புதுசா கார் வாங்கலாம்னு இருக்கீங்களா?.. லிட்டர் ஒன்றிற்கு 20கிமீ மைலேஜ் தரும் டொயோட்டா கார் சீக்கிரமே வரபோது!!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் புதிய டிசையர் (Dzire) கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி சில தினங்களே ஆகின்றன. இது ஓர் சப் 4 மீட்டர் செடான் ரக கார் (Sub 4 meter Sedan Car) மாடல் ஆகும். ரூ. 6.79 லட்சம் என்கிற மிக குறைவான விலையிலேயே புதிய டிசையர் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த காருக்கு இந்தியாவில் மிக மிக அமோகமான வரவேற்பு கிடைக்கும் என பலரால் நம்பப்படுகின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியாவின் செடான் கார் மார்க்கெட்டை அலங்கரிக்கும் விதமாக இன்னும் சில கார் மாடல்களும் நாட்டில் விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா (Toyota)-வும் அதன் செடான் வகையைச் சேர்ந்த கார் மாடல் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

புதிய தலைமுறை கேம்ரி (Next generation Camry) கார் மாடலையே அது விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர உள்ளது. நீண்ட நாட்களாக இதுபற்றிய தகவல்கள் வெளியாகி வந்தநிலையில், தற்போது அதன் அறிமுக தேதியே வெளியாகி உள்ள. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி புதிய தலைமுறை டொயோட்டா கேம்ரி வருகின்ற டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
இது ஒன்பதாம் தலைமுறை கேம்ரி ஆகும். இந்தியாவிற்கான கேம்ரி இந்தியாவிலேயே வைத்து தயாரிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதேவேளையில், இந்த காரின் உற்பத்தியை டொயோட்டா இந்தியாவில் தொடங்கி 11 ஆண்டுகள் ஆகிவிட்டன என்பது கவனிக்கத்தகுந்தது. தற்போது சந்தையில் விற்பனையில் இருப்பதைக் காட்டிலும் பலமடங்கு மேம்பட்ட வாகனமாகவே புதிய தலைமுறை கேம்ரி தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் அகலமான கிரில், கூர்முகம் கொண்ட முன் பக்கம், இதற்கேற்ப ஷார்ப்பான லுக்கைக் கொண்ட லைட்டுகள், லெக்சஸ் கார்களை பிரதிபலிக்கும் பின் பக்கம் ஆகியவற்றையே புதிய கேம்ரி கொண்டிருக்கின்றது. இதேபோல், காரின் உட்பக்கத்தையும் பலநிலைகளில் மேம்படுத்தி இருக்கின்றது, டொயோட்டா.
ஸ்டியரிங் வீல், சென்டர் கன்சோல் உள்ளிட்டவற்றிற்கு புதிய லுக் வழங்கப்பட்டு இருக்கின்றது. எனவே மிகவும் ஃப்ரெஷ்ஷான ஃபீலை இதன் உட்பக்கம் பயணிகளுக்கு நிச்சயமாக வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், ஆடி-பென்ஸ் கார்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இந்த கார் மாடல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்ப, பின் பக்க பயணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்களை இந்தியாவிற்கான கேம்ரி தாங்கி இருக்கம் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அந்தவகையில், கிளைமேட் ஜோன்கள், பின்னிருக்கையாளர்களுக்கான திரை, யுஎஸ்பி 'சி' டைப் சார்ஜிங் பாயிண்ட், ஜன்னல் திரைகள் மற்றும் ஜேபிஎல் சவுண்டு சிஸ்டம் உள்ளிட்டவை இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. எஞ்சினைப் பொருத்த வரை புதிய கேம்ரி காரில் 2.5 லிட்டர், 4 சிலிண்டர் மோட்டாரே இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 222 பிஎச்பி ஆற்றலை உருவாக்கும். இதுமட்டுமில்லைங்க, இந்த மோட்டாரின் மற்றுமொரு சிறப்பாக ஹைபிரிட் அம்சத்தையும் தாங்கியிருக்கும் என கூறப்படுகின்றது. இந்த அம்சத்தைக் கொண்டு அதிக மைலேஜை கேம்ரி வழங்க இருக்கின்றது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கே இந்த கார் 19 கிமீ வரையில் மைலேஜ் தருமாம்.
இதற்கேற்க இ-சிவிடி கியர்பாக்ஸே இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது. இந்த காரின் வருகை மாருதி சுஸுகி டிசையருக்கு எந்த வகையிலும் போட்டியாக அமையாது. ஏனெனில் இதன் டார்கெட்டே ஸ்கோடா சூப்பர்ப் போன்ற செடான் வகை கார் மாடல்களே ஆகும். இதுதவிர, இதன் வருகையால் பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் காருக்கும் போட்டியான சூழல் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கேம்ரி இந்தியாவில் ரூ. 45 லட்சத்திற்கும் அதிகமான விலையிலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கே மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இருப்பினும், செடான் கார் காதலர்களும் இந்தியாவில் இருக்கதான் செய்கின்றார்கள். இவர்களைக் கவரும் முயற்சியாகவே ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், ஹோண்டா மற்றும் டொயோட்டா உள்ளிட்ட பிராண்டுகள் புதிய செடான் கார்களை இந்தியாவில் களமிறக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








