எல்லாமே ஒரே மாதிரி இருக்கு... கொஞ்சம் பணத்தை சேர்த்து வைத்தால், இதில் ஒன்றை வாங்கிவிடலாம்!!
நிஸான் எக்ஸ்-டிரைல் (Nissan X-Trail) கார் இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம், உலகின் முன்னணி ஜப்பானிய கார் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் நிஸான், இந்தியாவில் விற்பனை செய்யும் கார்களின் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. எக்ஸ்-டிரைல் காரை தவிர்த்து, மேக்னைட் காரையும் இந்தியாவில் நிஸான் விற்பனை செய்கிறது. நிஸானின் ஃபுல்-சைஸ் எஸ்யூவி காராக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிஸான் எக்ஸ்-டிரைலுக்கு விற்பனையில் ஸ்கோடா கோடியாக் மற்றும் ஜீப் மெரிடியன் உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.
புதிய நிஸான் எக்ஸ்-டிரைல் கார் ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.49.92 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, ஸ்கோடா கோடியாக் காரும் ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. அதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.39.99 லட்சம் ஆகும்.

ஆனால், ஜீப் மெரிடியன் கார் லிமிடெட் (ஆப்ஷ்னல்) மற்றும் ஓவர்லேண்ட் என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த ஜீப் காரை 2-வீல்-டிரைவ் சிஸ்டம் அல்லது 4-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் வாங்கலாம். இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.33.77 லட்சத்தில் இருந்து ரூ.39.83 லட்சம் வரையில் உள்ளன.
ஸ்கோடா கோடியாக் காரை விட ஜீப் மெரிடியனின் விலை ஆனது சுமார் ரூ.10 லட்சம் அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், எக்ஸ்-டிரைல் காரை இந்தியாவில் நிஸான் நிறுவனம் தயாரிக்க போவதில்லை. முற்றிலுமாக வெளிநாட்டில் தயாரித்து சிபியூ முறையில் இந்தியாவில் இறக்குமதி செய்து கஸ்டமர்களுக்கு டெலிவிரி செய்ய நிஸான் திட்டமிட்டுள்ளது. ஆனால், கோடியாக் கார்கள் பாகங்களாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

புதிய எக்ஸ்-டிரைல் ஆனது மைல்ட்-ஹைப்ரீட் கார் அகும். அதாவது, இந்த காரில் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் 12 வோல்ட் எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 163 பிஎஸ் மற்றும் 300 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெறலாம். எக்ஸ்-டிரைல் காரில் என்ஜினின் இயக்க ஆற்றல் முன் சக்கரங்களுக்கு செல்கிறது.
ஆனால், கோடியாக் மற்றும் மெரிடியன் கார்களை என்ஜினின் பவர் காரின் அனைத்து சக்கரங்களுக்கும் செல்லும் வகையில் வாங்கலாம். ஸ்கோடா கோடியாக்கில் அளவில் பெரியதாக 2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதற்கேற்ப என்ஜினில் இருந்து கிடைக்கும் இயக்க ஆற்றலின் அளவுகளும் அதிகமாகும். கோடியாக் காரில் அதிகப்பட்சமாக 190 பிஎஸ் மற்றும் 320 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.

கோடியாக் காரில் என்ஜின் உடன் 7-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஜீப் மெரிடியனில் பொருத்தப்படும் 2 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 9-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெறலாம்.
நிஸான் எக்ஸ்-டிரைல் காரில் 8-இன்ச் டச் ஸ்க்ரீன், 12.3-இன்ச்சில் ஃபுல் டிஜிட்டல் தரத்தில் ஓட்டுனருக்கான டிஸ்பிளே, ட்யூயல்-ஸோன் ஏசி மற்றும் பனோராமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. ஆனால், ஸ்கோடா கோடியாக் & ஜீப் மெரிடியன் கார்களில் வழங்கப்படும் வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், லெதரேட்டட் அப்ஹோல்ஸ்ட்ரி, பவர்டு முன் இருக்கைகள் மற்றும் கேபினுக்குள் வண்ண நிறங்களிலான விளக்குகள் உள்ளிட்டவற்றை எக்ஸ்-டிரைல் பெறவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு ஒரு சில தொழிற்நுட்ப வசதிகளை பெறாத போதும், புதிய நிஸான் எக்ஸ்-டிரைல் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை கிட்டத்தட்ட ரூ.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதலால், எக்ஸ்-டிரைல் காரின் விற்பனையை அதிகரிக்க வேண்டுமெனில், எக்ஸ்-டிரைல் கார்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய நிஸான் முயற்சிக்க வேண்டும். ஏனெனில், அப்போதுதான் இதன் விலையை குறைவானதாக நிர்ணயிக்க முடியும்.


Click it and Unblock the Notifications









