆகும். டாடா பஞ்ச் காருக்கு வழங்கப்பட்டு வந்த கலர் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி உடன் பெரிய அளவில் 10.25-இன்ச்சில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், ரியர் ஏசி வெண்ட்ஸ் மற்றும் முன் இருக்கை பயணிகளுக்கு ஆர்ம்ரெஸ்ட் உள்ளிட்டவை அப்டேட் செய்யப்பட்ட பஞ்ச் காரில் வழங்கப்பட்டுள்ளன. இவை, பஞ்ச் சிஎன்ஜி காரில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த வசதிகள் ஆகும்.

new tata punch reached dealerships

என்ஜின் ஆப்ஷன்களை பொறுத்தவரையில், பெட்ரோல் மற்றும் பெட்ரோல்+ சிஎன்ஜி என 2 விதமான ஆப்ஷன்களில் வழக்கம்போல் புதிய பஞ்ச் கார் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸை பெறலாம். ஆனால், சிஎன்ஜி என்ஜின் ஆப்ஷன் உடன் ஏஎம்டி கியர்பாக்ஸை மட்டுமே பெற முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அப்டேட் செய்யப்பட்ட புதிய டாடா பஞ்ச் காருக்கு முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன. அதனை தொடர்ந்து தற்போது புதிய பஞ்ச் கார்கள் ஷோரூம்களுக்குவர துவங்கியுள்ளதால், புக் செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். ஆதலால், புதிய பஞ்ச் காரை புக் செய்தவர்கள் டெலிவிரி பெறுவதற்கு தயாராகுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 24, 2024, 21:31 [IST]
English summary
New tata punch cars reached dealership showrooms check all details here
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X