ஆம்னியோட புது வெர்ஷனா! இந்த வாகனம் ஒன்னு போதும் வீடு-வாசல்னு எதுவுமே தேவைப்படாது! வீடு போன்ற வாகனம் வெளியீடு!

நம்மில் பலருக்கு பரீட்சையமான ஓர் வாகனமே மாருதி ஆம்னி (Maruti Omni) ஆகும். இந்த வாகனத்திற்கு மாடர்ன் லுக் வழங்கப்பட்டதைப் போல் இருக்கின்றது நிஸான் (Nissan) நிறுவனம் சமீபத்தில் தயாரித்த வாகனம் ஒன்று. நிஸான் கேரவன்-இன் 'மை ரூம்' (Nissan Caravan My Room) பதிப்பே அதுவாகும். ஆமாங்க, இது ஓர் கேரவன் வகை வாகனம் ஆகும். இதையே ஜப்பானில் வைத்து நிஸான் வெளியீடு செய்திருக்கின்றது. இது விற்பனைக்கு வரும் போது அர்வேன் (Urvan) அல்லது என்வி350 (NV350) என்கிற ஏதேனும் ஓர் பெயரிலேயே விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது.

மேலும், இந்த வாகனத்தை மைக்ரோ பஸ் பிரிவிலேயே நிஸான் விற்பனைச் செய்ய இருக்கின்றது. ஆகையால், இந்த பிரிவில் உலக சந்தையில் விற்பனையில் கொடி கட்டி பறந்துக் கொண்டிருக்கும் டொயோட்டா ஹயாஸ் (Toyota Hiace)-க்கு, கேரவன் மை ரூம் பதிப்பு மிக சிறந்த போட்டியாளனாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Nissan caravan my room edition

வெகு விரைவிலேயே நிஸான் நிறுவனம் இந்த வாகனத்தை உலக சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதை முன்னிட்டே தற்போது வாடிக்கையாளர்களின் கவனத்தை கேரவன் மை ரூம் பக்கம் ஈர்க்கும் பொருட்டு அதை வெளியீடு செய்திருக்கின்றது. கேரவனின் வசதிகளை முழுமையாக வெளிக்காட்டும் வகையில் அதன் படங்களையும் நிஸான் வெளியிட்டு இருக்கின்றது.

இந்த படங்களை வைத்து பார்க்கையில், கேரவன் மை ரூம் பதிப்பு கையில் இருந்தால், வீடு-வாசல் என எதுவும் தேவைப்படாது என தெரிகின்றது. அந்த அளவிற்கு அந்த வாகனம் இருக்கின்றது. ஓர் மினி வீட்டிற்கு இணையான வசதிகளை கேரவன் மை ரூம் பதிப்பில் பார்க்க முடிகின்றது.

Nissan caravan interior

மேலும், இந்த வாகனம் கையில் இருந்தால் வீடு மட்டுமல்ல, ஹோட்டல் அல்லது தங்கும் விடுதி என எதுவும் தேவைப்படாது. அந்த அளவிற்கே இந்த வாகனத்தை நிஸான் தயார் செய்திருக்கின்றது. குறிப்பாக, சுற்றுலா சென்ற இடத்தில் இந்த வாகனத்தையே ஓர் மினி வீடாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இதற்கேற்ப படுக்கை, சாப்பிடும் டேபிள் என பல வசதிகளை நிஸான் இந்த வாகனத்தில் வழங்கியிருக்கின்றன. இதுதவிர, இந்த வாகனத்தை மினி ஆஃபிஸாககூட பயன்படுத்திக் கொள்ள முடியும் என நிஸான் தெரிவித்து இருக்கின்றது. இதற்காக இதன் இருக்கைகளை முழுமையாக மடித்துக் கொள்ளும் வசதியை நிஸான் வழங்கி இருக்கின்றது.

Nissan caravan bed

இதை விரித்தால் படுக்கையாகவும், மடித்துக் கொண்டால் ஓர் மினி ஹாலைப் போலவும் வாகனம் மாறிவிடும். இதுபோன்று இன்னும் பல பிரமாண்ட வசதிகளை இந்த வாகனத்தில் நிஸான் வழங்கி இருக்கின்றது. ஆனால், இந்த வாகனத்தின் வெளிப்புற தோற்றம் மிகவும் எளிமையானதாக உள்ளது. கருப்பு நிற பம்பர், கருப்பு நிற கதவு கைப்பிடிகள் மற்றும் இரும்பு சக்கரம் ஆகியவற்றையே இந்த காரில் நிஸான் வழங்கி இருக்கின்றது.

