டஸ்டர் காருக்காக தான் வெயிட்டிங்! ரெனால்ட் இப்ப பம்முறதே பெருசா பாய்வதற்கு தான்!

கடந்த ஜனவரி மாதம் ரெனால்ட் மற்றும் நிஸான் ஆகிய வாகனங்களை தயாரிக்கும் தயாரிப்பு ஆலையில் மொத்தம் 1826 கார்கள் தயாரித்து விற்பனைக்கு வந்த நிலையில் தற்போது ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் எட்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்த விற்பனை அறிக்கை மற்றும் விபரங்கள் குறித்த தகவல்களை காணலாம் வாருங்கள்.

கடந்த ஜனவரி மாதம் ரெனால்ட் மற்றும் நிஸான் ஆகிய நிறுவனங்களுக்கான கார்களை தயாரிக்கும் தயாரிப்பாளரின் விற்பனை மற்றும் தயாரிப்பு விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் முழுவதும் அந்நிறுவனம் மொத்தம் 3826 வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு அனுப்பியுள்ளது. இது கடந்த 2023-ம் ஆண்டு விற்பனையான 3008 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 27.2% அதிகமாகும்.

nissan renault sales report jan 2024

இதே விற்பனையை மாத விற்பனை வளர்ச்சியோடு ஒப்பிடும்போது கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெறும் 1988 வாகனங்கள் தான் விற்பனையாகி இருந்தது. மாத வளர்ச்சியில் 92.5% விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. தற்போது இந்தியா முழுவதும் விற்பனையாகும் காரை ஒப்பிடும்போது ரெனால்ட் நிறுவனம் ஒரு சதவீத மார்க்கெட்டை வைத்திருந்தது. கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 0.1% ஆக இருந்தது தற்போது 0.9 சதவீதமாக மாறி உள்ளது.

இந்தியாவில் 11-வது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் ஆண்டு விற்பனையில் 2.1சதவீத வளர்ச்சியையும் மாத விற்பனையில் 33.2% வளர்ச்சியையும் பெற்றுள்ளது. கடந்த மாதம் மொத்தம் 2863 கார்கள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2803 காராக இருந்தது. இதுவே 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனை 2050 காராக இருந்தது. நிஸான் நிறுவனம் தற்போது மார்க்கெட்டில் 0.7சதவீத மார்க்கெட் பங்கை வைத்துள்ளது.

nissan renault sales report jan 2024

ரெனால்ட் மற்றும் நிஸான் ஆகிய நிறுவனங்களிடம் குறைவான எண்ணிக்கையிலேயே வாகனங்கள் உள்ளன. ரெனால்ட் நிறுவனத்திடம் ட்ரைபர், கைகர், க்விட் ஆகிய கார்கள் உள்ளன. இதுவே நிஸான் நிறுவனத்திடம் மேக்னைட் என்ற ஒரே ஒரு கார் மட்டுமே விற்பனையில் உள்ளது. இதில் ரெனால்ட் மற்றும் நிஸான் மேக்னெட் ஆகிய கார்கள் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் உள்ள கார்கள் செக்மெண்டில் சிறப்பான விற்பனையை பெற்று வருகிறது.

இந்நிறுவனத்தை பொறுத்தவரை டிரைபர் கார் கடந்த ஜனவரி மாதம் 2220 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. க்விட் கார் 886 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. கைகர் கார் 750 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. இவை எல்லாம் மொத்தமாக சேர்த்து 3826 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதில் கைகர் கார் மட்டுமே விற்பனையில் 34.9 % வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மற்ற இரண்டு கார்களும் நல்ல விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளன.

nissan renault sales report jan 2024

நிஸான் நிறுவனத்தை பொருத்தவரை மேக்னைட் என்ற ஒரே கார் தான் இருக்கிறது என்பதால் ஒட்டுமொத்த விற்பனையும் அந்த கார் மட்டும் தான் மொத்தம் 863 கார்கள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாத விற்பனை ஒப்பிடும்போது 2.14 சதவீத வளர்ச்சியும் கடத்த டிசம்பர் மாத விற்பனை ஒப்பிடும்போது 33.16 சதவீதம் வளர்ச்சியும் பெற்றுள்ளது.

நிஸான் நிறுவனம் தனது பிராண்டில் 5 புதிய மாடல் கார்களை களம் இறக்க முடிவு செய்துள்ளது. வெவ்வேறு செக்மென்ட்களில் இந்த கார் களமிறங்க உள்ளன. முக்கியமாக எம்பிவி செக்மெண்டில் ஒரு காரும்ங இரண்டு எஸ்யூவி காரும் ,ஒரு என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் காரும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு எஸ்யூவி கார் டஸ்டர் காரை அடிப்படையாகக் கொண்ட காராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிஸான் மற்றும் ரெனால்ட் ஆகிய இரு நிறுவனங்களும் தலா ஒரு எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் களம் இறக்க முடிவு செய்துள்ளன. இதற்காக சிஎம்எப்-ஏஇபி என்ற பிளாட்பார்மை உருவாக்கியுள்ளது. இந்த பிளாட்பார்மில் தான் இந்த இரு நிறுவனங்களின் கார்களும் விற்பனைக்கு வர உள்ளன. இந்த கார் ஹிட்டானால் நிச்சயம் நிஸான் மற்றும் ரெனால்ட் நிறுவனத்திற்கு மிகப்பெரிய விற்பனை வளர்ச்சி ஏற்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரெனால்ட் மற்றும் நிஸான் ஆகிய நிறுவனங்கள் வந்தது முதல் தொடர்ந்து சிறப்பான விற்பனையில் இருந்து வருகிறது. ரெனால்ட் நிறுவனம் மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்ற நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் டஸ்டர் கார்காக மக்கள் நீண்ட ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். இது தற்போது சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகமாகியுள்ள நிலையில் இந்தியாவிலும் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 17, 2024, 7:00 [IST]
English summary
Nissan renault sales report jan 2024 magnite triber kiger kwid
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X