சொகுசு கார்களையே தூக்கி சாப்பிடும் மஹிந்திரா காரின் விலை இவ்ளோதானா! ஷோரூம்களில் திருவிழா மாதிரி கூட்டம் கூடுது

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது ஏற்கனவே விற்பனையில் இருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) காரின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) வெர்ஷன் ஆகும். பல்வேறு அப்டேட்களுடன், பெயர் மாற்றப்பட்டு விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காருக்கு புக்கிங் (Booking) தொடங்கப்பட்ட வெறும் 1 மணி நேரத்திலேயே, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து விட்டனர். இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

இந்த சூழலில், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் டெலிவரி பணிகள் கடந்த மே 26ம் தேதி தொடங்கப்பட்டன. மஹிந்திரா நிறுவனம் தற்போது வரை மொத்தம் 2,500 வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார்களை டெலிவரி செய்துள்ளதாக அறிவித்துள்ளது. வரும் நாட்களில் டெலிவரி பணிகள் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mahindra XUV 3XO

அதற்கு முன்னதாக மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார்களை வாடிக்கையாளர்கள் டெலிவரி எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra) எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளார். ட்விட்டர்தான் தற்போது எக்ஸ் என அழைக்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் டெலிவரி நிகழ்ச்சி நடக்கும் இடங்கள் எல்லாம் திருவிழா போல் காணப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் மத்தியில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காருக்கு மிக பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) முதல் காரணம் ஆகும்.

Over 2 500 Mahindra XUV 3XO SUVs Delivered In 3 Days

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில், வெவ்வேறு வகையான ட்யூனிங்கில் 2 டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை இரண்டுமே 1.2 லிட்டர் இன்ஜின்கள்தான். இதுதவிர 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷனும், இந்த காரில் வழங்கப்படுகிறது. ஆக மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்திருப்பதற்கான 2வது காரணம் அதிநவீன வசதிகள் (Features) ஆகும். லெவல் 2 அடாஸ், பனரோமிக் சன்ரூஃப், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 10.25 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இவை எல்லாம் தவிர, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, லெதரேட் அப்ஹோல்ஸ்ட்ரி, ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகளும், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு வசதிகள் வாரி வழங்கப்பட்டிருந்தாலும் கூட, மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காருக்கு சவாலான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் ஆரம்ப விலை வெறும் 7.49 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 15.49 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்கள், அதிநவீன வசதிகள் மற்றும் சவாலான விலை நிர்ணயம் ஆகிய அனைத்து அம்சங்களும் ஒன்று சேர்ந்துதான், இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை வெற்றிகரமான ஒரு தயாரிப்பாக மாற்றியுள்ளன என நாங்கள் கருதுகிறோம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளதால், கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) ஆகிய கார்களுக்கு விற்பனையில் நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 29, 2024, 18:58 [IST]
English summary
Over 2500 mahindra xuv 3xo suvs delivered in 3 days video
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+