நாளை அறிமுகம்!.. நெக்ஸான், பிரெஸ்ஸாவிற்கு சவால் விட வருகிறது புதுப்பிக்கப்பட்ட மேக்னைட்..

இந்தியர்களின் எதிர்பார்ப்பை மிகப் பெரிய அளவில் தூண்டி வரும் கார் மாடல்களில் ஃபேஸ்லிஃப்ட் நிஸான் மேக்னைட் (Nissan Magnite Facelift)-ம் ஒன்றாகும். இந்த கார் மாடலே நாளைய தினம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. மேக்னைட் ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். புதுப்பித்தலின் கீழ் பல்வேறு மாற்றங்கள் இந்த கார் மாடலில் நிஸான் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக புதுப்பிக்கப்பட்ட மேக்னைட் கார் மாடலின் ஸ்பை படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

அந்தவகையில், அப்டேட் செய்யப்பட்ட ஹெட்லைட், பூமராங் வடிவிலான டிஆர்எல் ஆகியவை இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல மாற்றங்கள் இந்த காரில் மேற்கொள்ளப்பட்டு பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இதன் கிரில் அமைப்பில் எந்தவொரு மாற்றத்தையும் நிஸான் மேற்கொள்ளவில்லை.

Nissan magnite facelift launching tomorrow more details

பழைய அதே ஹெக்ஸோகோனல் வகை கிரில்லே பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதேவேளையில், க்ளாஸ் கருப்பு நிறத்தால் அந்த கிரில் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதை உறுதிப்படுத்தக் கூடிய ஸ்பை படமே தற்போது வெளியாகி இருக்கின்றது. இந்த காரை அழகுப்படுத்தும் விதமாக பூமராங் வகை லைட் மட்டுமல்ல குரோம் பூச்சுக் கொண்ட அணிகலனும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், முரட்டுத் தனமான டிசைன் கொண்ட ஸ்கிட் பிளேட்டும் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதேபோல், இந்த காரின் உட்பக்கமும் மிகுந்த அழகான தோற்றத்தைக் கொண்டதாக இருக்கும் என்பது உறுதியாகி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் டீசர் படம், இந்த காரின் உட்பக்கம் ஆரஞ்சு மற்றும் கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருப்பதை வெளிக்காட்டுகின்றது.

இதுமட்டுமில்லைங்க, இந்த காரின் இருக்கைகளிலும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதுதவிர, 9 அங்குல தொடுதிரை, ஆட்டோ ஏசி, ரியர் வெண்டுகளுக்கான ஏசி வெண்ட், வயர்லெஸ் சார்ஜர், டிரைவருக்கான பெரிய திரை, சிங்கிள் பேன் சன்ரூஃப் மற்றும் 6 ஏர்பேக்குகள் உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுமட்டுமில்லைங்க, இந்த காரில் 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களும் இடம் பெற்றிருக்கும் என கூறப்படுகின்றது. எஞ்சினை பொருத்த வரை இரண்டு விதமான ஆப்ஷன்கள் இந்த காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

1.0 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகிய ஆப்ஷன்களே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மோட்டார்களில் 5 ஸ்பீடு மேனுவல், 5 ஸ்பீடு ஏஎம்டி மற்றும் சிவிடி ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்களே வழங்கப்பட இருக்கின்றன.

இந்தியாவில் விற்பனையில் இருக்கும் விலை குறைவான எஸ்யூவி ரக கார் மாடல்களில் நிஸான் மேக்னைட்-ம் ஒன்றாகும். இந்த காருக்கு நல்ல டிமாண்ட் இந்தியர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே தற்போது அதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை நிஸான் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிஸான் நிறுவனத்தின் இந்த தயாரிப்பு ரெனால்ட் கைகர், டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கின்றது. இவற்றிற்கு வழங்கிக் கொண்டிருக்கும் போட்டியை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே தற்போது புதுப்பிக்கப்பட்ட மேக்னைட் கார் மாடலை நிஸான் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதுவும் பலவிதமான ஸ்பெஷல் எடிசன்களில் பின்னாளில் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 3, 2024, 19:53 [IST]
English summary
Nissan magnite facelift launching tomorrow here is more details
மேலும்... #nissan #Nissan Magnite Facelift #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+