வெயில் கொளுத்துதா?.. சரியா ஏசி வேலை செய்யலையா?.. ஏசி பரிசோதிப்பை இலவசமா செய்ய போவதாக பிரபல நிறுவனம் அறிவிப்பு!

பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஏசி பரிசோதிப் (Free AC Ckeck-up)-பைச் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கின்றது. அது எந்த நிறுவனம், இந்த இலவச ஏசி செக்-அப் கேம் வாயிலாக அந்த நிறுவனம் வேறு என்ன சிறப்பு சலுகைகளை எல்லாம் செய்ய இருக்கின்றது என்பது பற்றிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கோடை வெயில் இப்போதே சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. உலக நாடுகள் பலவற்றில் வெப்ப அலை மிகக் கடுமையாக வீசத் தொடங்கி இருக்கின்றது. இந்தியாவின் முக்கிய நகரங்கள் பலவற்றில் வெயில் சதம் அடித்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால், வெயில் நேரத்தில் வெளியில் செல்பவர்கள் அதிக கவனத்துடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.

Nissan free ac service

இந்த மாதிரியான சூழலிலேயே தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு உதவும் விதமாக பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று இலவச ஏசி செக்-அப் (பரிசோதிப்பு)-ஐ செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கின்றது. நிஸான் (Nissan) நிறுவனம் அதுவாகும். இலவச ஏசி செக்-அப்பிற்கான கேம்ப்பை அது நாடு முழுவதும் தொடங்கி இருக்கின்றது.

இது அடுத்த மாதம் ஜூன் 15ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இலவச ஏசி செக்-அப் கேம்பிற்காக நாடு முழுவதும் சுமார் 120 சர்வீஸ் மையங்கள் தயார் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த கேம்ப் வாயிலாக ஏசி-யை சர்வீஸ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 20 சதவீதம் டிஸ்கவுன்ட், பிற மதிப்புக்கூட்டப்பட்ட சேவைகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படும் என்று நிறுவனம் அறிவித்து இருக்கின்றது.

இதுதவிர, பாகங்கள் மற்றும் அணிகலன்களுக்கும் சிறப்பு சலுகையை வழங்க இருப்பதாக நிஸான் அறிவித்து இருக்கின்றது. தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு இந்த கோடை வெயில் காலத்தில் குளிர்ச்சியான பயணத்தை உறுதிச் செய்யும் பொருட்டு இந்த இலவச ஏசி செக்-அப் கேம்ப்பை நிஸான் அறிவித்து இருக்கின்றது.

இத்துடன், இலவசமாக காரின் டாப்பை அது கழுவி தர இருப்பதாகவும் அறிவித்து இருக்கின்றது. மேலும், இலவசமாக காரை பிக்-அப் மற்றும் டிராப் செய்தல் போன்ற தரமான சேவைகளையும் அது இதன் வாயிலாக அறிவித்து இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி நிஸான் நிறுவனம் இந்தியாவில் ஒரே ஒரு கார் மாடலை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

மேக்னைட்தான் அந்த கார் மாடல் ஆகும். வழக்கமான மற்றும் இரண்டு விதமான சிறப்பு பதிப்புகளில் இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கின்றது. கூரோ ஸ்பெஷல் எடிசன் மற்றும் கெஸா ஸ்பெஷல் எடிசனே அவை ஆகும். இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கம் மலிவு விலை கார் மாடல்களில் ஒன்றாகவும் நிஸான் மேக்னைட் இருக்கின்றது.

இதன் ஆரம்ப விலை ரூ.5.99 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காருக்கு ரூ.87 ஆயிரத்திற்கு சிறப்பு சலுகையை நிஸான் வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. சிறப்பு பதிப்பு மற்றும் வழக்கமான பதிப்பு என அனைத்தையும் சேர்த்து ஒட்டுமொத்த ஒன்பது விமான தேர்வுகளில் இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் அதிகபட்ச விலை ரூ.9.65லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கோடை வெயில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டில் சுட்டெரிக்கத் தொடங்கி இருக்கின்றது. ஆகையால் வாகனத்தில் வெளியில் செல்வோர் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக, உங்களுடைய கார்களில் உள்ள ஏசியை முன் கூட்டியே சர்வீஸ் செய்வது மிகவும் நல்லது. திடீர் ஏசி செயல் இழப்பை இதன் வாயிலாக தவிர்த்துவிட முடியும். மேலும், சிறப்பான ஏசி செயல்பாட்டையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 27, 2024, 15:12 [IST]
English summary
Nissan announces free ac service camp in india
மேலும்... #நிஸான் #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+