அடித்து ஆட போகும் நிஸான்!! இந்திய மக்களுக்காக புது கார்... டாடா, மாருதி கார்களை சமாளிக்குமா?

நிஸான் மேக்னைட் (Nissan Magnite) காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் இந்தியாவில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இணையத்தில் வெளியாகியுள்ள ஸ்பை படம் இந்த காரின் அறிமுகம் குறித்த ஆவலை தூண்டியுள்ளது. புதிய மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் காரில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பதை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஜப்பானை சேர்ந்த கார் நிறுவனமான நிஸான் இந்திய மார்க்கெட்டில் ஓர் நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாக போராடி வருகிறது. ஒருவழியாக நிஸானுக்கு ஓரளவிற்கு வெற்றிக்கரமான காராக அமைந்தது மேக்னைட் ஆகும். அளவில் சிறியதான சப்-காம்பெக்ட் எஸ்யூவி காராக நிஸான் மேக்னைட் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.

nissan magnite facelift car spied

நிஸான் மேக்னைட் கார் அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 3 வருடங்களாகி விட்டதால், மேக்னைட்டை அப்டேட் செய்யும் பணியில் நிஸான் நிறுவனம் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. நிஸான் மேக்னைட் கார் முழுவதுமாக அப்டேட் செய்யப்பட போவதில்லை. காரின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்கள் மட்டுமே மேக்னைட் காருக்கு வழங்கப்பட உள்ளன.

இந்த நிலையில், புதிய நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் பொது சாலையில் ஓட்டி பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது. அப்டேட்கள் என்று பார்த்தால், ஏற்கனவே கூறியதுபோல் மேக்னைட் காரின் முன் மற்றும் பின்பக்கத்தில் வழங்கப்படும் பிளாஸ்டிக் பேனல்கள் அப்டேட் செய்யப்பட உள்ளன.

nissan magnite facelift car spied

அதாவது, காரின் முன்பக்க கிரில், பம்பர்கள், ஹெட்லைட்கள் மற்றும் எல்இடி சிக்னெச்சர் விளக்குகளின் வடிவங்கள் மாற்றப்படும். அதேபோல், காருக்கு பின்பக்கத்திலும் டெயில்லைட்களின் டிசைன் மாற்றப்படலாம். தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சோதனை ஓட்டத்தில் காரின் சக்கரங்கள் கூட மறைக்கப்பட்டுள்ளதால், புதிய டிசைனிலான அலாய் சக்கரங்களை புதிய மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் காரில் எதிர்பார்க்கிறோம்.

மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் காருக்கு உள்ளே பெரியதாக எந்த மாற்றமும் இருக்காது. இந்தியாவில் சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கு மத்தியில் விற்பனையில் பலத்த போட்டி நிலவி வருவதால், சில புதிய வசதிகள் வழங்கப்படலாம். இருப்பினும், காரினுள் டேஸ்போர்டு மற்றும் சீட் லே-அவுட்டின் டிசைன் மாற்றப்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே.

nissan magnite facelift car spied

அதேபோல், மேக்னைட் காரின் என்ஜின் ஆப்ஷன்களிலும் நிஸான் நிறுவனம் கை வைக்காது. நிஸான் மேக்னைட் கார் தற்சமயம் 2 விதமான பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஒன்றான, 1.0 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 71 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை பெற முடிகிறது.

மற்றொரு என்ஜின் ஆப்ஷனான 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் மூலம் 99 பிஎச்பி மற்றும் 160 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இந்த என்ஜின் ஆப்ஷன்களுடன் 5-ஸ்பீடு மேனுவல், ஏஎம்டி மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. காரில் குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என்பதால், அதற்கேற்ப புதிய மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் காரின் விலையும் சற்று அதிகரிக்கப்படும்.

nissan magnite facelift car spied

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் எஸ்யூவி கார்களுள் ஒன்றாக நிஸான் மேக்னைட் விளங்குகிறது. ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் நிஸான் நிறுவனத்திற்கு 2வது இன்னிங்ஸை மேக்னைட் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. ஆகையால், இத்தகைய காரை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 21, 2024, 23:48 [IST]
English summary
Nissan magnite facelift car spied in india spy image out
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X