ஓலா எலெக்ட்ரிக் ஆட்டோவும் தயாராகிடுச்சா! கார்களுக்கே டஃப் கொடுக்கும் போலிருக்கே இந்த இ-ஆட்டோ!

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)களைத் தொடர்ந்து இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் மூன்று சக்கர வாகன (Electric 3-wheeler)-ங்களையும் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதற்கான பணிகளிலேயே நிறுவனம் தற்போது தீவிரமாக களமிறங்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனத்தின் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ சாலையில் வலம் வரும்போது எடுக்கப்பட்ட படம் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. முழுமையான மறைப்புகளுடனேயே ஓலா எலெக்ட்ரிக் ஆட்டோ காட்சி தந்திருக்கின்றது.

விரைவில் விற்பனைக்கு வர இருப்பதை முன்னிட்டே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவை தீவிர சோதனையோட்டத்திற்கு உட்படுத்தி வருகின்றது. ஓலா எலெக்ட்ரிக் ஆட்டோ இந்தியாவில் 'ராஹி' (Raahi) எனும் பெயரில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இது ஓர் இந்தி வார்த்தை ஆகும்.

Ola electric auto spied

இதன் அர்த்தம் டிராவல்லர் என்பது ஆகும். அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்குள் இந்த எலெக்ட்ரிக் வாகனம் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், தற்போதைய ஸ்பை படங்கள் வாயிலாக ஓலா எலெக்ட்ரிக் ஆட்டோ எதிர்காலத்திற்கு ஏற்ற டிசைனைக் கொண்டதாக தயார் செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது.

இதுதவிர, இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவில் சதுர வடிவிலான ஹெட்லைட், பெரிய விண்ட்ஷீல்டு, ஏ பில்லரில் ஓஆர்விஎம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காக டோர்கள் ஆகியவை இந்த ஆட்டோவில் இடம் பெற இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் மஹிந்திரா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த மோந்த்ரா ஆகியவை எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன.

Ola electric auto spied in india

Source: ET Auto இவற்றிற்கே ஓலா எலெக்ட்ரிக் போட்டியாக அமைய இருக்கின்றது. இதற்காக பல்வேறு புதிய அம்சங்களை இந்த இ-ஆட்டோவில் நிறுவனம் வழங்க இருக்கின்றது. அந்தவகையில் ஏர் கன்டிஷனிங் சிஸ்டமும் இதில் வழங்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுதவிர, மற்ற எலெக்ட்ரிக் ஆட்டோக்களைக் காட்டிலும் அதிக இட வசதி, சொகுசான ரைடு அனுபவம் வழங்கும் திறன் உள்ளிட்டவற்றையும் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

மேலும், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பயணிகளுக்கான இ-ஆட்டோவை மட்டுமல்ல பொருட்களை ஏற்றி செல்வதற்கான வெர்ஷனையும் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எனவே, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் இந்த நிறுவனம் கெத்துக் காட்டிக் கொண்டிருப்பதைப் போலவே மின்சார ஆட்டோ விஷயத்திலும் இந்த நிறுவனம் மிகப் பெரிய வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கே மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனத்திற்கு டஃப் கொடுக்கு முடியாமல் முன்னணி நிறுவனங்கள் பல திணறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே எலெக்ட்ரிக் ஆட்டோ உற்பத்தியாளர்களுக்கும் போட்டி அளிக்கும் விதமாக ஓலா இ-ஆட்டோ விற்பனையிலும் களமிறங்க இருக்கின்றது.

இந்த நிறுவனம் கடந்த காலத்தில் எலெக்ட்ரிக் காரையும் உற்பத்தி செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தது. ஆனால், இந்த பிளானை அது சமீபத்திலேயே கை விட்டது. எலெக்ட்ரிக் டூ-வீலர் உற்பத்தியில் அதிகம் கவனம் செலுத்தும் நோக்கிலேயே இந்த திட்டத்தை கை விட்டிருப்பதாகவும் அது தெரிவித்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஆட்டோக்களுக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஓலா எலெக்ட்ரிக் இ-ஆட்டோவை விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், துள்ளியமான நாள் பற்றிய விபரம் வெளியாகவில்லை. விரைவில் அதுகுறித்த விபரங்களும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, September 6, 2024, 11:32 [IST]
English summary
Ola electric auto rikshaw raahi spied ahead of launch this year
மேலும்... #ola #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+