அரசியல்வாதிங்க எல்லாம் இனி இந்த காரைதான் தேடி போய் வாங்க போறாங்க... டொயோட்டா ஃபார்ச்சூனர் கதை முடிஞ்சுது...
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று நிஸான் எக்ஸ்-ட்ரெயில் (Nissan X-Trail). இது 3 வரிசை இருக்கை அமைப்பை கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார் ஆகும். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதமே நிஸான் எக்ஸ்-ட்ரெயில் கார் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டு விட்டது. அன்று முதலே இந்த காரை வாடிக்கையாளர்கள் பலரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். இதில், நீங்களும் ஒருவர் என்றால், உங்கள் ஆசை கூடிய விரைவில் நிறைவேற போகிறது. ஆம், நிஸான் எக்ஸ்-ட்ரெயில் கார் கூடிய விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அதற்கு முன்னதாக நிஸான் நிறுவனம் எக்ஸ்-ட்ரெயில் காரின் டீசர்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது மற்றொரு டீசர் வீடியோவை (Teaser Video) நிஸான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த டீசர் வீடியோவின் மூலமாக நிஸான் எக்ஸ்-ட்ரெயில் காரில் வழங்கப்படவுள்ள முக்கியமான வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதன்படி பனரோமிக் சன்ரூஃப், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் எல்லாம் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் காரில் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர இன்னும் பல்வேறு வசதிகளும் இந்த காரில் வழங்கப்படலாம் என தெரிகிறது.
இதில், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கலாம். அத்துடன் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் ஆட்டோ ஹோல்டு ஃபங்ஷன் உடன் எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் போன்ற வசதிகளும் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் காரில் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

செயல்திறனை பொறுத்தவரையில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதற்கு இன்னும் ஒரு சில வாரங்களில் நமக்கு விடை தெரிந்து விடும்.
நிஸான் எக்ஸ்-ட்ரெயில் எஸ்யூவி காரானது, இந்தியாவில் நடப்பு ஜூலை மாத இறுதிக்குள்ளாகவோ அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்திலோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய சந்தையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) காருக்கு போட்டியாக நிஸான் எக்ஸ்-ட்ரெயில் களமிறக்கப்படவுள்ளது.
இதுதவிர எம்ஜி க்ளோஸ்ட்டர் (MG Gloster) மற்றும் ஜீப் மெரிடியன் (Jeep Meridian) போன்ற கார்களுக்கும் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் விற்பனையில் கடுமையான சவாலை வழங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய ஒரு பிரீமியம் எஸ்யூவி ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நிஸான் எக்ஸ்-ட்ரெயில் கார் முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளது. எனவே இதன் விலை சற்று அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








