ஓலா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருமா?.. வராதா?.. அதுக்காக காத்திருக்கலாமா வேண்டாமா?.. முடிவை சொல்லிட்டாங்க!
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் இன்றைய நிலவரப்படி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)-ஐ மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. விரைவில் அது எலெக்ட்ரிக் பைக் (Electric Bike)குகளையும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் வரவிருக்கும் எலெக்ட்ரிக் பைக்கின் டீசர் படத்தை ஓலா வெளியிட்டது. எலெக்ட்ரிக் பைக்கின் பேட்டரியை வெளிக்காட்டும் படமே டீசராக வெளியிடப்பட்டது. இந்த படம் ஓலா எலெக்ட்ரிக் பைக்கின்மீதிருந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் அமைந்தது.
அதேவேளையில், இந்தியர்களுக்கு ஓலாவின் எலெக்ட்ரிக் பைக்கின் மீது மட்டுமல்ல ஓலா எலெக்ட்ரிக் கார் (Electric Car) மீதும் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அதிர்ச்சியான தகவல்கள் ஒன்று ஓலா எலெக்ட்ரிக் கார் பற்றி வெளியாகி உள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் காரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய தகவலே வெளியாகி உள்ளது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், மிக சிறப்பான வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் மின்சார ஸ்கூட்டர் வணிகத்தில் மட்டுமே கவனம் செலுத்த முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது, நிறுவனம் தன்னுடைய முழு கவனத்தையும் எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகன உற்பத்தியில் மட்டுமே செலுத்த இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. மேலும், நிறுவனத்தின் லட்சிய திட்டமான மின்சார கார் வெளியீட்டுத் திட்டங்களை அது கை விட முடிவெடுத்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனத்தின் ஐபிஓ (IPO) வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்ற இந்தவேளையிலேயே நிறுவனத்தின் முடிவு பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் நிறுவனம் சுமார் 660 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டுவதை நோக்கமாகக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், தற்போது கை விட்டிருக்கும் எலெக்ட்ரிக் கார் திட்டம், நிறுவனத்தின் மிகப் பெரிய கனவு என்றே கூறலாம்.
ஓலா நிறுவனத்தின் சிஇஓ-வான பவிஷ் அகர்வாலும் இதை பலமுறை பொதுவெளியில் வெளிப்படுத்தி இருக்கின்றார். அந்தவகையில், 2022 ஆம் ஆண்டில் 4 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டக்கூடிய எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரை உருவாக்க இருப்பதாக அவர் அறிவித்திருந்தார். இந்தத் திட்டத்தை மீண்டும் ஒரு முறை செப்டம்பர் 2023 இல் நடைபெற்ற ஓர் நேர்காணலின் வெளிப்படுத்தினார்.
எனவே சீக்கிரமே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் போலவே எலெக்ட்ரிக் கார்களையும் ஓலா விற்பனைக்குக் கொண்டு வந்துவிடும் என அசைக்க முடியாத நம்பிக்கை பலருக்கு ஏற்பட்டது. ஆகையால், அதன் மீதான எதிர்பார்ப்பும் மிகவும் பலமாக தென்பட்டது. இந்த மாதிரியான சூழலிலேயே நிறுவனம் தன்னுடைய இலக்கை மாற்றி அமைத்திருக்கின்றது.
இரண்டு சக்கர வாகன சந்தையில் மட்டுமே நிறுவனம் தன்னுடைய கவனத்தை செலுத்த இருப்பதாக அறிவித்து இருக்கின்றது. இது பலருக்கு ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. அதேவேளையில் இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளர்களை இந்த தகவல் நிம்மதி பெருமூச்சு விட செய்திருக்கின்றது.
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வருகையால் பெட்ரோல் டூ-வீலர்களின் விற்பனை மிகப் பெரிய அளவில் அடி வாங்கி இருக்கின்றது. குறிப்பாக, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனமே இந்தியாவின் நம்பர் 1 மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தியாளராக விளங்கிக் கொண்டிருக்கின்றது. இதே மாதிரியான மிக சிறப்பான வரவேற்பே ஓலாவின் எலெக்ட்ரிக் காருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், அது மின்சார கார் உற்பத்தி திட்டத்தை கைவிட்டிருக்கின்றது. அதேவேளையில், எதிர்காலத்தில் மீண்டும் மின்சார கார் திட்டத்தை ஓலா எலெக்ட்ரிக் கையில் எடுக்கும் என கூறப்படுகின்றது. ஆகையால், எப்போது இருந்தாலும் நிறுவனம் தன்னுடைய பங்களிப்பை இந்தியாவின் மின்சார கார் பிரிவில் வழங்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதனால்தான் பன்னாட்டு நிறுவனங்கள்கூட இந்தியாவை இலக்காகக் கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, வின்ஃபாஸ்ட் நிறுவனம் தமிழகத்தில் தன்னுடைய ஆலையையே அமைத்துக் கொண்டிருக்கின்றது. அந்த அளவிற்கே மின்சார வாகனங்களுக்கான மிக பெரிய சந்தையாக இந்தியா மாறிக் கொண்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications








