அரசியல்வாதிகளே ஃபார்ச்சூனர் காரை மறக்க தயாரா இருங்க!.. பெரிய உருவம் கொண்ட நிஸான் பேட்ரோல் இந்தியா வர போகுதாம்!

இந்திய அரசியல்வாதிகள் மத்தியில் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதன் பிரமாண்ட தோற்றம் மற்றும் ஆஃப்-ரோட் (Off-Road)-ஐ சமாளிக்கும் திறன் உள்ளிட்ட காரணங்களினாலேயே இந்திய அரசியல்வாதிகளின் பிரியமான கார் மாடலாக பார்ச்சூனர் காட்சியளிக்கின்றது. இந்த நிலையிலேயே ஃபார்ச்சூனர் காருக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு பிரமாண்ட தோற்றம் மற்றும் பலதரப்பட்ட சிறப்பம்சங்களைத் தாங்கிய ஓர் கார் இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கான சூழல் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிஸான் பேட்ரோல் எஸ்யூவி (Nissan Patrol SUV) கார் மாடல்தான் அது ஆகும். இந்தியாவில் நிஸான் நிறுவனம் இப்போதைய நிலவரப்படி மேக்னைட் மற்றும் எக்ஸ்-டிரையல் (X-Trail) ஆகிய இரண்டு கார் மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதில் நிறுவனத்தின் சமீபத்திய சேர்ப்பாக எக்ஸ்-டிரையல் இருக்கின்றது.

Nissan plans to introduce the patrol suv in india

இது ஓர் மூன்று வரிசை இருக்கை அமைப்பைக் கொண்ட பிரீமியம் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த காரை நிஸான் நிறுவனம் சிபியூ வாயிலாகவே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே நிஸான் நிறுவனம் மற்றுமொரு காராக பேட்ரோல் எஸ்யூவி-யையும் இந்தியாவில் சிபியூ வாயிலாக விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற பிரமாண்ட தோற்றம் கொண்ட கார்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும். அதேவேளையில், இது ஃபார்ச்சூனரைக் காட்டிலும் பெரிய தோற்றத்தைக் கொண்டிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. 2026 ஆம் ஆண்டிலேயே இந்த கார் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

Nissan plans to introduce the patrol front view

இன்னும் இது உறுதிப்படுத்தப்படவில்லை. விரைவில் பேட்ரோலின் வருகையை உறுதிப்படுத்தக் கூடிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிஸான் நிறுவனம் சமீபத்திலேயே இதன் புதிய தலைமுறையை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியது. இதையே தற்போது நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் நிஸான் களமிறங்கி உள்ளது.

உருவத்திற்கு ஏற்ப சிறப்பம்சங்களைத் தாங்கி இருப்பதிலும் நிஸான் பேட்ரோல் மிக தாராளமான மனசைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில் காரில் இடம் பெற்றிருக்கும் அனைத்தும் உயர் வகை அம்சங்களாகக் காட்சியளிக்கின்றன. இரண்டு 12.8 அங்குல திரை பயணிகளுக்காகவும், 14.3 அங்குல தொடுதிரை சிஸ்டம், 14.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் ஹெட்ஸ்-அப் திரை உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

தொடர்ந்து, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, 12 ஸ்பீக்கர்களைக் கொண்டி க்ளிப்ஸ் பிரீமியம் சவுண்டு சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங் கருவி, அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட முன் பக்க இருக்கைகள் மற்றும் யுஎஸ்பி சி டைப் சார்ஜிங் போன்ற அம்சங்களையும் இந்த காரில் நிஸான் வழங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

உலக சந்தையில் இந்த கார் இரண்டு விதமான எஞ்சின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 3.8 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மற்றும் 3.5 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் பெட்ரோல் ஆகியவையே அவை ஆகும். இதில் எந்த மோட்டார் ஆப்ஷன் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்பது பற்றிய விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் இதுபற்றிய விபரங்களும் வெளியகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிரமாண்ட தோற்றம் கொண்ட எஸ்யூவி ரக கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மிகவும் கவர்ச்சியான, அதேவேளையில், கட்டுமஸ்தான தோற்றம் கொண்ட காரான பேட்ரோல் காரை விற்பனைக்குக் களமிறக்கும் பணியில் நிஸான் களமிறங்கி இருக்கின்றது. இந்த காருக்கு இந்திய அரசியல்வாதிகள் மற்றும் பணக்காரர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 26, 2024, 19:00 [IST]
English summary
Nissan plans to introduce the patrol suv in india by 2026 as a cbu model
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+