2, 3 குடும்பத்தை ஒரே கார்ல ஏத்தீட்டு போகலாம்! நம்ப முடியாத குறைவான விலையில் வரும் புதிய கார்! மாருதிக்கு செக்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber). இது எம்பிவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 8.97 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இது எம்பிவி ரகத்தை சேர்ந்த கார் என்பதால், 7 சீட்டர் மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.
ரெனால்ட் ட்ரைபர் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் நிலையில், இந்த காரின் அடிப்படையில், புத்தம் புதிய காம்பேக்ட் எம்பிவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் நிஸான் (Nissan) நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரெனால்ட் ட்ரைபர் கார் உருவாக்கப்பட்டுள்ள அதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான், நிஸான் நிறுவனத்தின் இந்த புதிய காம்பேக்ட் எம்பிவி காரும் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் ரெனால்ட் ட்ரைபர் காரில் வழங்கப்பட்டுள்ள அதே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள்தான், நிஸான் நிறுவனத்தின் காம்பேக்ட் எம்பிவி காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி பார்த்தால், நிஸான் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எம்பிவி காரில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 72 பிஎஸ் பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம்.

இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வசதிகளை பொறுத்தவரையில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களை எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரெனால்ட் ட்ரைபர் காரின் அடிப்படையில், நிஸான் நிறுவனம் புத்தம் புதிய காம்பேக்ட் எம்பிவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி கொண்டிருப்பது உண்மைதான். ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதையும் நிஸான் இன்னும் வெளியிடவில்லை.
எனவே அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளுக்கு நாம் இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும். ஆனால் நிஸான் நிறுவனத்தின் காம்பேக்ட் எம்பிவி கார் விற்பனைக்கு வரலாம் என்றுதான் நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் இந்த செக்மெண்ட்டில், ரெனால்ட் ட்ரைபர் காருக்கு போட்டியாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் புதிய காம்பேக்ட் எம்பிவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
எனவே நிஸான் நிறுவனத்தின் காம்பேக்ட் எம்பிவி காரும் விற்பனைக்கு வரும்பட்சத்தில், இந்த செக்மெண்ட்டில் போட்டி அனல் பறக்கும் என்பது உறுதி. நிஸான் நிறுவனம் புதிய காம்பேக்ட் எம்பிவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும்பட்சத்தில், ரெனால்ட் ட்ரைபரை போலவே அதுவும் விலை குறைவானதாகவே இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








