டொயோட்டா ஃபார்ச்சூனர் சோலி முடின்ச்! நாடே காத்து கிடந்த 7 சீட்டர் கார் அறிமுகம்! 2 குடும்பம் ஒன்னா போலாம்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று நிஸான் எக்ஸ்-ட்ரெயில் (Nissan X-Trail). ஃபுல்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த கார், இந்தியாவில் இன்று (ஜூலை 17) பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து இன்னும் ஒரு சில நாட்களில், நிஸான் எக்ஸ்-ட்ரெயில் கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த புத்தம் புதிய கார் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை எல்லாம் இந்த செய்தியில் பார்க்கலாம்.
நிஸான் எக்ஸ்-ட்ரெயில் கார் வெளிநாடுகளில் ஏற்கனவே விற்பனையில் உள்ளது. வெளிநாடுகளில் தற்போது விற்பனையில் இருப்பது, நிஸான் எக்ஸ்-ட்ரெயில் காரின் 4வது தலைமுறை மாடல் ஆகும். இந்த 4வது தலைமுறை மாடல், கடந்த 2021ம் ஆண்டில் இருந்து வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் இந்தியாவில் தற்போதுதான் முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. வெளிநாடுகளில் இந்த கார், 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் 7 சீட்டர் மாடல் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். எனவே இது 3 வரிசைகளை கொண்டதாக இருக்கும்.
வசதிகளை பொறுத்தவரையில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், கீ லெஸ் எண்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், டிரைவ் மோடுகள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் எல்லாம் இந்த காரில் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் ட்யூயல்-பேன் பனரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, பேடில் ஷிஃப்டர்கள், 7 ஏர்பேக்குகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், இபிடி உடன் ஏபிஎஸ், டிராக்ஸன் கண்ட்ரோல், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் போன்ற வசதிகளும் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் காரில் வழங்கப்படவுள்ளன.
செயல்திறனை பொறுத்தவரையில் ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படவுள்ளது. அது 1.5 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் உடன் 12V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் கொடுக்கப்பட்டிருக்கும். இதன் பவர் அவுட்புட் 163 ஹெச்பி மற்றும் 300 என்எம் டார்க்-ஆக இருக்கும்.
இந்த இன்ஜின் உடன் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படவுள்ளது. இந்திய சந்தையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner), ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq) மற்றும் எம்ஜி க்ளோஸ்ட்டர் (MG Gloster) உள்ளிட்ட கார்களுடன், நிஸான் எக்ஸ்-ட்ரெயில் ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார் போட்டியிடவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நிஸான் எக்ஸ்-ட்ரெயில் கார் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாது. அதற்கு மாறாக முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில், இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளது. எனவே இதன் விலை மிகவும் அதிகமாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
அனேகமாக 40 லட்ச ரூபாய்-45 லட்ச ரூபாய் என்ற விலையில், நிஸான் எக்ஸ்-ட்ரெயில் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். இந்த காரின் அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது கூடிய விரைவில் நமக்கு தெரிய வந்து விடும். அனேகமாக இந்த மாத இறுதிக்குள்ளாக நிஸான் எக்ஸ்-ட்ரெயில் கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








