சிங்கிள் சார்ஜில் சென்னைல இருந்து பெங்களூர் போயி மைசூரே போயிரலாம்... அதிநவீன எலெக்ட்ரிக் கார் களமிறங்குது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று நிஸான் எக்ஸ்-ட்ரெயில் (Nissan X-Trail). எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த கார் இன்னும் ஒரு சில நாட்களில் விற்பனைக்கு களமிறக்கப்படவுள்ளது. இதை தொடர்ந்து ஆர்யா காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் நிஸான் (Nissan Ariya) நிறுவனம் தீவிரம் காட்டி வருவதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். நிஸான் ஆர்யா எலெக்ட்ரிக் கார், வெளிநாடுகளில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
நிஸான் ஆர்யா காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்பட்டு வருகின்றன. அவை 63 kWh மற்றும் 87 kWh ஆகியவை ஆகும். இதில், 63 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 402 கிலோ மீட்டர்கள் எனவும், 87 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 529 கிலோ மீட்டர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரி 130 kW ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கு (130 kW Fast Charging) சப்போர்ட் ஆகும். இந்த ஆப்ஷனை பயன்படுத்தினால், இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை, வெறும் 35 நிமிடங்களில், 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும்.
நிஸான் ஆர்யா எலெக்ட்ரிக் காரில், 12.3 இன்ச் அளவில் 2 திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்-ஆக செயல்படும். மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர்-ஆக செயல்படும். இதுதவிர இன்னும் பல்வேறு அதிநவீன வசதிகளும் இந்த எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, போஸ் ஆடியோ சிஸ்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். நிஸான் நிறுவனம் ஆர்யா எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் உற்பத்தி செய்ய போவதில்லை. மாறாக முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளது. எனவே இதன் விலை மிகவும் அதிகமாக இருக்கும்.
நிஸான் நிறுவனம் ஆர்யா எலெக்ட்ரிக் காரின் எந்த பேட்டரி பொருத்தப்பட்ட மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் 63 kWh பேட்டரி பொருத்தப்பட்ட மாடல்தான், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. எலெக்ட்ரிக் கார்களை வாங்க நிறைய பேர் ஆர்வமாக உள்ளனர். இதில், நீங்களும் ஒருவர் என்றால், நிஸான் ஆர்யா எலெக்ட்ரிக் கார் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஆனால் இது ஒரு பிரீமியமான எலெக்ட்ரிக் கார் ஆகும்.
எனவே இதன் விலை மிகவும் அதிகமாக இருக்கும். ஒரு விலை உயர்ந்த பிரீமியம் எலெக்ட்ரிக் காரை வாங்கலாம் என நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு, நிஸான் ஆர்யா ஏற்றது. நிஸான் நிறுவனம் ஆர்யா எலெக்ட்ரிக் காரை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இறக்குமதி செய்து விற்பனை செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக நடப்பு 2024ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக நிஸான் ஆர்யா இந்தியாவில் விற்பனைக்கு வரலாம்.


Click it and Unblock the Notifications








