6 லட்ச ரூபாய் காரில் இத்தனை வசதிகளா? டாடா காரில் கூட இல்லை!! ஜப்பான் நிறுவனம் கலக்குது!

நிஸான் (Nissan) நிறுவனம் அதன் புதிய மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் (Magnite Facelift) காரை மார்க்கெட்டில் சமீபத்தில் அறிமுகம் செய்ததை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்தியாவில் தற்போதைக்கு ஓர் அளவிற்கு அதிகம் விற்பனையாகும் நிஸான் கார் என்றால், அது மேக்னைட் ஆகும். 2020ஆம் ஆண்டில் முதல்முறையாக மேக்னைட் என்கிற சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரை நிஸான் அறிமுகம் செய்தது. அதன்பின் கடந்த 4 வருடங்களில் சில அப்டேட்கள் மேக்னைட்டில் கொண்டுவரப்பட்டாலும், சமீபத்தில் முக்கியமான ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் இந்த காருக்கு வழங்கப்பட்டது.

புதிய நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் கார் தோற்றத்தில் மட்டுமின்றி, தொழிற்நுட்ப வசதிகளிலும் மேம்பட்டதாக மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாடா பஞ்ச் காரில் கிடைக்காத சில வசதிகள் கூட 2024 மேக்னைட் காரில் வழங்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பதை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

nissan magnite facelift features

முழு-டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே: புதிய நிஸான் மேக்னைட்டில் 7-இன்ச்சில் டிரைவருக்கான டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடுக்காக டிஸ்பிளேவின் கிராஃபிக்ஸ் மாற்றப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவை மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் காரின் அசெண்டா பிளஸ் வேரியண்ட்டில் இருந்து பெறலாம். டாடா பஞ்சில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் டிஸ்பிளே வழங்கப்படுகிறது.

nissan magnite facelift features

6 ஏர்பேக்குகள்: ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் படி, மேக்னைட் காரின் பாதுகாப்பு அம்சங்களும் மேம்படுத்தப்பட்டு உள்ளன. காரில் தற்போது 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்ட் அம்சமாக மாற்றப்பட்டுள்ளன. மறுப்பக்கம், டாடா பஞ்ச் காரில் 2 ஏர்பேக்குகள் மட்டுமே அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்படுகின்றன. 6 ஏர்பேக்குகள் குறிப்பிட்ட சில வேரியண்ட்களில் மட்டுமே கொடுக்கப்படுகின்றன.

nissan magnite facelift features

360-டிகிரி கேமரா: முந்தைய மேக்னைட் மாடலிலும் 360-டிகிரி கேமரா வழங்கப்பட்டு வந்தது. இது தற்போது மேக்னைட்டின் பல வேரியண்ட்களில் கிடைக்க ஆரம்பித்துள்ளது. மேக்னைட் டெக்னா வேரியண்ட் வரையில் 360-டிகிரி கேமரா கிடைக்கிறது. டாடா பஞ்ச் காரில் ரியர்-வியூ பார்க்கிங் கேமரா மட்டுமே வழங்கப்படுகிறது.

nissan magnite facelift features

ரிமோட் என்ஜின் ஸ்டார்ட்: புதிய மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் காரை ரிமோட் மூலமாக எளிதாக ஸ்டார்ட் செய்யலாம். காருக்கு குறிப்பிட்ட தூரம் இருக்கும் வரையில் தானாக லாக்/ அன்லாக் செய்யும் வகையிலான சாவி புதிய மேக்னைட்டில் வழங்கப்படுகிறது. இந்த வசதிகள் எதுவும் டாடா பஞ்ச் காரில் வழங்கப்படுவது இல்லை.

nissan magnite facelift features

கேபின் விளக்குகள்: 2024 நிஸான் மேக்னைட்டில் 4 விதமான நிறங்களில் கேபின் விளக்குகளை பெறலாம். மேக்னைட்டின் விலையுயர்ந்த டெக்னா பிளஸ் வேரியண்ட்டில் மட்டுமே இது கிடைக்கிறது. ஆனால், பஞ்ச் காரில் எந்த வேரியண்ட்டிலும் இவ்வாறான வண்ண கேபின் விளக்குகள் வழங்கப்படுவது இல்லை.

nissan magnite facelift features

எல்இடி ஹெட்லைட்கள்: புதிய மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் காரின் டாப் வேரியண்ட்களில் மட்டும் புரோஜெக்டர் எல்இடி ஹெட்லைட்கள் வழங்கப் படுகின்றன. இது முந்தைய மேக்னைட் காரிலும் வழங்கப்பட்டு வந்த ஒன்றுதான். ஆனால், டாடா பஞ்ச் காரில் ஹலோஜன் டைப் ஹெட்லைட்கள் தான் கிடைக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கடந்த சில மாதங்களில் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராக டாடா பஞ்ச் முதலிடத்தை பிடித்தது. அத்தகைய மக்களின் ஃபேவரட் காரில் இல்லாத வசதிகள் நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் காரில் வழங்கப்படுகிறது என்பது ஆச்சிரியமான விஷயம் ஆகும். விலையிலும், மேக்னைட் கார் விலை குறைவானதாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 19, 2024, 21:36 [IST]
English summary
Nissan magnite facelift features that not include in tata punch check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X