பாகிஸ்தானில் புதுசா கார் வாங்க ஆள் இல்ல!! நம் இந்தியா எந்த அளவுக்கு முன்னேறி இருக்கு பாருங்க...
பாகிஸ்தான் (Pakistan), நம் இந்தியா அளவிற்கு மக்கள் தொகையை கொண்ட நாடு கிடையாது. இதனாலேயே நம் நாட்டில் விற்பனையாகும் அளவிற்கு அந்த நாட்டில் கார்கள் விற்பனையாகுவது இல்லை. என்றாலும், பாகிஸ்தானில் சமீப காலமாக கார்கள் விற்பனை வழக்கத்தை காட்டிலும் வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு காரணம் என்ன என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
பாகிஸ்தானில் அதிக எண்ணிக்கையில் கார்கள் உற்பத்தி தொழிற்சாலை கிடையாது. இதனால், இந்தியா உள்பட வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களே பாகிஸ்தானில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. விலையுயர்ந்த சொகுசு கார்கள் மட்டுமில்லாமல், விலை குறைவான பட்ஜெட் விலை கார்கள் கூட இவ்வாறான முறையில் வெளிநாடுகளில் இருந்து பாகிஸ்தானில் இறக்குமதி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இதன் காரணமாக, மற்ற நாடுகளை காட்டிலும் பாகிஸ்தானில் கார்களின் விலை சற்று அதிகமாக இருந்துவந்தது. இதனால், அந்த நாட்டில் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் எப்போதும் குறைவாகவே இருக்கும். இந்த நிலையில், வெளிநாட்டு இறக்குமதியை குறைத்து, உள்நாட்டு உற்பத்தியையும், வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும் விதமாக கடந்த வருடத்தில் பாகிஸ்தான் அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அத்துடன், வெளிநாட்டு கார் இறக்குமதிகளுக்கு அதிரடியாக அதிக வரி விதிக்கப்பட்டது. இதன் விளைவாக, ஏற்கனவே குறைவாக இருந்த கார்கள் விற்பனை மேலும் வெகுவாக குறைந்துள்ளது. 1 லிட்டர் என்ஜின் பொருத்தப்படும் சிறிய ரக கார்களில் இருந்து, அளவில் பெரிய சொகுசு கார்கள் வரையில் என அனைத்து கார்களின் விற்பனையும் பாகிஸ்தானில் குறைந்துள்ளது.

பாகிஸ்தான் ஆட்டோமொபைல் வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2023ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாகவே வெறும் 30,662 கார்கள் மட்டுமே பாகிஸ்தானில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், பாதி 14,584 கார்கள் 1,000சிசி-க்கும் குறைவான என்ஜினை கொண்ட கார்களாகும். அதாவது, அளவில்-சிறிய 800சிசி & 900சிசி என்ஜினை கொண்ட கார்கள் ஆகும்.
பாகிஸ்தானில் மாருதி கிடையாது. சுஸுகி மட்டுமே தனித்து செயல்படுகிறது. அந்த நாட்டில் ஓரளவிற்கு அதிகம் விற்பனையாகும் கார்களாக சுஸுகி போலன் (ஆம்னி வேன்) மற்றும் ஆல்டோ விளங்குகின்றன. இவை 1,000சிசி-ஐ காட்டிலும் குறைவான சிசி என்ஜின் கொண்ட கார்களாகும். 1,000சிசி கார்களை பொருத்தவரையில், சுஸுகி கல்டஸ் மற்றும் வேகன்ஆர் கார்களை பாகிஸ்தான் மக்கள் அதிகம் தேர்வு செய்கின்றனர்.

இதில் சுஸுகி கல்டஸ் ஆனது நம் இந்தியாவில் விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி செலேரியோ கார் ஆகும். சுஸுகியின் இந்த 1 லிட்டர் என்ஜின் கார்கள் கடந்த ஆண்டில் மொத்தம் 3,737 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் வேகன் ஆர் கார்கள் மட்டும் ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகுகிறது. கொஞ்சம் ஆற்றல்மிக்க 1.3 லிட்டர் என்ஜின்களுடன் ஹோண்டா சிட்டி மற்றும் சிவிக், சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் டொயோட்டா கரோல்லா கார்கள் பாகிஸ்தானில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த 1.3 லிட்டர் என்ஜின் கார்கள் மொத்தமாக கடந்த ஆண்டில் 12,341 யூனிட்கள் அந்த நாட்டில் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ஏற்கனவே கூறியதுபோல், பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பால் கடந்த 2023ஆம் ஆண்டில் கார்கள் விற்பனை குறைந்துள்ளது. ஆனால், இதற்கு முந்தைய 2022இல் ஓரளவிற்கு சிறப்பாகவே இருந்தது. எந்த அளவிற்கு என்றால், 2023ஐ காட்டிலும் 2022ஆம் ஆண்டில் டபுள் மடங்கு அதிகமாக 68,912 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 68,912 கார்கள் விற்பனை எண்ணிக்கை கூட நம் இந்தியா உடன் ஒப்பிடுகையில் எங்கேயோ உள்ளது. ஏனெனில், நம் நாட்டில் வருடத்திற்கு 10, 15 லட்ச கார்கள் விற்பனையாகுகின்றன. இருப்பினும், தங்களது நாட்டில் இது ஆட்டோமொபைல் துறைக்கு கடினமான காலம் என்றும், ஆனால் இந்த நடவடிக்கையால் வருங்காலத்தில் பயன் இருக்கும் என்றும் பாகிஸ்தான் அரசு கூறிவருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்...


Click it and Unblock the Notifications









