இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!

நிஸான் (Nissan) நிறுவனம் அதன் மேக்னைட் கார்கள் விற்பனையில் வெற்றிக்கரமாக 1 லட்சம் என்கிற மைல்கல்லை கடந்துள்ளது. அதுமட்டுமின்றி, தொடர்ந்து 3வது வருடமாக நிஸான் மேக்னைட் கார்களின் விற்பனை எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுகுறித்தும், இந்த நிஸான் கார் குறித்தும் விரிவான விபரங்களை இனி பார்க்கலாம்.

ஜப்பான் நாட்டை சேர்ந்த நிஸான் நிறுவனம் இந்திய கார்கள் மார்க்கெட்டில் ஓர் நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாகவே போராடி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில், நிஸான் அறிமுகப்படுத்திய சில கார்கள் இந்தியாவில் பெரிய தோல்வியை சந்தித்தன. இருப்பினும் மனம் தளராத நிஸான், மார்க்கெட் டிரெண்டிற்கு ஏற்ப காம்பெக்ட்டான எஸ்யூவி ரக கார்களை அறிமுகம் செய்ய முடிவு செய்தது.

nissan magnite sold 1 lakh

அதன்படி விற்பனைக்கு வந்த நிஸான் கார் தான், மேக்னைட் ஆகும். எதிர்பார்த்தப்படி, நிஸான் மேக்னைட் காருக்கு ஓரளவுக்கு சிறப்பான வரவேற்பு ஆரம்பத்தில் இருந்தே கிடைக்க துவங்கியது. இன்னும் சொல்ல போனால், இந்திய மார்க்கெட்டில் நிஸான் நிறுவனத்துக்கு 2வது இன்னிங்ஸை ஏற்படுத்தி கொடுத்துள்ள காராக மேக்னைட்டை சொல்லலாம்.

அந்த அளவிற்கு, இந்தியாவில் தற்சமயம் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களுள் ஒன்றாக மேக்னைட் விளங்குகிறது. பயணிகளின் பாதுகாப்பு, தொழிற்நுட்ப வசதிகள் மற்றும் செயல்படுதிறனிலும் சிறப்பானதாக விளங்கும் நிஸான் மேக்னைட் இதுவரையில் 1 லட்சம் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, 1 லட்ச வாடிக்கையாளர்களின் கைகளுக்கு நிஸான் மேக்னைட் சென்றடைந்துள்ளது.

nissan magnite sold 1 lakh

இந்த 1 லட்ச மேக்னைட் கார்கள் விற்பனை ஆனது சீராக கிடைத்து வருவதுதான் நிஸான் நிறுவனத்துக்கு மகிழ்ச்சியான விஷயமாக அமைந்துள்ளது. அதாவது, ஆரம்பத்தில் அதிக மேக்னைட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு, தற்போது விற்பனை குறையவில்லை. இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்பட்டதோ அப்போதில் இருந்து ஒவ்வொரு மாதத்திலும் கிட்டத்தட்ட ஒரே எண்ணிக்கையிலான நிஸான் மேக்னைட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

2020ஆம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நிஸான் மேக்னைட் ஒவ்வொரு வருடத்திலும் 30,000 கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2024 மார்ச் மாதம் வரையில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான நிஸான் மேக்னைட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில், தொடர்ந்து 3வது நிதியாண்டாக மேக்னைட் கார்கள் விற்பனை எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது.

nissan magnite sold 1 lakh

இருப்பினும், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் நடந்து முடிந்த 2023-24ஆம் நிதியாண்டில் சில ஆயிரம் மேக்னைட் கார்கள் குறைவாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதை இங்கு கூறியே ஆக வேண்டும். 2020இல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இப்போது வரையில் 1 லட்சத்து 6,166 மேக்னைட் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேக்னைட் கார்களின் முக்கிய அடையாளமே 'மேட்-இன்-இந்தியா கார்' என்ற அதன் லேபிள் ஆகும்.

முழுக்க முழுக்க இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் நிஸான் மேக்னைட் கார்கள் ஒவ்வொரு வருடமும் கணிசமான எண்ணிக்கையில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த 1 வருடத்தில் 9,303 மேக்னைட் கார்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதற்கு முந்தைய 2022-23ஆம் நிதியாண்டில் இன்னும் அதிகமாக 11,540 மேக்னைட் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க நிஸான் நிறுவனத்துக்கு மற்றுமொரு வாய்ப்பை வழங்கியுள்ள கார் மாடல், மேக்னைட் ஆகும். முழுவதுமாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதால் மேக்னைட் கார்களின் விலைகள் மிகவும் குறைவாக உள்ளன. இதுவே, மேக்னைட் காரின் உடனடி வெற்றிக்கு காரணம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 23, 2024, 23:59 [IST]
English summary
Nissan magnite car sales crossed 1 lakh milestone check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X