உடனே திருப்பி கொண்டு வாங்க! பிரபல நிறுவனம் திடீர் அறிவிப்பு! விலை கம்மினு வாங்கீட்டு புலம்பும் உரிமையாளர்கள்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று நிஸான் மேக்னைட் (Nissan Magnite). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் நிஸான் மேக்னைட் காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 11.27 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். XE, XL, XV மற்றும் XV Premium என மொத்தம் 4 வேரியண்ட்களில் (Variants) நிஸான் மேக்னைட் கார் கிடைக்கிறது. கலர் ஆப்ஷன்களை (Colour Options) பொறுத்தவரையில், 5 மோனோ டோன் மற்றும் 4 ட்யூயல் டோன் கலர் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. செயல்திறனை பொறுத்தவரையில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) கொடுக்கப்படுகின்றன.

Nissan Magnite

டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல், ஏஎம்டி மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) வழங்கப்பட்டுள்ளன. இது இந்திய சந்தையில் கிடைக்க கூடிய விலை குறைவான எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாகும். மிகவும் சவால் நிறைந்த சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில், பல்வேறு கார்களுடன் நிஸான் மேக்னைட் போட்டியிட்டு வருகிறது.

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet) மற்றும் ரெனால்ட் கைகர் (Renault Kiger) போன்றவை நிஸான் மேக்னைட் காரின் மிகவும் முக்கியமான போட்டி மாடல்கள் ஆகும்.

Nissan Magnite Interior Design

இந்த சூழலில், நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு தற்போது 'ரீகால்' (Recall) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விற்பனை செய்யப்பட்ட கார்களில் ஏதேனும் பிரச்னை இருந்தால், வாடிக்கையாளர்களிடம் இருந்து அவற்றை திரும்ப பெற்று, உற்பத்தி நிறுவனங்கள் சரி செய்து மீண்டும் வழங்கும். அதுதான் 'ரீகால்' என அழைக்கப்படுகிறது. இதன்படி நிஸான் மேக்னைட் காரின், முன் பக்க டோர் ஹேண்டில் சென்சார்களில் (Front Door Handle Sensor) பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிரச்னையை சரி செய்து தருவதற்காகவே, மேக்னைட் காருக்கு நிஸான் நிறுவனம் தற்போது ரீகால் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து, 2023ம் ஆண்டு டிசம்பர் வரை உற்பத்தி செய்யப்பட்ட நிஸான் மேக்னைட் காரின் XE மற்றும் XL வேரியண்ட்களில்தான், முன் பக்க டோர் ஹேண்டில் சென்சார் பிரச்னை கண்டறியப்பட்டுள்ளது. நிஸான் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டர்களில், இந்த பிரச்னை இலவசமாகவே சரி செய்து தரப்படும்.

ஆனால் இந்த பிரச்னை, கார்களை இயக்குவதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என நிஸான் நிறுவனம் கூறியுள்ளது. வாடிக்கையாளர்கள் வழக்கம் போல கார்களை இயக்கலாம். நேரம் கிடைக்கும்போது, நிஸான் சர்வீஸ் சென்டருக்கு சென்று பிரச்னையை சரி செய்து கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, நிஸான் சர்வீஸ் சென்டர்களை அணுகலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கார்களை வழக்கம் போல தொடர்ந்து பயன்படுத்தலாம் என நிஸான் நிறுவனம் கூறியுள்ளதால், வாடிக்கையாளர்கள் அச்சப்பட வேண்டியதில்லை. எனினும் கூடிய விரைவில் பிரச்னையை சரி செய்து கொள்வது, அசௌகரியங்கள் ஏற்படுவதை தடுக்கும். நிஸான் நிறுவனம் வரும் காலங்களில் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 16, 2024, 18:50 [IST]
English summary
Nissan magnite recall all you need to know
மேலும்... #நிஸான் #nissan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+