தமிழக தயாரிப்புதான் வேணும்னு அடம்பிடிக்கும் ஆப்பிரிக்கர்கள்! 2,700 கார்களை கப்பல்ல ஏத்தி அனுப்பி வச்சுட்டாங்க!
நிஸான் (Nissan) நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் மேக்னைட் (Magnite)-ம் ஒன்றாகும். இது ஓர் விலை மலிவான எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்தியாவின் சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவையே இந்த கார் மாடல் அலங்கரித்து வருகின்றது. இதன் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) வெர்ஷனையே மிக சமீபத்தில் நிஸான் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து, தற்போது ஃபேஸ்லிஃப்ட மேக்னைட் கார் மாடலை உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் பணியில் நிஸான் நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது.
இப்போது தெற்கு ஆப்பிரிக்கா நாட்டிற்கே இந்த கார் மாடல் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றது. இந்தியாவில் கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே உலக நாடுகளிலும் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே தன்னுடைய மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு நிஸான் தன்னுடைய ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை உலக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணியில் களமிறங்கி உள்ளது.

முதல் கட்டமாக 2,700 யூனிட்டுகள் அப்டேட் செய்யப்பட்ட மேக்னைட் கார் மாடல்கள் இந்தியாவில் இருந்து தெற்கு ஆப்பிரிக்கா சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. நிஸான் நிறுவனம் இந்த காரின் உற்பத்தியை தன்னுடைய சென்னை ஆலையில் வைத்தே மேற்கொண்டு வருகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
இங்கிருந்தே இந்தியாவிற்கும் உலக நாடுகள் சிலவற்றிற்கும் மேக்னைட் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. இதுவரை உலக அளவில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான மேக்னைட் காரின் யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த காரை வலது பக்க டிரைவிங் காராக மட்டுமல்லாமல் இடது பக்க டிரைவிங் வசதிக் கொண்ட காராகவும் நிஸான் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்தியாவில் இந்த கார் ரூ. 5.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் அதிகபட்ச விலை ரூ. 11.66 லட்சம் ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். தெற்கு ஆப்பிரிக்காவில் இந்த கார் மாடல் இந்திய மதிப்பில் ரூ. 11.59 லட்சத்திற்கும் அதிகமான ஆரம்ப விலையில் விற்கப்படுகின்றது.
வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு மிகவும் அழகான வாகனமாகவும், அதிக அம்சங்கள் நிறைந்த வாகனமாகவும் நிஸான் மேக்னைட் மாற்றப்பட்டு இருக்கின்றது. மிகவும் துடிப்பான உட்பக்கத்தை அது கொண்டிருக்கின்றது. பன்முக நிறங்கள் கொண்ட ஆம்பியன்ட் லைட், பிரீமியம் லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள், பெரிய பூட் ஸ்பேஸ், 10 லிட்டர் அளவுள்ள கூல்டு குளோவ் பாக்ஸ் உள்ளிட்ட அம்சங்களே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, பிஎம் 2.5 ஏர் ஃபில்டர், உயர் அழுத்தம் திறன் கொண்ட ஸ்டீல் ஃப்ரேம், 6 ஏர் பேக்குகள், மும்முனை பாயிண்டுகள் கொண்ட சீட் பெல்ட், சீட் பெல்ட் ரிமைண்டர், சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கைகள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஆட்டோ டிம்மிங் வசதிக் கொண்ட ஐஆர்விஎம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் போன் பாதுகாப்பு அம்சங்களையும் இந்த காரில் நிஸான் வழங்கி உள்ளது.
இதுபோன்று இன்னும் பல பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய அதிக பாதுகாப்பு திறன்மிக்க கார் மாடலையே உலக சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது நிஸான் நிறுவனம். இது அதிக சிறப்புகள் மற்றும் விலைக் குறைவானது என்பதாலேயே நல்ல வரவேற்பு அதற்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் விலை குறைவான கார் மாடல்களில் மேக்னைட்-ம் ஒன்றாகும். இந்த கார் உலக அளவில் 65-க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்தியாவை போல அந்த நாடுகளிலும் கணிசமான அளவு நல்ல வரவேற்பே மேக்னைட்-க்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








