குடும்பத்துல 7 பேர் இருந்தாலும் ஒன்னா ஒக்காந்து போகலாம்.. நிஸான் எக்ஸ்-டிரையல் ரைடு ரிவியூ வீடியோ!
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான நிஸான் (Nissan) இந்தியாவில் சீக்கிரமே எக்ஸ்-டிரையல் (X-Trail) எஸ்யூவி ரக காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி நிறுவனம் மேக்னைட் (Magnite) எனும் கார் மாடலை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் வரிசையிலேயே விரைவில் பெரிய உருவும் கொண்ட எக்ஸ்-டிரையல் எஸ்யூவி காரை அது இணைக்க இருக்கின்றது. இதன் வருகை இந்தியாவில் பல்வேறு கார் மாடல்களுக்கு போட்டியாக அமைய உள்ளது. குறிப்பாக, டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் மாடலுக்கே இதன் வருகை மிகப் பெரிய போட்டியாக இருக்க போவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த காரில் ஒரே நேரத்தில் ஏழு பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். இத்தகைய திறன் கொண்ட காரையே இந்தியாவில் ஆகஸ்டு 1ஆம் தேதி நிஸான் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த காரையே நாங்கள் சமீபத்தில் டெஸ்ட் ரைடு செய்து பார்த்தோம். அப்போது இந்த கார் பற்றி நாங்கள் அறிந்துக் கொண்ட தகவலையே இந்த வீடியோவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வீடியோவை கீழே காணலாம்.
4,680 மிமீட்டர் நீளம், 1,840 மிமீட் அகலம், 1,725 மிமீ உயரம் மற்றும் 2,705 மிமீ வீல்பேஸ் ஆகிய அளவுகளையே நிஸான் எக்ஸ்-டிரையல் கொண்டிருக்கின்றது. 1.5 லிட்டர், 3 சிலிண்டர், டர்போசார்ஜட் பெட்ரோல் எனும் ஒற்றை எஞ்சின் தேர்வில் மட்டுமே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 163 எச்பி பவரையும், 300 என்எம் டார்க்கை இது வெளியேற்றும். பேடில் ஷிஃப்டர் வசதிக் கொண்ட சிவிடி கியர்பாக்ஸ் இந்த காரில் இடம் பெற இருக்கின்றது. சிபியூ வாயிலாகவே இந்த காரை நாட்டில் நிஸான் விற்பனைக்குக் கொண்டு வருகின்றது. மேலும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இந்த காரை நாட்டில் விற்பனைச் செய்யவும் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








