நிஸான் ஷோரூம் எங்கடா இருக்குதுன்னு எல்லாரும் தேட ஆரம்பிச்சிட்டாங்க! இந்த காரோட புக்கிங் ஸ்டார்ட் ஆகிடுச்சு!

நிஸான் நிறுவனம் 2024 எக்ஸ்-டிரையல் எஸ்யூவி என்ற காரை இந்தியாவில் விற்பனைக்காக அறிமுகப்படுத்த உள்ளது இந்த கார் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு அறிமுகமாக உள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி இந்த காரின் அதிகாரப்பூர்வ அறிமுகம் இருக்கும் நிலையில், இந்த காருக்கான புக்கிங் தற்போது துவங்கி உள்ளது. இந்த காரில் அப்படி என்ன அம்சங்கள் இருக்கின்றன என்ற விரிவான விபரங்களையும் புக்கிங் குறித்த தகவல்களையும் தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.

நிஸான் நிறுவனம் தற்போது மேக்னைட் என்ற ஒரே ஒரு காம்பேக்ட் எஸ்யூவி காரை தான் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் தனது கார் எண்ணிக்கையில் மற்றொரு காரை புதிதாக இணைக்க நிறுவனம் முடிவு செய்து புதிய எஸ்யூவி காரை களம் இறக்க முடிவு செய்துள்ளது. அதன்படி எக்ஸ்-டிரையல் என்ற காரை இந்நிறுவனம் இந்தியாவிற்குள் களம் இறங்குகிறது.

Nissan X-Trail Booking

இந்த கார் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி விற்பனைக்காக அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறது. இந்நிலையில் இந்த காருக்கான புக்கிங்கை இந்நிறுவனம் தற்போது துவங்கி உள்ளது. இந்த காரை புக் செய்ய நினைக்கும் வாடிக்கையாளர்கள் ரூபாய் 1லட்சம் முன் பணம் செலுத்தி இந்த காரை புக்கிங் செய்து கொள்ளலாம். இந்த கார் தான் நிஸான் நிறுவனத்தின் பிளாஸ்டிக் தயாரிப்பாக இருக்கிறது.

இந்த காருக்கான விலை விபரங்கள் எல்லாம் இந்த கார் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் போது தான் தெரியவரும். இருந்தாலும், இந்த கார் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படுவதால் இந்த காரின் விலை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ரூ30 லட்சம் என்ற விலையில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாகும் என்ன எதிர்பார்க்கலாம்.

Nissan X-Trail Booking

ஏற்கனவே இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகி வரும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்,மாருதி இன்விக்டோ, டாடா சஃபாரி, மஹிந்திரா எக்ஸ்யூவி 700, ஸ்கார்பியோ என் மற்றும் ஜீப் மெரிடியன் ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிஸான் எக்ஸ்-டிரையல் காரை பொறுத்தவரை 7 சீட்டர் காராக இந்தியாவில் அறிமுகாகிறது.

இந்த கார் மற்றும் மூன்று விதமான மோனோ டோன் கலர்களில் விற்பனைக்கு வருகிறது. அதன்படி பியர்ல் வைட், டைமண்ட் பிளாக் மற்றும் சாம்பியன்ஸ் சில்வர் ஆகிய கலர்களில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாக உள்ளது. இந்த கார் குறித்து வெளியான பிரவுச்சரில் இந்த கார் குறித்த பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கார் சிஎம்எப்-சி பிளாட்பார்மில் உருவாக்கப்படும் காராகும்.

Nissan X-Trail Booking

இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4680 மிமீ நீளமும் 1860 மிமீ அகலமும் 1725 மிமீ உயரமும் கொண்ட காராக உருவாக்கப்படுகிறது. இந்த காரின் முன் பக்க பேனட் பகுதி போல்டாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் முன் பக்கம் ஸ்பிளிட் ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் பக்கவாட்டில் மஸ்குலரான வீல் ஆர்ச்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் ஸ்மோக் செய்யப்பட்ட டெயில் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் பானரோமிக் சன்ரூஃப், 12.3இன்ச் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கிளைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா மற்றும் பெரிய இன்போடெயின்மென்ட் சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.5லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இது 12வோல்ட் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் 163எச்பி பவரையும் 300என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் கியர் பாக்ஸை பொறுத்தவரை எக்ஸ்-டிரானிக் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் மைலேஜ் குறித்த விபரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஆனால் இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் ஏகப்பட்டது இருப்பது நமக்கு தெரிகிறது. இந்த காரில் 7 ஏர் பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், மூவிங் ஆப்ஜெக்ட் டிடெக்சன் டிவைஸ், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிஸான் நிறுவனம் இந்த காரை இந்தியாவில் தயாரிக்காமல் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட காரை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்வதால் இதன் விலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த காரின் விற்பனை குறைவாக இருக்கலாம். இருந்தாலும், இந்த காருக்காக பலர் காத்திருப்பதால் இதன் புக்கிங் தற்போது சூடு பிடித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, July 26, 2024, 12:49 [IST]
English summary
Nissan x trail booking officially open now
மேலும்... #nissan #nissan x trail #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X