ஒன் மேன் ஆர்மி.. நிஸான் நிறுவனம் உயிர் வாழுறதே இந்த கார் மாடலாலதான்.. இதோட விலை இவ்ளோ கம்மியா!

நிஸான் (Nissan) நிறுவனம் கார் விற்பனையில் ஓர் புதிய சாதனையைப் படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடலாக மேக்னைட் (Magnite) உள்ளது. இதுவே 1.5 லட்சம் யூனிட் வரை விற்பனையாகி இருப்பதாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்டு மாத நிலவரப்படியான தகவல் இதுவாகும். இந்த காரை டிசம்பர் மாதம் 2020 ஆம் ஆண்டிலேயே முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது, நிஸான். மிகவும் விலை குறைவான கார் மாடல்களில் ஒன்றாகவே இது களமிறக்கப்பட்டது.

இப்போதைய நிலவரப்படி 6 லட்சம் ரூபாய் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மாத விற்பனையிலும் இந்த நிறுவனம் புதிய ரெக்கார்டை தற்போது பதிவு செய்திருக்கின்றது. 10,264 யூனிட்டுகள் நிஸான் கார்களே சென்ற மாதத்தில் விற்பனையாகி இருக்கின்றது.

Nissan records highest sales

நடப்பு நிதியாண்டு 25-லேயே இதுதான் மிக அதிக விற்பனை எண்ணிக்கை ஆகும். இதில் உள் நாட்டில் விற்பனையான எண்ணிக்கை என்பது சற்றே குறைவுதான் என்பது கவனிக்கத்தகுந்தது. 2,263 யூனிட்டுகள் மட்டுமே ஆகஸ்டு மாதத்தில் உள்நாட்டில் விற்பனையானவை ஆகும். மீதமுள்ள யூனிட்டுகள் (8,361) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும்.

இது ஆண்டு -டூ- ஆண்டுடன் ஒப்பிடுகையில் 336 சதவீதம் அதிக விற்பனை எண்ணிக்கை ஆகும். இதேபோல், உள் நாட்டில் விற்பனையாகி இருப்பது 0.2 சதவீதம் அதிகம் ஆகும். நிஸான் நிறுவனத்தின் சிங்கிள் மேன் ஆர்மியாக மேக்னைட் இருப்பதை இந்த புள்ளி விபரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

பிராண்டின்கீழும் இந்த கார் மாடல் மட்டுமே வெகுநாட்களாக விற்பனையில் இருந்தது. இந்த நிலையிலேயே சமீபத்தில் எக்ஸ்-டிரையல் (X-Trail) எனும் மாடலை நிஸான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த காரை சிபியூ வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது நிஸான். இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும்.

இதற்கு ரூ. 49.92 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த கார் மாடலின் வருகை இந்தியாவில் பல்வேறு கார் மாடல்களுக்கு போட்டியாக அமைந்திருக்கின்றது. அந்தவகையில், டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner), ஜீப் மெரிடியன் (Jeep Meridian), எம்ஜி குளோஸ்டர் (MG Gloster) மற்றும் ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq) ஆகியவற்றிற்கு நிஸான் எக்ஸ்-டிரையல் எஸ்யூவி-யின் வருகை போட்டியாக அமைந்திருக்கின்றது.

எஞ்சினைப் பொருத்தவரை ஒரே ஒரு ஆப்ஷன் மட்டுமே இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது. 1.5 லிட்டர், 3 சிலிண்டர், டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்சினே அதுவாகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 163 எச்பி பவரையும், 300 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

பேடில் ஷிஃப்டர் வசதிக் கொண்ட சிவிடி கியர்பாக்ஸே இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றது. சிறப்பம்சங்கள் விஷயத்தில் இந்த கார் மிக சிறப்பானதாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதியுடன் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

இதுதவிர, 12.3அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலும் எக்ஸ்-டிரையலில் வழங்கப்பட்டு இருக்கும். கூடுதல் சிறப்பம்சங்களாக, ஒயர்லெஸ் சார்ஜல், 360டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா மற்றும் டூயல் பேன் சன்ரூஃப் உள்ளிட்டவற்றையும் இந்த கார் தன்னுள் தாங்கியிருக்கும். இதுபோன்று இன்னும் பல்வேறு பிரீமியம் அம்சங்களை இந்த காரில் காண முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நிஸான் நிறுவனம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவுச் செய்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாகவே மாத விற்பனை மற்றும் 1.5 லட்சம் யூனிட் விற்பனை என்கிற சாதனையை அது பதிவு செய்திருக்கின்றது. வரும் நாட்களிலும் இந்த நிறுவனம் விற்பனையில் புதிய சாதனைகளைப் படைக்கும் என தெரிகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 3, 2024, 12:09 [IST]
English summary
Nissan records highest fy25 monthly sales with 10624 units in august
மேலும்... #nissan #nissan magnite #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+