1 லட்ச ரூபா கம்மி விலையில் நிஸான் மேக்னைட் காரை வாங்கணுமா! இப்பவே கேண்டீனுக்கு புறப்படுங்க..

நிஸான் (Nissan) நிறுவனத்தின் மிக சிறந்த கார் மாடலாக மேக்னைட் (Magnite) இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடலாகும். இந்த காருக்கே நிஸான் நிறுவனம் தற்போது சிறப்பு சலுகையை அறிவித்து இருக்கின்றது. ஃப்ரீடம் ஆஃபர் (Freedom Offer) எனும் பெயரிலேயே சிறப்பு சலுகையை நிஸான் அறிவித்து இருக்கின்றது. அதாவது, ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தை முன்னிட்டே நிஸான் நிறுவனம் மேக்னைட் காருக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. நிறுவனத்தின் அறிவிப்பால், ரூ. 1,00,900 தொடங்கி ரூ. 1,53,000 வரை குறைவான விலையில் இந்த காரை வாங்கிக் கொள்ள முடியும்.

ஆனால், இந்த சலுகை ராணுவ வீரர்கள் மற்றும் பிற துறையைச் சேர்ந்த பாதுகாப்பு வீரர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் ராணுவ கேன்டீன் மற்றும் கேந்திரியா போலீஸ் கல்யாண் பந்தர் வாயிலாக புக் செய்வோருக்கு மட்டுமே நிறுவனத்தின் சிறப்பு சலுகைப் பொருந்தும்.

Nissan magnite freedom offer

இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தை கூடுதலாக சிறப்பிக்கும் விதமாகவே இந்த சலுகையை நிஸான் அறிவித்து இருக்கின்றது. மேக்னைட் எக்ஸ்இ (Magnite XE), மேக்னைட் எக்ஸ்எல் (Magnite XL) மற்றும் மேக்னைட் எக்ஸ்வி (Magnite XV) ஆகிய வேரியண்டுகளுக்கே சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இன்றைய நிலவரப்படி ஓர் சாதாரண குடிமகன் நிஸான் மேக்னைட் கார் மாடலின் எக்ஸ்இ வேரியண்டை வாங்க வேண்டும் என்றால் அதற்கு எக்ஸ்-ஷோரூம் விலையாக மட்டுமே ரூ. 6 லட்சத்தைச் செலுத்த வேண்டும். அதேவேளையில், இதே தேர்வை ராணுவ கேன்டீன் வாயிலாக ஓர் வீரர் இப்போது வாங்கினால் ரூ. 5 லட்சத்திற்கே அவரால் வாங்கிவிட முடியும்.

இது ராணுவ கேன்டீன் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், எக்ஸ்ஷோரூமில் ரூ. 7.04 லட்சத்திற்கு கிடைக்கும் மேக்னைட் எக்ஸ்எல் தேர்வை, சிஎஸ்டி எக்ஸ்-ஷோரூமில் ரூ. 5,39,990-க்கும், ரூ. 7.82 லட்சத்திற்கு விற்கப்படும் மேக்னைட் எக்ஸ்வி வேரியண்டை ரூ. 6.29 லட்சத்திற்கும் ராணுவ கேன்டீன் வாயிலாக வாங்கிக் கொள்ள முடியும்.

இதேபோல், கேந்திரியா போலீஸ் கல்யாண் பந்தர் கேண்டீனுக்கு என்றும் தனி சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த கேண்டீனில் மேக்னைட் எக்ஸ்இ, மேக்னைட் எக்ஸ்எல், மேக்னைட் எக்ஸ்வி ஆகியவற்றுடன் சேர்த்து கூடுதலாக மேக்னைட் எக்ஸ்இ ஏஎம்டி (Magnite XE AMT) மற்றும் மேக்னைட் கெசா சிவிடி (Magnite GEZA CVT) ஆகிய வேரியண்டுகளுக்கும் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இங்கு வழக்கமான எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து ரூ. 34 ஆயிரம் தொடங்கி ரூ. 75 ஆயிரம் வரை குறைவான விலையில் மேக்னைட் காரை வாங்கிக் கொள்ள முடியும். உதாரணமாக சந்தையில் ரூ. 5.99 லட்ச ரூபாக்கு கிடைக்கும் மேக்னைட் எக்ஸ்இ வேரியண்டை கேந்திரியா போலீஸ் கல்யாண் பந்தர்-இல் ரூ. 5.65 லட்சத்திற்கே வாங்கிக்க முடியும்.

இந்த சிறப்பு சலுகையை ராணுவ வீரர்களுக்கு வழங்கியதன் வாயிலாக ஒட்டுமொத்த இந்தியர்களின் மனதிலும் நிஸான் இடம் பிடித்திருக்கின்றது. நிஸான் மேக்னைட் ஓர் சப் 4 மீட்டர் எஸ்யூவி ரக காராகும். இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மலிவு விலை கார் மாடல்களில் ஒன்றாகவும் இது காட்சியளிக்கின்றது. மேலும், இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் கார் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நிஸான் நிறுவனம் சமீபத்திலேயே எக்ஸ்-டிரையல் எனும் கார் மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கு முன்பு அது மேக்னைட் கார் மாடலை மட்டுமே விற்பனைக்கு வழங்கி வந்தது குறிப்பிடத்தகுந்தது. இதன் வரிசையிலேயே டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டி அளிக்கும் விதமாக சமீபத்தில் எக்ஸ்-டிரையலை அது விற்பனைக்குக் களமிறக்கியது.

More from DriveSpark

Article Published On: Sunday, August 11, 2024, 11:00 [IST]
English summary
Nissan magnite freedom offer big savings for defence and police
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+