புளிப்பு மிட்டாய் கணக்கா விற்பனையாகும் நிஸான் மேக்னைட் கார்.. ஆளுக்கு ஒன்னுனு வாங்கிட்டு இருக்காங்களா!!
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் விலை குறைவான கார் மாடல்களில் நிஸான் மேக்னைட் (Nissan Magnite)-டும் ஒன்றாகும். நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக இது விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த கார் சமீபத்தில் உற்பத்தியில் சாதனை மைல் கல்லை எட்டிய நிலையில், தற்போது அது விற்பனையிலும் வரலாற்று சிற்பபுமிக்கு நிகழ்வை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அது விற்பனையில் ஒரு லட்சன் யூனிட்டை எட்டி இருக்கின்றது. இந்திய பட்ஜெட் கார் விரும்பிகளைக் குறி வைக்கும் விதமாக இந்த கார் இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமாக ரூ. 4.99 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ஆனால், இந்திய ஆட்டோமொபைல்துறை தொடர்ச்சியாக விலை உயர்வை சந்தித்ததன் விளைவாக தற்போது இந்த காரின் விலை ரூ. 6 லட்சத்தை எட்டி இருக்கின்றது. இருப்பினும் இதன் விற்பனையில் தொய்வு ஏற்படவில்லை. இதன் விளைவாகவே நிஸான் மேக்னைட் எஸ்யூவி-யால் ஒரு லட்சம் யூனிட் விற்பனை எனும் சாதனை மைல் கல்லை எட்ட முடிந்திருக்கின்றது.
இது ஓர் சப்-4 மீட்டர் எஸ்யூவி ரக காராகும். இந்தியாவில் இந்த பிரிவு எஸ்யூவி ரக கார்களுக்கு மிக அமோகமான வரவேற்புக்கி கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனாலேயே இப்பிரிவை மையப்படுத்தி வாகன உற்பத்தி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு கார்களை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன.
அந்தவகையில், இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் பிரிவில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட் மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கே மிகப் பெரிய போட்டியாளனாக விங்கிக் கொண்டிருக்கின்றது, மேக்னைட்.
இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைப்பதற்கு முக்கிய காரணமாக அதன் மலிவு விலை ஓர் காரணமாக இருந்தாலும், அதில் வழங்கப்பட்டு இருக்கும் சிறப்பம்சங்கள் மற்றுமொரு முக்கிய காரணமாக இருக்கின்றது. ஆமாங்க, நிஸான் மேக்னைட் ஓர் அதி நவீன அம்சங்கள் தாங்கி எஸ்யூவி ரக காராகும்.
எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர மின் விளக்குகள், 8 அங்குல தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, கார் இணைப்பு தொழில்நுட்பம் என எக்கசக்க அம்சங்களை இந்த காரில் நம்மால் காண முடிகின்றது.
இதுதவிர, ஏர் பியூரிஃபயர், ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் செட்-அப்பும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் பாதுகாப்பான பயணத்திற்காக இரட்டை ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் லான்ச் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
நிஸான் நிறுவனம் மேக்னைட் காரில் சமீபத்திலேயே ஈசி (இஇசட்) ஷிஃப்ட் எனும் தேர்வை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இப்போதைய நிலவரப்படி நிஸான் மேக்னைட் ரூ. 5.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த கார் மாடலிலேயே கூரோ ஸ்பெஷல் எடிசன், கெஸா ஸ்பெஷல் எடிசன் மற்றும் ரெட் எடிசன் எனும் மூன்று சிறப்பு பதிப்புகளையும் இந்த நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு ஓர் சான்றாகவே நிஸான் மேக்னைட் காரின் விற்பனை புள்ளி விபரம் தற்போது வெளியாகி இருக்கின்றது. விரைவில் இந்த கார் இரண்டு மற்றும் மூன்று லட்சம் என அடுத்தடுத்த இலக்கை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








