15 நிமிடத்தில் சார்ஜ் ஏறிவிடும் எலெக்ட்ரிக் ஆட்டோ அறிமுகம்! முழு விபர வீடியோ!

ஒமேகா செக்கி மொபிலிட்டி நிறுவனம் எக்ஸ்போனென்ட் எனர்ஜி என்ற நிறுவனத்துடன் சேர்ந்து விரைவில் சார்ஜ் ஏறக்கூடிய எலெக்ட்ரிக் ஆட்டோ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவிற்கு ஒஎஸ்எம் ஸ்டிரீம் சிட்டி குவிக் என நிறுவனம் பெயர் வைத்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ மற்ற எலெக்ட்ரிக் ஆட்டோவை விட வித்தியாசமான அம்சம் கொண்டதாக இருக்கிறது.

ஒமேகா செக்கி மொபிலிட்டி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆட்டோ ரூபாய் 3.24 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவின் அறிமுகம் குறித்த விரிவான தகவல்களை நாங்கள் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளோம். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்த ஆட்டோவின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த ஆட்டோவை வாங்குபவர் அதை முழு பேட்டரியையும் 15 நிமிடத்தில் சார்ஜ் ஏற்றுக்கொள்ளும் தொழில்நுட்பத்துடன் சேர்ந்து இந்த ஆட்டோ விற்பனையாகிறது. இதனால் நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுபவர்கள் விரைவாக ஒவ்வொரு ட்ரிப்புக்கும் இடையே சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும்.

omega seiki electric auto

இதனால் ஆட்டோ டிரைவர்கள் தற்போது சம்பாதிக்கும் பணத்தை விட 30 சதவீதம் கூடுதலாக வருமானம் ஈட்ட முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் ஆட்டோக்களை வாங்கும் வாகன உரிமையாளர்கள் இனி எலெக்ட்ரிக் ஆட்டோவையும் கருத்தில் கொள்ளை இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. இந்த வாகனம் ஆட்டோமொபைல் சந்தையில் மிகப்பெரிய புரட்சியை செய்யும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 13, 2024, 21:36 [IST]
English summary
Omega seiki launches passenger electric three wheeler watch video
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+