ஃபார்ச்சூனர் எல்லாம் ஓரமா போ! இனி அரசியல்வாதிகள் எல்லாம் இந்த காரை தான் வாங்க போறாங்க!
நிஸான் நிறுவனத்தின் எக்ஸ் டிரையல் என்ற கார் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு அறிமுகமாக உள்ளது. இந்த கார் இந்தியாவில் ஏற்கனவே விற்பனை ஆகி வரும் பார்ச்சூனர் காருக்கு போட்டியாக களம்பிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நிஸான் நிறுவனம் தனது எக்ஸ் டிரையல் என்ற எஸ்யூவி காரை இந்திய மார்க்கெட்டிற்கு அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அதன்படி ஜூன் அல்லது ஜூலை மாதம் இந்த கார் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டில் கட்டமைக்கப்பட்ட காரை இந்தியாவில் இறக்குமதி செய்து இந்நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது. வெறும் 2500 கார்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் ஆகின்றன.

நிஸான் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது எக்ஸ் டிரையல் எஸ்யூவி காரை இந்தியாவில் காட்சிப்படுத்தியிருந்தது. இதுவரை அதிகாரப்பூர்வமாக இந்த கார் இந்தியாவில் அறிமுகமாகவில்லை. இந்த கார் 4ம் தலைமுறை அப்டேட்டிற்குப் பிறகு கடந்த 2023 முதல் சர்வதேச அரங்கில் விற்பனையாகி வந்தாலும் இந்திய சாலைகளில் இந்த கார் போடவில்லை.
இருந்தாலும் இந்திய சாலைகளில் இந்த கார் ஆங்காங்கே சோதனை செய்யப்படுவதை நம்மால் காண முடிந்தது. இதன் ஸ்பை புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் இந்த காரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த கார் பெட்ரோல் வேரியன்டில் மட்டுமே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரில் உள்ள இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 21 பிஎச்பி பவரையும் 35 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் சிவிடி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் டூ வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் ஆகிய இரண்டு விதமான ஆப்ஷன்களிலும் விற்பனைக்கு வருகிறது.
நிஸான் நிறுவனம் இந்த காரை இந்தியாவில் காட்சிப்படுத்திய போது இது பவர் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட காராக காட்சிப்படுத்தப்பட்டது. அதாவது இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் இருந்தது. மேலும் இது ஆல்வீல் டிரைவ் அம்சத்துடன் காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால் இந்தியாவில் இந்த காரை விற்பனைக்கு கொண்டு வரும்போது இது பெட்ரோல் இன்ஜின் காராக மட்டுமே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

இந்த காரின் இன்ஜின் மற்றும் அளவுகளை வைத்து பார்க்கும் போது இந்தியாவில் ஏற்கனவே விற்பனையாகி வரும் ஸ்கோடா குஷாக் காருக்கு போட்டியாக இந்த கார் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 190 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் தற்போது இந்திய மார்க்கெட்டில் ரூபாய் 40 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில் நிஸான் எக்ஸ் டிரையல் எஸ்யூவி காரை பொறுத்தவரை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனைக்கு வருவதால் இதன் விலை அதிகமாக தான் இருக்கும் என எதிர்பார்க்கலாம் இருந்தாலும், ஃபார்ச்சூனர் போன்ற கார்களுக்கு போட்டியாகவும் இந்த கார் களமிறங்கும் பல பெரிய அரசியல் தலைவர்கள் முதல் பெரிய தொழிலதிபர்கள் வரை இந்த காரை வாங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இந்த கார் வெறும் 2500 கார் மட்டுமே இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுவதால் இதன் விற்பனை நீண்ட நாட்களுக்கு இருக்காது. இந்தியாவில் இந்த காருக்கான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இந்த கார்களை நிறுவனம் விற்பனை செய்கிறது. 2500 க்கும் குறைவான கார்களை இறக்குமதி செய்தால் மத்திய அரசின் தனி அங்கீகாரத்தை பெற தேவையில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிஸான் நிறுவனத்தின் எக்ஸ் டிரையல் என்ற முழுசைஸ் எஸ்யூவி கார் நிச்சயம் மக்களை ஈர்க்கும் விதமாக பல்வேறு அம்சங்கள் கொண்ட காராக இருக்கிறது. வெளிநாடுகளில் இந்த காருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதன் காரணமாகவே நிறுவனம் இந்தியாவிலும் இந்த காருக்கான மார்க்கெட்டை பிடிப்பதற்காக இந்த காரை இறக்குமதி செய்து விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications









