பழசுக்கும், புதுசுக்கும் இடையில் இவ்ளோ மாற்றங்கள் இருக்கா!.. பூத கண்ணாடி வச்சு பாத்த மாதிரி சொல்லியிருக்கோம்!

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான நிஸான் (Nissan) பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட மேக்னைட் (Magnite Facelift) கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களில் மேக்னைட்-ம் ஒன்றாகும். இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இதற்கு தற்போது கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே தற்போது ஃபேஸ்லிஃப்ட் மேக்னைட் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு உள்ளது. முந்தைய வெர்ஷனைக் காட்டிலும் அதிக கவர்ச்சியானதாக இந்த கார் மாடல் தயார் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

அப்படி என்ன மாற்றங்களை எல்லாம் ஃபேஸ்லிஃப்ட் மேக்னைட் கார் மாடலில் நிஸான் செய்திருக்கின்றது என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் பழைய மேக்னைட் மற்றும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் புதிய மேக்னைட்டுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Nissan magnite old vs new comparison

வெளிப்புறத்தில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்கள் பற்றிய விபரங்கள்: புதிய மேக்னைட் கார் மாடலில் சற்று பெரிய கிரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை சுற்றிலும் குரோம் அணிகலன் இடம் பெற்றிருக்கின்றது. இதேபோல், எல்இடி ஹெட்லைட்டின் லுக்கும் மாற்றப்பட்டு இருக்கின்றது. இது புதிய மேக்னைட்டின் முகப்பு பகுதிக்கு ப்ரெஷ்ஷான தோற்றத்தை வழங்கும் வகையில் இருக்கின்றது.

அதேவேளையில், புதிய மற்றும் பழைய மாடல்களுக்கு இடையே இருக்கும் ஒற்றுமையாக சில்வர் ஸ்கிட் பிளேட் இடம் பெற்றிருப்பது இருக்கின்றது. ஆனால், புதியதில் சற்று அடர்த்தியானதாக இருப்பது கவனிக்கத்தகுந்தது. இத்துடன், 'பூமராங்' வடிவ டிஆர்எல்கள், மிகவும் முரட்டுத் தனமான பம்பர் ஆகியவற்றையும் புதிய மேக்னைட் தாங்கியிருக்கின்றது.

Nissan magnite old vs new interior comparison

இதேபோல், புதிய டிசைன் கொண்ட 16 அங்குல அலாய் வீலே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், பின் பக்கத்தில் புதிய எல்இடி டெயில்லைட், 'எச்' வடிவ அணிகலன் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை அனைத்தும் சேர்ந்தே மேக்னைட் புதிய லுக் கொண்டதாக மாற்றி இருக்கின்றது.

புதிய மேக்னைட் காரின் உட்பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்களின் விபரங்கள்: இந்த காரின் டேஷ்போர்டில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆகையால், அதன் லுக் அப்படியே இருக்கின்றது. அதேவேளையில், புதிதாக இந்த காரை கருப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தால் நிஸான் அலங்கரித்திருக்கின்றது. இதனால், புதிய மேக்னைட் காரின் உள்பக்கம் கூடுதல் பிரீமியம் லுக்கைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது.

Nissan magnite old vs new rear comparison

இத்துடன், சாஃப்ட் டச் மெட்டீரியல்களும் மேக்னைட்டில் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், ஸ்டியரிங் வீலில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 3 ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீலே இதில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதேவேளையில், இது மினு மினுப்பான கருப்பு நிறத்தாலேயே அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த மாற்றங்களுக்கே கேபினுக்கு பிரீமியம் ஃபீலை வழங்கும் வகையில் இருக்கின்றது.

புதிய வண்ணங்களுடன் சேர்த்து புதிய 4 வண்ண ஆம்பியன்ட் லைட், ஆட்டோ ஐஆர்விஎம் ஆகியவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதேவேளையில், 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, 7 அங்குல டிரைவருக்கான டிஜிட்டல் திரை மற்றும் ஏர் ப்யூரிஃபையர் உள்ளிட்டவை பழைய வெர்ஷன் மேக்னைட்டில் இருந்து அப்படியே புதிய வெர்ஷன் மேக்னைட்டிற்கு கடத்தப்பட்டு இருக்கின்றது.

பாதுகாப்பு அம்சங்களிலும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. அதேவேளையில், இதில் ஏற்கனவே வழங்கப்படும் பாதுகாப்பு அம்சங்களே போதுமானதாக உள்ளது. அந்தவகையில், 6 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் போன்ற அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

எஞ்சினில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றதா? நிஸான் மேக்னைட் எஞ்சினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முந்தைய மேக்னைட்டில் வழங்கப்பட்ட அதே எஞ்சினே இதிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், 1.0 லிட்டர் நேச்சுரல்ல அஸ்பைரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் ஆப்ஷன்களே புதிய மேக்னைட் கார் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

முதல் மோட்டார் 72 பிஎஸ் மற்றும் 96 என்எம் டார்க்கையும், இரண்டாவது மோட்டார் அதிகபட்சமாக 100 பிஎஸ் மற்றும் 160 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில் மேனுவல், ஈசி ஷிஃப்ட், சிவிடி கியர்பாக்ஸ் ஆகிய டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றது.

விலை வித்தியாசம்: முன்பு விற்பனையில் இருந்த மேக்னைட்டைப் போலவே தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் ஃபேஸ்லிஃப்ட் மேக்னைட் கார் மாடலும் விலை குறைவானதாகவே இருக்கின்றது. ரூ. 5.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலேயே அது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இதே ஆரம்ப விலையிலேயே முந்தைய வெர்ஷன் மேக்னைட்டும் விற்பனைக்குக் கிடைத்தது என்பது கவனிக்கத்தகுந்தது.

ஆனால், இந்த ஆரம்ப விலையானது அறிமுக விலை மட்டுமே ஆகும். அதாவது, முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களால் மட்டுமே ரூ. 5.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் வாங்கிக் கொள்ள முடியும். அதற்கு பின்னர் அக்காரின் விலை உயர்த்தப்படும் என தெரிகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நிஸான் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக மேக்னைட் காட்சியளிக்கின்றது. இந்த எஸ்யூவி காரின் பக்கம் வாடிக்கையாளர்களின் கவனத்தை கூடுதலாக திருப்பும் பொருட்டே தற்போது புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. இதற்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 5, 2024, 5:00 [IST]
English summary
Nissan magnite old vs new key changes in 2024 facelift
மேலும்... #nissan #Nissan Magnite Facelift #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X