டொயோட்டா ஃபார்ச்சூனர் கதையை முடிக்க போகும் கார்... விலை எவ்ளோனு தெரியுமா? எதிர்பார்ப்பு எகிறுது...
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று நிஸான் எக்ஸ் ட்ரெயில் (Nissan X-Trail). இது ஃபுல்-சைஸ் எஸ்யூவி (Full-size SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். நிஸான் எக்ஸ்-ட்ரெயில் கார், 7 சீட்டர் மாடலாக விற்பனைக்கு வரவுள்ளது. நடப்பு ஜூலை மாத இறுதிக்குள் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் கார், இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக நிஸான் நிறுவனம் தொடர்ச்சியாக எக்ஸ்-ட்ரெயில் காரின் பல்வேறு டீசர்களை வெளியிட்டு வருகிறது.
இந்த வரிசையில் தற்போது ஒரு புதிய டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த புதிய டீசர் வீடியோவில், ஸ்பிளிட் ஸ்டைல் எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டெயில்லைட்கள், 'U' வடிவ க்ரில் மற்றும் ட்யூயல் டோன் அலாய் வீல்கள் ஆகியவற்றை நம்மால் பார்க்க முடிகிறது.

வசதிகளை பொறுத்தவரையில் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் காரில், 12.3 இன்ச் அளவில் 2 திரைகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும். அத்துடன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்ற வசதிகளும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 10.8 இன்ச் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 3 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், பனரோமிக் சன்ரூஃப், 10 ஸ்பீக்கர் போஸ் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் ஆகிய வசதிகளும் வழங்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிஸான் எக்ஸ்-ட்ரெயில் காரில் பாதுகாப்பு வசதிகளுக்கும் சற்றும் பஞ்சமிருக்காது என நாங்கள் கருதுகிறோம்.

பாதுகாப்பை பொறுத்தவரையில், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) மிகவும் முக்கியமான அம்சமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செயல்திறனை பொறுத்தவரையில், 12V தொழில்நுட்பத்துடன் கூடிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இன்ஜின் உடன், 8 ஸ்பீடு சிவிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதே நேரத்தில் 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் என 2 ஆப்ஷன்களில் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner), எம்ஜி க்ளோஸ்ட்டர் (MG Gloster), ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq) மற்றும் ஜீப் மெரிடியன் (Jeep Meridian) உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக நிஸான் எக்ஸ்-ட்ரெயில் ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார் களமிறக்கப்படவுள்ளது.
இந்திய சந்தையில் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் கார் சுமார் 40 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என நாங்கள் கருதுகிறோம். இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications








