இந்தியாவில் தயாரித்த கார் தான் வேணும்ன்னு அடம்பிடிக்கும் வெளிநாட்டு மக்கள்! மாஸ் காட்டிய நிஸான் ஏற்றுமதி!

இந்தியாவை உற்பத்தி இடமாகக் கொண்டு பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வாகனங்களை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றன. அதே நேரம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றன. அப்படியாக இந்தியாவில் செயல்படும் ஒரு நிறுவனத்திற்கு இந்தியாவில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. சொல்லப்போனால் கடந்த மே மாதம் இதன் விற்பனை குறைந்துள்ளது. ஆனால் வெளிநாடுகளில் இந்நிறுவனத்தின் தயாரிப்பு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களை வாங்குகிறார்கள். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஜூன் மாதம் தொடங்கியுள்ள நிலையில் கடந்த மே மாத விற்பனை நிலவரங்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அதன்படி நிஸான் நிறுவனமும் தனது வாகன தயாரிப்பு நிலவரம் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த மே மாதம் இந்நிறுவனம் மொத்தமாக 6204 வாகனங்களை தயாரித்து விற்பனைக்காக அனுப்பி உள்ளது.

nissan export may 2024

கடந்த மே மாதம் இந்நிறுவனத்திற்கு மிகச்சிறந்த மாதமாகவே இருந்துள்ளது. இந்நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் வெறும் 3,043 வாகனங்களை மட்டுமே தயாரித்து விற்பனைக்காக அனுப்பி இருந்த நிலையில், தற்போது இது இரு மடங்காகி உள்ளது. இது சுமார் 104சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இதுவே கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் இந்நிறுவனம் மொத்தமாக 4,631 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. அதை ஒப்பிடும்போது 34சதவீதம் தற்போது வளர்ச்சி அடைந்துள்ளது.

கடந்த மே மாதம் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் உள்நாட்டில் எவ்வளவு விற்பனையாக உள்ளது என பார்த்தால் மொத்தமே 2211 வாகனங்கள்தான் உள்நாட்டில் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 2618 கார்கள் உள்நாட்டில் விற்பனையாகி இருந்தது. அதை ஒப்பிடும்போது 15.5 சதவீதம் அளவுக்கு விற்பனை சரிந்துள்ளது. ஒட்டுமொத்த விற்பனையை ஒப்பிடும்போது உள்நாட்டு விற்பனை சரிவை சந்தித்துள்ளது. பின்னர் எங்கு தான் விற்பனையானது என நீங்கள் கேட்கலாம்.

nissan export may 2024

நிஸான் நிறுவனம் கடந்த மே மாதம் ஏற்றுமதியை அதிகம் செய்துள்ளது மொத்தம் 3,993வாகனங்களை இந்நிறுவனம் இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வெறும் 639 வாகனங்களை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது. அத்துடன் ஒப்பிடும்போது தற்போது 99சதவீதம் ஏற்றுமதி என்பது அதிகமாகியுள்ளது. இதுவே கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 2,013 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது. அதை ஒப்பிடும்போதும் தற்போது கிட்டத்தட்ட இருமடங்காக ஏற்றுமதி அதிகமாக செய்துள்ளது.

நிஸான் நிறுவனம் கடந்த மே மாதம் மொத்தம் 1.4 லட்சம் வாகனங்களை உள்நாட்டிலும், ஏற்றுமதிக்கும் செய்து மிக முக்கியமான மைல் கல்லை எட்டிப் பிடித்தது. இந்நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களை 15 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. முக்கியமாக வங்கதேசம்,உகாண்டா, புருனே, மத்திய கிழக்கு நாடுகள், சவுதி அரேபியா, ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.

nissan export may 2024

ஏற்றுமதியில் இந்நிறுவனம் கவனம் செலுத்தி வரும் நிலையில் உள்நாட்டிலும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை மக்கள் வாங்குவதற்காக தனது நெட்வொர்க்கை பெரிது பிடுத்துக் கொண்டே இருக்கிறது. சமீபத்தில் கூட தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் இந்நிறுவனத்தின் ஷோரூம் திறக்கப்பட்டது. இந்தியா முழுவதும் 272 ஷோரூம் செயல்பட்டு வருகின்றன. இந்த நிதியாண்டு இன்னும் இதன் எண்ணிக்கை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.

நிஸான் நிறுவனம் சமீபத்தில் தான் தனது மேக்னெட் காரில் கீஸா சிவிடி ஸ்பெஷல் எடிசன் காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார் ரூ9.84 லட்சம் என்ற விலையில் விற்பனைக்காக அறிமுகமானது. இது குரோ பிளாக் எடிஷனுக்கு மேலே பொசிஷன் செய்யப்பட்டது. நிஸான் நிறுவனம் தான் இந்தியாவிலேயே குறிப்பிட்ட செக்மெண்டில் குறைந்த விலையில் சிவிடி கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக பெயர் பெற்றுள்ளது. முக்கியமாக இந்த காரின் விலை ரூ10 லட்சத்திற்கும் குறைவானது.

நிஸான் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் மிகப்பெரிய அளவுக்கு மவுசு இல்லை. இதற்கு காரணம் இந்தியாவில் இருக்கும் போட்டிதான் இந்தியாவில் போட்டியில் தயாரிப்புகள் பல நிஸான் நிறுவனம் தயாரிக்கும் தயாரிப்புகளையும் தாண்டி பெயர் பெற்ற தயாரிப்புகளை விற்பனை செய்து வருகின்றன. இதனால் நிஸான் தயாரிப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிஸான் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் மெல்ல மெல்ல மவுசு குடியுரிமை நிலையில் சர்வதேச அரங்கில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் சிறப்பாக விற்பனையாகி வருவது நிச்சயம் ஒரு நல்ல விஷயம் தான். இதன் காரணமாக இந்தியாவிலும் அடுத்தடுத்து இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாக வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, June 7, 2024, 7:00 [IST]
English summary
Nissan export may 2024 sales situation domestic slump and export boom details
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X