அடி மாட்டு விலையில் களமிறங்கிய புது கார்! லிட்டருக்கு இவ்ளோ மைலேஜ் கிடைக்குமா! வாங்கறதுக்கு அடிதடியே நடக்குது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் (Nissan Magnite Facelift) கார், நேற்று (அக்டோபர் 4) மதியம் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு மறுநாளே, அதாவது இன்று முதலே (அக்டோபர் 5), மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Delivery) செய்யும் பணிகளை நிஸான் நிறுவனம் தொடங்கியுள்ளது. இது நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடலை முன்பதிவு செய்து விட்டு காத்து கொண்டிருந்த இந்திய வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகியவை ஆகும். இதில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மறுபக்கம் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜினின் பவர் அவுட்புட், 2 கியர் பாக்ஸ் ஆப்ஷன்களிலும் ஒன்றுதான். அது 72 பிஎஸ் / 96 என்எம் ஆகும். ஆனால் டர்போ பெட்ரோல் இன்ஜினில் பவர் அவுட்புட் மாறுபடும்.
டர்போ பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனில், 100 பிஎஸ் / 160 என்எம் ஆகவும், சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷனில் 100 பிஎஸ் / 152 என்எம் ஆகவும் உள்ளது. இந்த தகவல்களுடன், நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அதிகாரப்பூர்வமான மைலேஜ் (Mileage) எவ்வளவு? என்பதும் தெரியவந்துள்ளது.

இதன்படி நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் / 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 19.40 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் / 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 19.70 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் நிஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மறுபக்கம் டர்போ பெட்ரோல் / 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 19.90 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், டர்போ பெட்ரோல் / சிவிடி கியர் பாக்ஸ் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 17.90 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் நிஸான் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வசதிகளை பொறுத்தவரையில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 4 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் 360 டிகிரி கேமரா போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.
நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை வெறும் 5.99 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், நிஸான் நிறுவனம் ஆரம்ப விலையை உயர்த்தவே இல்லை. பொதுவாக ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்கள் செய்யப்பட்டால், ஆரம்ப விலையும் உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நிஸான் நிறுவனம் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலையில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யவில்லை. முந்தைய மாடல் கிடைத்த அதே விலையிலேயே ஃபேஸ்லிஃப்ட் மாடலையும் வாடிக்கையாளர்களால் பெற முடியும். அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 11.50 லட்ச ரூபாயாக இருக்கிறது.
இவை எக்ஸ்-ஷோரும் விலை ஆகும். அத்துடன் இவை அறிமுக சலுகை விலை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். முதலில் டெலிவரி பெறும் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் இந்த விலையில் கிடைக்கும். 10 ஆயிரம் பேருக்கு டெலிவரி செய்யப்பட்ட பின்னர், விலை உயர்த்தப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), கியா சொனெட் (Kia Sonet), ரெனால்ட் கைகர் (Renault Kiger), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) மற்றும் டாடா நெக்ஸான் (Tata Nexon) ஆகிய கார்களுக்கு எல்லாம், நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.


Click it and Unblock the Notifications








