இவ்ளோ கம்மியான விலையில் எஸ்யூவி காரா! டாடா, மாருதிக்கு சவால் விடும் நிஸான்! ஹூண்டாய்க்கும் செக் வைக்க போறாங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று நிஸான் மேக்னைட் (Nissan Magnite). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய நிஸான் நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடல், நடப்பு 2024ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செயல்திறனை பொறுத்தவரையில் தற்போதைய மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

Nissan Magnite

டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில் 5 ஸ்பீடு மேனுவல், ஏஎம்டி மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம். வசதிகளை பொறுத்தவரையில் தற்போதைய மாடலில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உள்ளிட்ட வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன.

இவை எல்லாம் தவிர, 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர், ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் உள்ளிட்ட வசதிகளும் நிஸான் மேக்னைட் காரின் தற்போதைய மாடலில் வழங்கப்பட்டு வரும் மிக முக்கியமான வசதிகளாக உள்ளன.

Nissan Magnite Interior Design

இந்த வசதிகள் எல்லாம் நிஸான் மேக்னைட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பல்வேறு புதிய வசதிகளையும் நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம். ஃபேஸ்லிஃப்ட் மாடல் மட்டுமே என்பதால், இன்ஜின் மற்றும் வசதிகளில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்கள் எல்லாம் இருக்காது.

ஆனால் டிசைனில் நிறைய மாற்றங்களை நாம் உறுதியாக எதிர்பார்க்க முடியும். இதன்படி புதிய அலாய் வீல்கள், புதிய டெயில்லைட்கள், முன் பகுதியில் புதிய ஸ்கிட் பிளேட், அப்டேட் செய்யப்பட்ட பம்பர்கள், ஆகிய அம்சங்கள் எல்லாம் நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் நிஸான் மேக்னைட் காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 11.27 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

பல்வேறு அப்டேட்கள் செய்யப்படும் காரணத்தால், நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை சற்று அதிகமாக இருக்கும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது. அனேகமாக ஆரம்ப விலை சுமார் 6.50 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) மற்றும் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) போன்ற கார்களுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 24, 2024, 23:23 [IST]
English summary
Nissan magnite facelift india launch soon full details here
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+