50 லட்ச ரூபாய் காரை ஹாப்பியாக வாங்கி செல்லும் கஸ்டமர்ஸ்!! கப்பலில் இந்தியா கொண்டுவரப்படும் கார்கள்...

நிஸான் எக்ஸ்-டிரைல் (Nissan X-Trail), இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கார் ஆகும். நிஸானின் மிட்-சைஸ் எஸ்யூவி காராக களமிறக்கப்பட்டுள்ள எக்ஸ்-டிரைல் முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்ட நிலையில், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்தியாவில் மேலும் 2 புதிய ஷோரூம்களை நிஸான் திறந்துள்ளது. புதிய ஷோரூம்கள் திறப்பை பற்றியும், புதிய எக்ஸ்-டிரைல் காரை பற்றிய விபரங்களையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நிஸான், ஜப்பானை சேர்ந்த உலகளவில் பிரபலமான கார் நிறுவனங்களுள் ஒன்று. ஆனால், இந்தியாவில் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாக போராடி வருகிறது. 2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்த மேக்னைட் காரை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்துவந்த நிஸான் நிறுவனம், தனது 2வது காராக எக்ஸ்-டிரைல் என்கிற மிட்-சைஸ் எஸ்யூவி காரை கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்தது.

nissan x-trail deliveries starts

இந்த கார் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட போவதில்லை என அறிவிக்கப்பட்டதால், காரின் விலை நிச்சயமாக அதிகமாக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்த்தோம். எதிர்பார்த்தப்படி, ரூ.49.92 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நிஸான் காருக்கான முன்பதிவுகள் கார் அறிமுகம் செய்யப்பட்ட அன்றைய தினத்திலேயே துவங்கப்பட்டன. இந்த நிலையில், புக் செய்தவர்களுக்கு எக்ஸ்-டிரைல் கார் டெலிவிரி கொடுக்கும் பணிகள் தற்போது இந்தியா முழுவதும் துவங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், பெங்களூரில் புதியதாக இரு ஷோரூம்களை நிஸான் நிறுவனம் திறந்துள்ளது. மேலும், ஒரு திறன்மிக்க நிஸான் கார் சர்வீஸ் மையமும் பெங்களூரில் திறக்கப்பட்டு உள்ளது. இந்த திறப்பு நிகழ்ச்சிகளில் நிஸான் மோட்டார் நிறுவனத்தின் இந்தியாவிற்கான நிர்வாக இயக்குனர் சௌரப் வட்ஸா நேரில் கலந்துக் கொண்டார்.

nissan x-trail deliveries starts

புதிய நிஸான் எக்ஸ்-டிரைல் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்த காரில் 1.5 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 12 வோல்ட் மோட்டார் உடன் பொருத்தப்படுகிறது. ஆம்... எக்ஸ்-டிரைல் ஆனது ஒரு மைல்ட்-ஹைப்ரீட் கார் ஆகும். பல்வேறு விதமான கம்பிரெஷன் டெக்னாலஜி மற்றும் டர்போசார்ஜரை கொண்ட இந்த என்ஜின் உடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

என்ஜின் + மோட்டார் என இரண்டும் சேர்ந்து அதிகப்பட்சமாக 160 பிஎச்பி மற்றும் 300 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கும் திறன் கொண்டுள்ளன. ஈக்கோ, ஸ்டாண்டர்ட் மற்றும் ஸ்போர்ட் என 3 விதமான டிரைவிங் மோட்களை இந்த காரில் பெறலாம். காரின் மைலேஜை அதிகமாக பெறுவதற்கு உதவியாக நிறைய அம்சங்கள் எக்ஸ்-டிரைல் காரில் வழங்கப்பட்டுள்ளன.

nissan x-trail deliveries starts

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், ஆட்டோமேட்டிக் ஸ்டார்ட்/ ஸ்டாப் சிஸ்டம் ஆகும். 4-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் எக்ஸ்-டிரைல் கார் உருவாக்கப்படுகிறது. இதனால், பள்ளம், மேடான சாலைகளுக்கும் இந்த காரை தைரியமாக கொண்டு செல்லலாம். விற்பனையில் நிஸான் எக்ஸ்-டிரைல் காருக்கு போட்டியாக, டொயோட்டா ஃபார்ச்சூனர், ஜீப் மெரிடியன், ஸ்கோடா கோடியாக், ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மற்றும் ஹூண்டாய் டக்ஸன் உள்ளிட்டவை உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிஸான் எக்ஸ்-டிரைல் காரில் வழங்கப்பட்டு இருப்பவை அனைத்துமே சிறப்பான அம்சங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், காரின் விலைதான் சற்று அதிகமாக உள்ளது. இதற்கு காரணம், கார் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாதது ஆகும். ஆனால், தற்போது மக்களின் கைகளுக்கு எக்ஸ்-டிரைல் கிடைக்க ஆரம்பித்து இருப்பதால், தனது செயல்படுதிறனின் மூலமாக எக்ஸ்-டிரைல் மக்களை கவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Friday, August 16, 2024, 11:07 [IST]
English summary
Nissan x trail deliveries starts in india check all details here
மேலும்... #nissan #nissan x trail #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X