ரூ8 லட்சத்தில் புதிய 4வீலர்! ஓஎஸ்எம் நிறுவனர் சொன்ன எக்ஸ்க்ளூசிவ் தகவல்!

ஒமேகா சிக்கி மொபிலிட்டி நிறுவனம் தற்போது சன் மொபைலிட்டி நிறுவனத்துடன் சேர்ந்து ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து புதிய தயாரிப்புகளை வெளியிட உள்ளன. இந்த நிகழ்வின் போது ஒமேகா சிட்டி மொபைலிட்டி நிறுவனத்தின் நிறுவனர் உதய் நரங் என்பவர் நமது டிரைவ்ஸ்பார்க் தளத்திற்காக பிரத்தியேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பல முக்கியமான தகவல்களை வழங்கி உள்ளார்.

இந்த பேட்டியில் அவர் ஒமேகா சிட்டி மொபிலிட்டி மற்றும் சன் மொபிலிட்டி ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் சுத்தமான, பசுமையான போக்குவரத்து கொண்டு வர வேண்டும் என்பதற்காக இணைந்துள்ளதாக கூறியுள்ளார் . இந்தியா அதிக மாசு அடைந்த தேசமாக இருக்கிறது. இதை மாற்றுவதற்கு ஃபாஸ்ட் சார்ஜிங், பேட்டரி ஸ்வாப்பிங் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் இருக்கிறது. இந்த தொழில்நுட்பங்களை அந்நிறுவனங்கள் வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

osm new commercial ev

இன்று பேட்டரி டெக்னாலஜி தொழில்நுட்பம் ஆட்டோமொபைல் துறையில், பல்வேறு விதமாக பிரிந்து இருக்கிறது. ஸ்வாப்பிங் டெக்னாலஜி, ஃபாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜி என பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்திய மக்களுக்கு பல்வேறு விதமான தேவைகள் இருக்கிறது. இது தேவைகளை எல்லாம் ஓமேகா சிக்கி மொபைலிட்டி நிறுவனம் தீர்த்து வைக்கும் வகையில் பல தயாரிப்புகளை குறைந்த விலையில் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

கமர்சியல் வாகன பிரிவில் ஏற்கனவே ஒமேகா சிக்கி மொபிலிட்டி நிறுவனம் எம்1கேஏ என்ற கமர்ஷியல் வாகனத்தை விற்பனை செய்து வருகிறது. இது ஒரு ஒன் டன் கொள்ளளவு கொண்ட டிரக்காக விற்பனையாகி வருகிறது. இதற்கிடையில் அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக வழங்கப்படும் மானியத்தில் தற்போது குழப்பம் நிலவி வருகிறது. அவர் நமது தளத்திற்கு அளித்த பிரத்தியேக வீடியோவை நீங்கள் கீழே காணலாம்

இந்நிலையில் ஒமேகா சிக்கி மொபைல் நிறுவனம் அடுத்த 4 முதல் 5 மாதத்திற்குள் ரூபாய் 8 லட்சத்திற்குள் புதிய 4 வீலர் வாகனம் ஒன்றை களம் இறக்கப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த வாகனம் பேட்டரி ஷாப்பிங் தொழிற்நுட்பத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இவர் கூறியதை வைத்து பார்க்கும் போது இது ஒரு கமர்சியல் வாகனமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

என்ன வகையான கமர்ஷியல் வாகனம் வரப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதில் என்ன அம்சங்கள் இருக்கிறது என்பதையும், இந்த வாகனத்தின் அறிமுகத்தின் போது தான் தெரியவரும். இந்தியாவில் கமர்ஷியல் வாகன செக்மெண்டில் இந்த எலெக்ட்ரிக் வாகனம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் இவர் கூறும் போது ஒமேகா சிக்கி மொபைலிட்டி நிறுவனம் பெண்களுக்கான வாகனங்களை தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்துள்ளார். இன்று பெண்கள் சமூகம் கமர்சியல் மற்றும் பயணிகள் வாகன செக்மெண்டில் டிரைவர்களாக வர துவங்கி விட்டார்கள். அவர்களுக்கான பிரத்தேக தேவைகள் இருக்கிறது. அந்த தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வாகனங்களை தயாரித்து பெண்களுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது மட்டுமல்லாமல் இந்நிறுவனம் இந்திய வர்த்தகத்தை தாண்டி சர்வதேச வர்த்தகத்திலும், கால் தடம் பதியப்போவதாக தெரிவித்துள்ளார். விரைவில் இந்நிறுவனம் ஆப்பிரிக்காவில் தங்களது வாகனங்களை விற்பனை செய்வதற்கான அறிவிப்புகளை வெளியிடும் எனவும் கூறியுள்ளார். ஆப்பிரிக்காவை தாண்டி மற்ற நாடுகளுக்கும் இந்நிறுவனம் வாகனங்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு வருவதாகவும் அவர் பேசியுள்ளார்.

பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேசியா, கொலம்பியா, சிலி போன்ற நாடுகளிலும் ஆப்பிரிக்காவில் பல்வேறு பகுதிகளில் இந்நிறுவனம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக தங்கள் வாகனங்களை சோதனை செய்ய துவங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச அளவில் வாகனங்களை ஏற்றுமதி செய்வது குறித்து அடுத்த மூன்று முதல் ஐந்து மாதத்திற்குள் முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த 20 நாட்களில் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து நாட்டின் பல பகுதிகளில் மைக்ரோ மொபிலிட்டிக்காக புதிய வாகனத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான தகவல் எதையும் அவர் வெளியிடவில்லை இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எல்லாம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போதைய எலெக்ட்ரிக் வாகன பிரிவில் மிகப்பெரிய புரட்சியை ஏற்பட்டு வருகிறது என சொல்லலாம். பயணிகள் ஆட்டோ மற்றும் கமர்சியல் வாகனங்களை எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றுவதில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் இந்தியாவில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் மிகப்பெரிய மார்க்கெட் பங்கை விரைவில் பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, September 6, 2024, 23:56 [IST]
English summary
Osm new commercial ev low budget introduction soon uday narang
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+