இரு கார்களும் பார்க்க ஒரே மாதிரி தான் இருக்கும்... வாங்கும்போது இதையெல்லாம் செக் பண்ணுங்க!!
நிஸான் (Nissan) நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் புதிய மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் (Magnite Facelift) காரை கடந்த அக்டோபர் 4ஆம் தேதி அறிமுகம் செய்தது. முன்பு விற்பனையில் இருந்த மேக்னைட் காரின் விலை ரூ.5.99 லட்சமாக இருந்த நிலையில், புதிய மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் கார் வெறும் ரூ.10,000 அதிக விலை உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கூடுதல் தொகைக்கு ஏற்ப மேக்னைட் காரில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களை விவரிக்கும் வகையில் இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
புதிய மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் கார் மூலமாக மிக முக்கியமாக மேக்னைட் காரின் வேரியண்ட்களின் பெயர்களை நிஸான் மாற்றியுள்ளது. வெளிநாடுகளில் விற்பனையில் உள்ளதை போன்றதான பெயர்கள் இந்தியாவிலும் மேக்னைட் காரில் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி, புதிய மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் கார் விசியா, விசியா+, அசெண்டா, என்-கனெக்ட்டா, டெக்னா மற்றும் டெக்னா+ என்கிற வேரியண்ட்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முன்பு இந்த பெயர்கள் எக்ஸ்.இ, எக்ஸ்.எல், எக்ஸ்வி எக்ஸி, எக்ஸ்வி மற்றும் எக்ஸ்வி ப்ரீ என்கிற பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தன. பழைய மேக்னைட் மற்றும் புதிய மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் என இரண்டையும் விவரிக்கும் வீடியோவில், இரு கார்களும் ஒரே மாதியாக கருப்பு நிறத்தில் நிற்கின்றன. மேலும், இவை இரண்டும் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய மேக்னைட்டின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்கள் ஆகும்.
இதில் பழைய மேக்னைட் காருக்கு ஏற்கனவே ஓனர் இருப்பது காரை பார்த்தாலே தெரிகிறது. அதுமட்டுமின்றி, இந்த பழைய மேக்னைட் காரில் வித்தியாசமான மியுசிக் சிஸ்டம் உள்ளது. இது நிஸான் தொழிற்சாலையில் பொருத்தப்படுவதில்லை. இரண்டும் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் கார்கள் என்றாலும், வெளிப்பக்க தோற்றத்தில் இரண்டிற்கும் இடையே நிறைய வித்தியாசங்களை கண்டுப்பிடிக்க முடிகிறது.
குறிப்பாக, கார்களின் முன்பக்கத்தில் உள்ள வித்தியாசங்களை எளிதாக அடையாளம் காண முடிகிறது. கிரில் பகுதியின் பேட்டர்ன் சற்று மாற்றப்பட்டுள்ளதையும், கிரில் பகுதிக்கு இரு பக்கங்களிலும் தடிமனான க்ரோம் ட்ரிம்கள் கொடுக்கப்பட்டுள்ளதையும் பார்க்கலாம். க்ரோம் பேனல்கள் கூடுதல் தடிமனாக்கப்பட்டு உள்ளதால் கிரில் பகுதிக்கும் ஹெட்லேம்ப்களுக்கும் இடையே இடைவெளி குறைந்துள்ளது. முன்பக்க பம்பரில் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் மற்றும் பெரிய அளவில் ஃபாக் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றை பழைய மேக்னைட் கார் முற்றிலுமாக வித்தியாசமான டிசைனில் கொண்டிருந்தது. கார்களின் பக்கவாட்டில் பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் காரில் க்ரோம் டோர் ஹேண்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. முந்தைய மாடலில் காரின் உடல் நிறத்தில் இந்த ஹேண்டில்கள் வழங்கப்பட்டன. மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் காருக்கு உள்ளே பின் இருக்கை வரிசையை 60:40 என்கிற விகிதத்தில் பிரித்துக் கொள்ள முடியும்.
மற்றப்படி, காருக்குள் லேஅவுட் இரண்டிலும் ஒரே மாதிரியாகவே உள்ளது. இந்த வீடியோவில் காட்டப்படுவது புதிய மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் காரின் விசியா வேரியண்ட் ஆகும். இதில் கதவுகளின் உட்பக்க பேனல்கள் சிறப்பாக ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. காருக்கு உள்ளே கலர் ஆப்ஷன்களும் மாற்றப்பட்டுள்ளன. பழைய மேக்னைட்டில் வெறும் 2 ஏர்பேக்குகள் மட்டுமே கொடுக்கப்பட்டன. ஆனால், புதிய மாடலில் 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
பழைய மேக்னைட் எக்ஸ்.இ வேரியண்ட்டில் பின் வரிசை இருக்கையில் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் கப் ஹோல்டர்கள் கொடுக்கப்படவில்லை. ஆனால், புதிய மேக்னைட் விசியா வேரியண்ட்டில் இவை அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன. புதிய மேக்னைட்டில் ஸ்மார்ட்போனை வைப்பதற்காக கூட இடவசதி உள்ளது. மேலும், குழந்தைகளை அமர வைப்பதற்கான இருக்கையை பொருத்திக் கொள்ள கொக்கிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய மேக்னைட்டில் நிறைய விஷயங்களை புதியதாக நிஸான் கொண்டுவந்துள்ளது. இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், இந்த அப்டேட்களை எந்தவொரு கூடுதல் விலையும் இன்றி நிஸான் கொண்டுவந்துள்ளது. அதாவது, மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் காரின் ஆரம்ப விலையும் ரூ.5.99 லட்சமாக தொடர்கிறது. பழைய மேக்னைட் காரில் எக்ஸ்.இ வேரியண்ட்டை நிறைய பேர் வாங்கவில்லை. ஆனால், புதிய மாடலில் விசியா வேரியண்ட்டை தைரியமாக வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








