டீ குடிக்குற நேரத்துல சார்ஜ் பண்ணிடலாம்! கம்மி ரேட்ல சூப்பரான எலெக்ட்ரிக் ஆட்டோ அறிமுகம்!
ஒமேகா செக்கி மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவில் எக்ஸ்போனென்ட் எனர்ஜி என்ற நிறுவனத்துடன் சேர்ந்து குறைந்த விலையில் எலக்ட்ரிக் ஆட்டோ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஓஎஸ்எம் ஸ்டிரீம் சிட்டி என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ மார்க்கெட்டில் உள்ள மற்ற எலெக்ட்ரிக் ஆட்டோக்களை விட வித்தியாசமானதாக இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஒமேகா செக்கி மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன செட்டாரில் முக்கியமான நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தற்போது எக்ஸ்போனென்ட் எனர்ஜி என்ற நிறுவனத்துடன் சேர்ந்து பயணிகள் எலெக்ட்ரிக் ஆட்டோவை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆட்டோவிற்கு ஓஎஸ்எம் ஸ்டிரீம் சிட்டி குயிக் என நிறுவனம் பெயர் வைத்துள்ளது.

இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவின் விலையைப் பொறுத்தவரை ரூபாய் 3,24,999 என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகமாகி உள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ மார்க்கெட்டில் உள்ள மற்ற எலெக்ட்ரிக் ஆட்டோவை விட சற்று வித்தியாசமான அம்சங்கள் கொண்டதாக இருக்கிறது. முக்கியமாக இதன் சார்ஜிங் அம்சம் அசர வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஓஎஸ் எம் ஸ்டீம் சிட்டி குயிக் ஆட்டோவை பொருத்தவரை 0 முதல் 100% சார்ஜை ஏற்றுக்கொள்ள வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது. இதற்காக எக்ஸ்போனென்ட் எனர்ஜி நிறுவனத்தின் ரேப்பிட் சார்ஜிங் நெட்வொர்க்கை இந்த ஆட்டோ பயன்படுத்துகிறது. இதனால் எலvக்ட்ரிக் ஆட்டோவை வாங்கி சார்ஜ் ஏற்ற அதிக நேரம் காத்திருக்க வேண்டிய தேவை இல்லை. உடனடியாக சார்ஜிங் செய்து கொள்ள முடியும்.

ஒஎஸ்எம் ஸ்டிரீம் சிட்டி குவிக் எலெக்ட்ரிக் ஆட்டோ புதிதாக வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 2 லட்சம் கிலோமீட்டர் அல்லது 5 ஆண்டுகள் வரை வாரண்டி வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஆட்டோவை வாங்க சிறப்பான பைனான்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதனால் இந்த ஆட்டோவை வாங்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் சுலபமாக இந்த ஆட்டோவை வாங்கி மாத தவணை செலுத்த முடியும்.
இந்த ஆட்டோக்களை சார்ஜ் செய்வதற்காக எக்ஸ்போனென்ட் எனர்ஜி நிறுவனம் தற்போது டெல்லி மற்றும் பெங்களூர் ஆகிய பகுதிகளில் 100 சார்ஜிங் ஸ்டேஷனுக்கு இந்த 2024-ம் ஆண்டு அமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும் சென்னை அகமதாபாத் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் தங்களது சார்ஜிங் ஸ்டேஷனுக்கு கொண்டுவர தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த ஓஎஸ்எம் ஸ்டிரீம் சிட்டி குவிக் ஆட்டோவை வாங்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஏற்கனவே அவர்கள் பயன்படுத்தி வரும் ஆட்டோவை விட இதில் கூடுதலாக பணம் சம்பாதிக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இதற்காக தான் 15 நிமிடத்தில் ஆட்டோ சார்ஜ் ஏற்றும் தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளார்கள். இதனால் ஒரு ரைடிற்க்கும் மற்ற ரைடிற்க்கும் இடையேயான காத்திருப்பு காலம் என்பது வெகுவாக குறைகிறது.
இதனால் சாதாரண ஆட்டோவை பயன்படுத்தும் ஆட்டோ ஓட்டுநர்கள் இந்த ஆட்டோவை வாங்கினால் அவர்களது வருமானம் 30 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. டீ குடிக்கும் நேரத்தில் ஆட்டோவை சார்ஜ் செய்து விட முடியும் என்பதால் பல ஆட்டோ ஓட்டுநர்கள் இந்த ஆட்டோவை வாங்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
இது குறித்து ஒமேகா ஸ்கை மொபிலிட்டி நிறுவனத்தின் சேர்மன் உதை கூறும் போது: " ஓஎஸ்எம் ஸ்டிரீம் சிட்டி குவிக் வாகனத்தை பொருத்தவரை பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தயாரிப்பாக நாங்கள் பார்க்கிறோம் 15 நிமிடத்தில் எங்கள் வாகனத்தை சார்ஜ் செய்து விட முடியும். இதனால் ஆட்டோ ஓட்டும் ஓட்டுநர்களுக்கு வருமானம் என்பது அதிகரிக்கும் இதனால் எதிர்காலத்தில் எங்கள் தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என நம்புகிறோம்.
எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் பெருநகரங்களில் போக்குவரத்து அமைப்பையே மாற்றி அமைக்கும் என எதிர்பார்க்கிறோம். டிரைவர்களுக்கான வாய்ப்புகளை வழங்க நாங்கள் ஆர்வமுடன் இருக்கிறோம்" எனக் கூறினார். ஓஎஸ்எம் ஸ்ட்ரீம் சிட்டி ஆட்டோவை பொருத்தவரை தலைசிறந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வாகனமாக இருக்கிறது.
இந்த வாகனத்தின் பேட்டரியை பொருத்தவரை 8.8 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு தடவை சார்ஜ் செய்தால் 126 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் நீண்ட தூரம் இந்த வாகனங்களில் பயணிக்க முடியும். மேலும் ஆங்காங்கே சார்ஜ் செய்யும் ஸ்டேஷனுக்கும் அமைக்கப்படுவதால் விரைவாக இந்த ஆட்டோவை சார்ஜ் செய்ய முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொது போக்குவரத்தில் ஏற்று வாகனங்களை கொண்டு வருவதில் இருக்கும் பெரிய சிக்கல் அதை சார்ஜ் செய்யும் நேரம் தான். ஒமேகா நிறுவனம் இந்த பிரச்சினையை தீர்க்கும் வகையில் குறைவான நேரத்தில் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளதால் இந்த ஆட்டோ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் இந்த ஆட்டோவை விரும்பி வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








