கம்மி சம்பளம் வாங்குறவங்களுக்கு இந்த காரை வாங்கனும்னு கனவு வந்துடும்! சூப்பரான காரை அறிமுகப்படுத்திய நிஸான்
2025-ம் ஆண்டிற்கான நிஸான் கிக்ஸ் கார் தற்போது சர்வதேச அரங்கில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரில் பல்வேறு புதிய அம்சங்கள் இடம் பெற உள்ளன. இந்த கார் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை எல்லாம் காணலாம் வாருங்கள்.
நிஸான் நிறுவனத்தின் கார்களுக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய மார்க்கெட் இருக்கிறது. இந்நிறுவனத்தின் கார்கள் எல்லாம் தரமான கார்களாக இருக்கும் என மக்கள் நம்புவதால் உலகின் மிகப்பெரிய நாடுகளில் நிஸான் நிறுவனம் சிறப்பான விற்பனையை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் தற்போது நிஸான் கிக்ஸ் காரை சர்வதேச அரங்கில் அப்டேட் செய்து முதன் முதலாக காட்சிப்படுத்தியுள்ளது.

அப்டேட் செய்யப்பட்டுள்ள இந்த நிஸான் கிக்ஸ் காரில் உட்புற கட்டமைப்புகள் புதிய வடிவமைப்பிலும், அதிக பிரிமியம் அம்சம் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த கார் காம்பேக்ட் காராக அறிமுகமாகி உள்ளது. இதன் டிசைன் வடிவமைப்பு அனைத்தும் ஹை என்ட் ஸ்னீக்கர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த காரில் ஆல்வில் டிரைவ் சிஸ்டம் இருப்பது உறுதியாகி உள்ளது.
முதல் முறையாக இந்த ஆல்வீல் டிரைவ் சிஸ்டத்துடன் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் இந்த ஆண்டு கோடை காலத்திற்குப் பிறகு அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் எஸ், எஸ்வி மற்றும் எஸ்ஆர் ஆகிய வேரியண்ட்களில் இரண்டு விதமான பிரிமியம் பேக்கேஜ்களுடன் இந்த கார் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த காரின் செக்மெண்டிலேயே சிறப்பான கிரவுண்டு கிளியரன்ஸ் மற்றும் கார்கோ இட வசதி கொண்ட காராக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சொன்னபடி இந்த காரில் ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் இருக்கும் நிலையில், இதில் சிறப்பாக ஸ்னோ டிரைவிங் மோடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் பணி காலங்களில் இந்த காரில் செல்லும்போது ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதற்காக இந்த டிரைவ் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன.
முக்கியமாக பணி நேரங்களில் திருப்பங்களில் கார் வழுக்கி கொண்டு செல்வதை தவிர்ப்பதற்காக சில தொழில்நுட்பங்கள் இந்த காரில் புகுத்தப்பட்டுள்ளன. இந்த காரின் சிறப்பம்சமே இந்த காரின் டிசைன் மொழி தான். இந்த கார் ரோட்டில் செல்லும்போது பார்ப்பதற்கு அட்டகாசமான லுக்கையும் சிறப்பான வடிவமைப்பையும் கொண்ட காராக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் பாக்ஸியான வடிவமைப்பு காருக்கு ஒரு ரக்கடான லுக்கை கொடுக்கிறது.

இந்த காரின் வடிவமைப்பில் உள்ள முக்கிய ஹைலைட்டாக ரூப் ஸ்பாயிலர்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் பின்பக்கம் முழு நீள எல்இடி டெய்ல் லைட் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்க கேட் அகலத்திற்கு இந்த லைட் வழங்கப்பட்டுள்ளது. இது இரண்டு செக்ஷன்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த காரின் பின் பக்கம் பார்க்க அட்டகாசமான லுக்கில் இருக்கிறது.
இந்த காரின் கேபின் பகுதியை பொருத்தவரை கூக்குன் மாதிரியான வடிவமைப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதன் டேஷ்போர்ட்டில் இரண்டு ஸ்கிரீன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்று இன்போடெயின்மென்ட் சிஸ்டத்திற்காகவும் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்டேஷன் சிஸ்டத்திற்காகவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் ஸ்டியரிங்கை பொறுத்தவரை ஃப்ளாட் பாட்டம் ஸ்டேரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது.
முன்பக்கம் உள்ள ஸ்டோரேஜ் பகுதியில் இரண்டு கப்புகளை ஹோல்டு செய்யும் பகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. டோர்களிலும் பாட்டில் ஹோல்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் சீட்டுகளைப் பொறுத்தவரை நிஸான் நிறுவனத்தின் ஜீரோ கிராவிட்டி சீட் டிசைன் வழங்கப்பட்டுள்ளது. சீட்டுகள் எல்லாம் சிவப்பு நிற நூல்களை வைத்து தைக்கப்பட்டுள்ளன.
இந்த காரின் உட்பகுதியில் உள்ள அம்சங்களை பொருத்தவரை பானரோமிக் சன் ரூஃப், 6 ஏர்பேக்குகள், அடாஸ் தொழில்நுட்பம், வயர்லெஸ் சார்ஜிங் பேடுகள், 10 ஸ்பீக்கர் கொண்ட போஸ் ஆடியோ சிஸ்டம், ஆகியன உள்ளன. இதன் இன்ஜினை பொறுத்தவரை 2.0லிட்டர் இன்லைன் 4 சிலிண்டர், நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 141 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த இன்ஜின் சிவிடி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிஸான் நிறுவனம் இந்த கிக்ஸ் காரை தற்போது சர்வதேச அளவில் காட்சிப்படுத்தியுள்ளது. அந்த நிறுவனத்தின் ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தி உள்ளது. பலர் இந்த காரை வாங்க காத்திருக்கிறார்கள். இந்த கார் தற்போது இந்தியாவிற்கு வரவில்லை. அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. விரைவில் இந்தியாவிற்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.


Click it and Unblock the Notifications









