இந்தியாவே காத்து கொண்டுள்ள விலை குறைவான காருக்கு முன்பதிவு தொடங்கியது! அடுத்த நாளே டெலிவரி பண்ண போறாங்களா!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று நிஸான் மேக்னைட் (Nissan Magnite). இதன் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய நிஸான் நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடல், வரும் அக்டோபர் 4ம் தேதி (October 4) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு மறுநாள், அதாவது வரும் அக்டோபர் 5ம் தேதியில் (October 5) இருந்து, நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடலை, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Delivery) செய்யும் பணிகள் தொடங்கப்படவுள்ளன.
இதற்கெல்லாம் முன்னதாக மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளை நிஸான் நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் நிஸான் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடலை தற்போது முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அல்லது உங்களுக்கு அருகில் உள்ள நிஸான் இந்தியா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ள முடியும். நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டிசைனை பொறுத்தவரையில், நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி முன் பகுதியில் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி பகல் நேர விளக்குகள் மற்றும் பம்பர் ஆகிய அம்சங்களில் மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரையில், புதிய அலாய் வீல்கள் வழங்கப்படலாம். பின் பகுதியை பொறுத்தவரையில், பம்பர் மற்றும் டெயில்லேம்ப்களில் மாற்றங்கள் செய்யப்படலாம்.

வசதிகளை பொறுத்தவரையில், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி மற்றும் சன்ரூஃப் ஆகிய வசதிகள் எல்லாம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எல்லாம், வரும் அக்டோபர் 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது நமக்கு தெரியவந்து விடும்.
ஆனால் இன்ஜினில் எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி தற்போது வழங்கப்பட்டு வரும் அதே 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள், தொடர்ந்து வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல், ஏஎம்டி மற்றும் சிவிடி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் நிஸான் மேக்னைட் காரின் ஆரம்ப விலை 6 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 11.27 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
ஆனால் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை சற்று உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் இந்திய சந்தையில் கிடைக்க கூடிய விலை குறைவான எஸ்யூவி ரக கார்களில் ஒன்று என்ற பெருமையை நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் தொடர்ந்து தக்க வைத்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