என்னதான் இதுபோன்று எளிமையான வெளிப்புறத்தை கேரவன் மை ரூம் கொண்டிருந்தாலும், அதன் உட்பக்கம் அப்படியே நேரெதிராக உள்ளது. ஆடம்பரத்தின் உச்சத்தை காரின் உட்பக்கத்தில் காணலாம். பல விதமான வண்ணப்பூச்சால் இந்த காரின் உட்பக்கம் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, கூடுதல் பிரீமியம் உணர்வை வழங்கும் விதமாக மர கட்டை பேனலால் அதன் உட்பக்கம் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

மேலும், வாகனத்திற்குள் இருக்கும்போது தனிமை உணர்வை பயணிகளுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக ஜன்னல்களில் திரைச்சீலைகளை நிஸான் வழங்கியிருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, ஆஃப்-ரோடு பயணத்தின்போது உதவும் விதமான சில கூடுதல் சிறப்பம்சங்களையும் இந்த வாகனத்தில் நிஸான் வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், AC 100V அவுட்லெட் வழியாக எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளும் வசதியை நிஸான் வழங்கி இருக்கின்றது.

இதன் வாயிலாக வீட்டு உபயோக பொருட்களுக்கு தேவையான மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இதைத்தொடர்ந்து, பிளாஸ்டிக் ஜன்னல் வைசர்கள், நிசான் ஒரிஜினல் டிரைவ் ரெக்கார்டர், நேவிகேஷன் சிஸ்டம், கார் சைட் டார்ப், தியேட்டர் மோடுக்கான ரோலர் திரை, தரை விரிப்புகள் போன்ற அம்சங்களை கூடுதல் அம்சங்களாக இந்த வாகனத்திற்கு நிஸான் வழங்க இருக்கின்றது.

இது கேம்ப்-இன் போது கூடுதல் சுவாரஷ்யமான அனுபவத்தை வழங்கும். எஞ்சினைப் பொருத்த வரை இந்த வாகனத்தில் இரண்டு விதமான ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கின்றன. 2000 சிசி க்யூஆர்20டிஇ (QR20DE) பெட்ரோல் எஞ்சின் மற்றும் மிட்சுபிஷி-இன் 2500 சிசி 4என்16 (4N16) டீசல் எஞ்சின் ஆகிய ஆப்ஷன்களே இந்த வாகனத்தில் வழங்கப்பட இருக்கின்றது.

இதில் முதல் எஞ்சின் 129 எச்பி மற்றும் 178 என்எம் டார்க்கையும், இரண்டாவது எஞ்சின் அதிகபட்சமாக 130 எச்பி மற்றும் 370 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும். இந்த இரண்டு எஞ்சின்களிலும் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே வழங்கப்படுகின்றது. இந்த வாகனத்தை ஜப்பானிலேயே முதலில் நிஸான் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இதற்கு அடுத்தபடியாகவே உலக சந்தையில் கேரவன் மை ரூம் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இதன் இந்திய வருகை என்பது சந்தேகமே. ஜப்பானில் 31,48,606 லட்ச ரூபாய் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே விற்பனைக்குக் கிடைக்க இருப்பதாக தகவல்களஅ வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேலும், இதன் அதிபட்ட விலை ரூ. 39.13 லட்சம் வரை செல்லலாம் என கூறப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கேரவன் வகை வாகனங்களின் கலாச்சாரம் இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. ஆகையால், இந்த மாதிரியான வாகனம் சந்தையில் விற்பனையில் இல்லாத நிலையே தென்படுகின்றது. அதேநேரத்தில், கேரவன் வகை வாகனம் மீது ஆர்வமுள்ளவர்கள் பிரத்யேகமாக தங்களுடைய வழக்கமான வாகனங்களையே மோட்டார் வீடாக மாற்றி பயன்படுத்தி வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Sunday, August 11, 2024, 19:00 [IST]
English summary
Nissan unveils caravan myroom edition in japan a homely microbus experience
மேலும்... #nissan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X