இது மாருதியோட ஸ்பெஷல் காராச்சே.. ஷோரூமுக்கே வர தொடங்கிருச்சா.. தனி கவனிப்புடன் பார்க்கும் ஊழியர்கள்!
இந்தியாவில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிசையர் (Dzire) கார் மாடலை சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. யாரும் நம்ப முடியாத விலையிலேயே இந்த காரை அது விற்பனைக்குக் கொண்டு வந்தது. இது ஓர் புதிய தலைமுறை வெர்ஷன் ஆகும். ரூ. 6.79 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலேயே இது விற்பனைக்கு வந்திருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த விலை குறைவான காரையே மாருதி சுஸுகி நிறுவனம் அதன் விற்பனையாளர்களின் கைகளுக்கு அனுப்பி வைக்கத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதை உறுதிப்படுத்தும் விதமாக புதிய மாருதி சுஸுகி டிசையர் ஷோரூம்களில் நிற்கும் படங்கள் வெளியாகி உள்ளன. புதிய டிசையர் கார் மாடலை மாருதி சுஸுகியின் ஸ்பெஷல் கார் என கூறலாம். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மிக முக்கியமான காரணமாக இந்த காரின் பாதுகாப்பு தரம் உள்ளது.

சமீபத்தில் கார்களின் பாதுகாப்பு திறன்குறித்து ஆராயும் அமைப்பான குளோபல் என்சிஏபி (Global NCAP) இந்த காரை மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. இதன் முடிவுகளையே அது சமீபத்தில் வெளியிட்டது. ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையே இந்த கார் மாடல் பெற்றதாக அது அறிவித்தது.
பாதுகாப்பு விஷயத்தில் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களை பெறும் முதல் மாருதி சுஸுகி கார் மாடல் இதுவே ஆகும். இந்த விஷயத்தில் பூஜ்ஜியம் ஸ்டார் ரேட்டிங்கைகூட மாருதி சுஸுகியின் தயாரிப்புகள் சில பெற்றிருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த மாதிரியான சூழலிலேயே மாபெரும் முன்னேற்றமாக உச்சபட்ச ரேட்டிங் 5 ஸ்டார்களை புதிய டிசையர் குவித்திருக்கின்றது.

இதனால்தான் மாருதி சுஸுகியின் ஸ்பெஷல் தயாரிப்பாக புதிய டிசையர் காட்சியளிக்கின்றது. பாதுகாப்பு தருவதில் மட்டுமில்லைங்க மைலேஜை வாரி வழங்குவதிலும் இந்த கார் மாடல் கொடை வள்ளலாக உள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கே 24 கிமீ முதல் 25 கிமீட்டருக்கும் அதிகமான மைலேஜை இது வழங்கும்.
அதிலும் உச்சபட்சமாக சிஎன்ஜி வெர்ஷன் ஒரு கிலோவிற்கே 33.73 கிமீ வரையில் மைலேஜ் தரும் என கூறப்பட்டுள்ளது. இது அராயின் அதிகாரப்பூர்வ தகவல் ஆகும். இதன் வாயிலாக அதிகம் மைலேஜ் தரும் கார் மற்றும் அதிகம் பாதுகாப்பு திறன்மிக்க வாகனம் என்பது மாருதி சுஸுகி டிசையர் உறுதியாகி இருக்கின்றது.
புதிய டிசையர் சிறப்பம்சங்களையும் மிகவும் தாராளமாகக் கொண்டிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. அந்தவகையில், புதிதாக சன்ரூஃப் அம்சம் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, மெல்லிய எல்இடி டிஆர்எல், ஹெட்லைட் மற்றும் கவர்ச்சியான பாடி பேனல் ஆகியவற்றை இந்த கார் மாடல் கொண்டிருக்கின்றது.
புதிய டிசையர் ஒட்டுமொத்தமாக நான்கு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எல்எக்ஸ்ஐ (LXi), விஎக்ஸ்ஐ (VXi), இசட்எக்ஸ்ஐ (ZXi) மற்றும் இசட்எக்ஸ்ஐ பிளஸ் (ZXi Plus) ஆகியவையே அவை ஆகும். இந்த காரில் கூடுதல் சிறப்பாக 9 அங்குல திரை, வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு ஆகிய அம்சங்களுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
1.2 லிட்டர் புதிய இசட் சீரிஸ் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் 3 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் மோட்டார் ஆகும். இதே எஞ்சினே பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களில் வழங்கப்பட்டு உள்ளது என்பது கவனிக்கத்தகுந்தது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் இந்த காரில் வழங்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிகம் மைலேஜ் தரும், அதிகம் பாதுகாப்பு தரும் கார் மாடலாக புதிய டிசையர் நாட்டில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. ஆகையால், இதற்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. மிக முக்கியமாக மற்ற மாருதி சுஸுகி கார்களை காட்டிலும் புதிய டிசையருக்கு மிக மிக அமோகமான வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








