உங்க டீசல் டாடா ஏஸை மின்சாரத்தில் ஓட வைக்க முடியும்.. நாம எதிர்பார்த்த மாதிரியே மாற்றி தரும் இந்திய நிறுவனம்!
இந்தியாவின் புகழ்பெற்ற மினி லோடு வண்டிகளில் டாடா ஏஸ் (Tata Ace)-ம் ஒன்றாகும். இதனை இந்தியர்கள், குறிப்பாக, தமிழகர்கள் செல்லமாக குட்டி யானை என அழைத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், டாடா ஏஸ் என்பதைக் காட்டிலும் பலர் இந்த வாகனத்தை குட்டி யானை என்கிற பெயரிலேயே அழைக்கின்றனர். இத்தகைய புகழ்பெற்ற மினி லோடு வேனுக்கு இந்திய நிறுவனம் ஒன்று சிறப்பு சேர்க்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. அது வழக்கமான எரிபொருளில் இயங்கும் டாடா ஏஸ்களை மின்சாரத்தில் இயங்கும் வாகனமாக மாற்றி (கன்வெர்ட்) தந்துக் கொண்டிருக்கின்றது.
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நார்த்-வே மோட்டார்ஸ் (Northway Motors) எனும் நிறுவனம்தான் அது. இந்த நிறுவனம் முன்னதாக மாருதி சுஸுகி கார்களுக்கான இவி கன்வெர்ஷன் கிட்-களையே தயாரித்துக் கொண்டிருக்கின்றது. அதாவது, குறிப்பிட்ட மாருதி சுஸுகியின் பெட்ரோல்-டீசல் வாகனங்களை மின்சாரா காராக மாற்றுவதற்கான கருவிகளை மட்டுமே தயாரித்திருந்தது.

இந்த நிலையிலேயே தன்னுடைய சேவையை டாடா ஏஸ் வரை விரிவாக்கம் செய்திருக்கின்றது. இவர்களின் கை வண்ணத்தில் மின்சார வாகனமாக மாற்றப்படும் டாடா ஏஸ் ஓர் முழு சார்ஜில் 350 கிமீ தூரம் வரை ரேஞ்ஜ் தரும் என கூறப்படுகின்றது. இந்த ரேஞ்ஜ் திறனுக்காக 39 kWh பேட்டரி பேக்கையே நார்த் மோட்டார்ஸ் வழங்குகின்றது.
இது ஃபுல் சார்ஜில் வாகனமாக முழுமையான லோடில் இருக்கும்போது 270 கிமீ ரேஞ்ஜையும், அரை லோடில் இருக்கும் போது 300 கிமீ ரேஞ்ஜையும், குறைவான அல்லது லோடே இல்லாத நிலையில் 350 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும் என நார்த் மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கின்றது.
டாடா ஏஸ் பெரும்பாலும் டெலிவரி மற்றும் சரக்கு வாகன சேவையிலேயே ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்தே மிக அதிக ரேஞ்ஜ் தரும் வாகனமாக டாடா ஏஸ்-ஐ நார்த் மோட்டார்ஸ் கன்வெர்ட் செய்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, நாள் ஒன்றிற்கே இந்த வாகனங்கள் 100 கிமீ முதல் 150 கிமீ தூரம் வரை பயணிக்க வேண்டியிருக்கின்றது.
இந்த மாதிரியான சூழலில் தினமும் அந்த வாகனங்களைச் சார்ஜ் செய்வது சாத்தியமில்லாதது மற்றும் தினமும் சார்ஜ் செய்தால் அந்த பேட்டரியின் வாழ்நாள் மிக குறையும் என கூறியே பெரிய பேட்டரி பேக்கை தான் கன்வெர்ட் செய்யும் டாடா ஏஸ்களில் நார்த் மோட்டார்ஸ் வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதன் வாயிலாக அதிக சவாரிகளைப் பார்த்து, அதிக லாபத்தை வாகன உரிமையாளர்கள் ஈட்ட முடுயும் என்று நார்த்வே மோட்டார்ஸ் நிறுவனம் கருத்து தெரிவித்து இருக்கின்றது. இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே ஏஸ் மினி லோடு வேனை மின்சார வெர்ஷனில் விற்பனைக்குக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
அது, ரூ. 9 லட்சத்திற்கும் அதிகமான விலையிலேயே டாடா ஏஸ் இவி சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இதை ஒரு கிமீ இயக்க ஒரு ரூபாய் மட்டுமே செலவாகும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.
21.3 kWh எல்எஃப்பி வகை பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், இதில் 27 kW பவரையும், 130 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் மின்சார மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 60 கிமீ ஆகும். இதில் ஓர் முழு சார்ஜில் 154 கிமீ வரை ரேஞ்ஜை பெற முடியும்.
இத்துடன் இன்னும் பல்வேறு சிறப்பம்சங்களை டாடா ஏஸ் இவியில் வழங்கப்படுகின்றன. அந்தவகையில், 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய தலைமுறை இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், நேவிகேஷன், டிராக்கிங் வசதி, ஜியோ ஃபென்சிங் மற்றும் பல சிறப்பம்சங்களையே இந்த வாகனத்தில் டாடா மோட்டார்ஸ் வழங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதேவேளையில், அனைவராலும் புதிய மின்சார வாகனங்களை வாங்கக் கூடிய சூழல் தற்போது இல்லை. இந்த நிலையை உணர்ந்தே வழக்கமான எரிபொருள் எஞ்சின் கொண்ட வாகனங்களை மின்சார வாகனமாக மாற்றும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றது நார்த்வே மோட்டார்ஸ்.


Click it and Unblock the Notifications








