கிழவன் போல இருந்த காரை சின்ன குமரனை போல மாத்திட்டாங்க.. கோடி ரூபா கார்களுக்கே டஃப் கொடுக்கும் டொயோட்டா இன்னோவா

இந்திய சாலைக்கும், இந்தியர்களுக்கும் மிகவும் பழக்கமான கார் மாடல்களில் ஒன்றே டொயோட்டா இன்னோவா (Toyota Innova). இந்த காரில் பயணிக்காதவர்களே இருக்க முடியாது என கூறலாம். ஏனெனில், இந்த கார் தனி நபர் பயன்பாட்டில் மட்டுமின்றி கால் டாக்சி பிரிவிலும் மிக அதிகளவில் பயன்பாட்டில் இருக்கின்றது.

குடும்பத்துடன் வெளியில் போக இந்தியர்கள் தேர்ந்தெடுக்கக் கூடிய கார் மாடல்களில் முதல் இடத்தில் இந்த கார் மாடலே இருக்கின்றது. அதிக இடவசதியை தரும் என்பதாலேயே பலர் இந்த காரை தங்களின் நீண்ட தூர பயணங்களுக்கான வாகனமாக பார்க்கின்றனர். தற்போது இந்த கார் மாடல் இந்திய சந்தையில் இன்னோவா க்ரிஸ்டா (Innova Crysta) மற்றும் இன்னோவா ஹைகிராஸ் (Innova Hycross) என இரண்டு விதமான மாடல்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Innova modified

இதற்கு முன்னதாக, அதாவது, ஆரம்பகட்டத்தில் இன்னோவா, இன்னோவா என்கிற பெயரில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வந்தது. அவ்வாறு இன்னோவா என்கிற பெயரில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வந்த டைப் 3 வகை இன்னோவாவே பழைய நிலையில் இருந்து புதிய நிலைக்கு மீட்டெடுக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த கார் மீட்டெடுக்கப்பட்டு இருக்கின்றது என்று கூறுவதற்கு பதிலாக அதற்கு புதிய அவதாரம் வழங்கி இருக்கின்றனர் என்றே கூறலாம். இதுவே அதற்கு பொருத்தமாக இருக்கும். டொயோட்டா இன்னோவாவை அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றி இருக்கின்றனர். ஆட்டோ ரவுண்டர்ஸ் எனும் வாகன கஸ்டமைசேஷன் நிறுவனமே இதனை இவ்வாறு மாற்றி இருக்கின்றனர்.

Innova modified interior

மாற்றத்தினால் பழைய இன்னோவா தற்போது கோடி ரூபாய் மதிப்புள்ள காரை போல தென்பட தொடங்கி இருக்கின்றது. இந்த காரை இன்னோவாவிற்கு என்றே பிரத்யேகமாக தயார் செய்திருக்கும் ஆல்ஃபார்டு எனும் கிட்-ஐக் கொண்டே ஆட்டோ ரவுண்டர்ஸ் மாற்றி அமைத்திருக்கின்றது. வெளிப்புற லுக்கில் மட்டுமல்ல பயன்பாட்டிலும் அந்த கார் கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காராகவே மாறி இருக்கின்றது.

வெளிப்பக்க பாடி பேனல்கள் முழுமையாக அகற்றப்பட்டு புதிய பேனல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில் லைட் செட்-அப், கிரில், பம்பர் ரியர் வியூ மிர்ரர்கள் ஆகியவையும் அடங்கும். மிகப் பெரிய தோற்றம் கொண்ட கிரில்லே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. குரோம்ப பட்டைகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.

Innova modified rear

இது ஓர் முற்றிலும் மாறுபட்ட லுக் கொண்ட கிரில் ஆகும். இந்த லுக் கொண்ட கிரில்லுடன் இந்தியாவில் வேறு எந்த காரையும் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், எல்இடி பனி மின் விளக்கு, எல்இடி டே டைம் லைட் ஆகியவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

மேலும், லெக்சஸ் கார்களில் காணப்படும் சைடு ஸ்கர்ட், அலாய் வீல்கள் ஆகியவையும் இந்திய காரில் அலங்கரிக்கும் விதமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. வெளிப்புறத்தைப் போலவே உட்புறத்திலும் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், ஆம்பியன்ட் லைட், கிரீம் நிறத்திலான இருக்கை கவர்கள், அதிக மிருதுவான சீட் ஆகியவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதனால், ஓர் வழக்கமான பிரீமியம் அம்சங்கள் கொண்ட இன்னோவா கார் தற்போது லக்சூரியான வசதிகள் மற்றும் அதிக கவர்ச்சியான கார் மாடலாக மாறி இருக்கின்றது. ஆட்டோ ரவுண்டர்ஸ், வழக்கமான கார்களை மட்டுமல்ல சில உயர் வகை கார்களையும் அதிக சிறப்பம்சங்கள் கொண்டதாகவும், மிகவும் முரட்டுத் தனமான தோற்றம் கொண்டதாகவும் மாற்றி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்று வாகனங்கள் புதிய லுக்கிற்கு மாற்றப்படும் நிகழ்வு அரங்கேறுவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதுபோன்று பல்வேறு வாகனம் மாற்றும் சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இதுபோன்று வாகனங்களின் உண்மை தோற்றத்தை மாற்றுவதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 7, 2024, 20:08 [IST]
English summary
Old innova converted into brand new luxury car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X