இவ்ளோ பிரீமியம் அம்சங்கள் நிறைந்த கார் ரூ.9.84 லட்சத்துக்கா! நிஸான் களமிறக்கிய காரை வாங்க கூட்டம் அலை மோதபோது!

இந்தியாவில் மலிவு விலையில் கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் நிஸான் (Nissan)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் விலை குறைவான கார் மாடலாக மேக்னைட் (Magnite) காட்சியளிக்கின்றது. நிஸான் மேக்னைட் ஓர் சப்-4 மீட்டர் எஸ்யூவி (Sub-4 Meter SUV) ரக காராகும்.

இந்த கார் மாடலிலேயே கெசா சிவிடி எனும் சிறப்பு பதிப்பு (Magnite GEZA CVT Special Edition) நிஸான் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த சிறப்பு பதிப்பு ஆகும். இந்தியாவில் இந்த காருக்கு அறிமுக விலையாக ரூ. 9.84 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

Nissan magnite geza cvt interior

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஏற்கனவே மேக்னைட் கார் மாடலில் கூரோ ஸ்பெஷல் எடிசன் (Magnite Kuro Special Edition) இந்தியாவில் விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மேக்னைட் சிவிடி சிறப்பு பதிப்பு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

வழக்கமான மேக்னைட் கார் மாடலைக் காட்டிலும் அதிக கவர்ச்சிகரமான சிறப்பம்சங்கள் மற்றும் அலங்கார அணிகலன்களை இந்த கார் மாடல் பெற்று இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, டர்போ பெட்ரோல் மோட்டாருடன் சிவிடி கியர்பாக்ஸ் வசதி இந்த சிறப்பு பதிப்பில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Nissan magnite geza cvt

இதுதவிர, முன்னதாக கூறியதைப் போல இந்த காரின் உட்பக்கம் மிகவும் பிரீமியமான ஃபீலுக்கு அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், டச் வசதிக் கொண்ட 9 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஒயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்டதும்கூட.

இத்துடன், ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், பின் பக்கத்தை பார்க்க உதவும் கேமிரா, ஆம்பியன்ட லைட், இரண்டு விதமான வண்ணத்தால் அலங்கரிக்கப்பட்ட உட்பக்கம் என பல சிறப்புகளை மேக்னைட் கெசா சிறப்பு பதிப்பு பெற்றிருக்கின்றது. காருக்குள் வழங்கப்பட்டு இருக்கும் இருக்கையும் அதிக அழகான வண்ணத்திற்கு மாற்றப்பட்டு இருக்கின்றது.

மேலும் கெசா பதிப்பு என்கிற பேட்ஜும் காரில் ஆங்காங்கே பார்க்க முடிகின்றது. இத்தகைய சிறப்புகளைத் தாங்கிய காராகவே நிஸான் மேக்னைட் கெசா பதிப்பு இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இதில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 152 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. முன்னதாக கூறியதைப் போல சிவிடி கியர்பாக்ஸே கெசா பதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மேக்னைட் எஸ்யூவி கார் மாடலுக்கு கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் ஓர் முயற்சியாகவே கெசா பதிப்பு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இதன் வருகை ஏற்கனவே சப்-4 மீட்டர் எஸ்யூவி பிரிவில் விற்பனையில் இருக்கும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட் மற்றும் டாடா நெக்ஸான் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியை இருமடங்காக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

நிஸான் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்னரே இதே மேக்னைட் கார் மாடலில் ஈசி ஷிஃப்ட் (EZ Shift ) எனும் தேர்வை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இப்போதைய நிலவரப்படி நிஸான் மேக்னைட் ரூ. 5.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சப்-4 மீட்டர் எஸ்யூவி பிரிவிற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே இந்த பிரிவை மையப்படுத்தி வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் தயாரிப்புகளை இந்தியாவில் களமிறக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே தன்னுடைய மலிவு விலை கார் மாடலில் நிஸான் சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் அறிமுகம் செய்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 23, 2024, 21:51 [IST]
English summary
Nissan magnite geza cvt special edition launched in india at inr 9 84 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+