இந்தியா வெறும் 15 மணி நேரத்தில் செய்யும் விஷயத்தை பாக். ஒரு மாசம் கஷ்டபட்டு பண்ணுறாங்க! என்ன காரணம் தெரியுமா?

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு காரணமாக அந்நாட்டில் ஆட்டோமொபைல் விற்பனை மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது. தற்போது அந்நாட்டில் உள்ள ஆட்டோமொபைல் விற்பனை சங்கம் சார்பில் கடந்த மார்ச் மாத விற்பனை விபரம் வெளியாகி உள்ளது. இதில் அதிர்ச்சிகரமான ஒரு தகவலும் நமக்கு கிடைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பாகிஸ்தான் ஆட்டோமொபைல் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கடந்த மார்ச் மாத பயணிகள் வாகன விற்பனை குறித்த விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி அந்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முழுவதுமாக மொத்தமே 7,672 கார்கள் தான் விற்பனையாகி உள்ளது. இது கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாத விற்பனையை ஒப்பிடும்போது 6.1 சதவீதம் குறைவாகும்.

Pakistan Car Sales March 2024

பாகிஸ்தான் நாட்டில் விற்பனையாகும் கார்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் விற்பனையாகும் கார்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது மிகப்பெரிய அளவுக்கு வித்தியாசம் ஏற்படுகிறது. பாகிஸ்தான் நாட்டில் மிகப்பெரிய அளவிற்கு பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. இதுதான் ஆட்டோமொபைல் துறையை நேரடியாக பாதித்துள்ளது. பண வீக்கம் காரணமாக அந்நாட்டில் வாகன உற்பத்தி செய்ய உதிரி பாகங்கள் வாங்கும் விலை அதிகரித்துள்ளது.

மேலும் அந்நாட்டு அரசாங்கம் வாகனங்களை வாங்குவதற்கு மிக அதிகமான வரியையும் விதித்துள்ளது. இதன் காரணமாக வாகனங்களின் விலை அதிகரித்துள்ளது. மக்களால் சுலபமாக வாகனங்களை வாங்க முடியாத சூழ்நிலை உள்ளது. இது ஒரு புறம் இருக்க இந்திய மார்க்கெட்டில் வாகனங்களை வாங்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மக்கள் பல சுலபமாக கார்களை வாங்க கூடிய சூழ்நிலை இந்தியாவில் நிலவுகிறது.

Pakistan Car Sales March 2024

இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த மார்ச் மாதம் மொத்தம் 3.69 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி உள்ளன இது கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாத விற்பனை விபரங்களை ஒப்பிடும்போது சுமார் 10 சதவீதம் அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் வாகனங்களின் எண்ணிக்கையை தின விற்பனை அடிப்படையில் பார்க்கும்போது சுமார் 11,900 வாகனங்கள் தினமும் இந்தியாவில் விற்பனையாகிறது.

அதாவது 1மணி நேரத்திற்கு சராசரியாக 495 வாகனங்கள் இந்தியாவில் விற்பனையாகி வருகின்றன. இதை பாகிஸ்தான் நாட்டில் உள்ள கடந்த மார்ச் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது அந்நாட்டில் மொத்தமே 7672 பயணிகள் வாகன மட்டுமே விற்பனையாகி உள்ளன. இதை பார்க்கும் போது பாகிஸ்தான் நாட்டில் ஒரு மாதம் முழுவதும் விற்பனையான விற்பனை எண்ணிக்கை இந்தியாவில் அரை நாளில் விற்பனையாகி விடுகிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் 15 மணி நேரத்தில் விற்பனையாகிறது.

Pakistan Car Sales March 2024

சமீப ஆண்டுகளாக தெற்காசிய நாடுகளில் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. ஆனால் அதில் பாகிஸ்தான் தன்னை வளர்த்துக் கொள்ள திண்டாடி வருகிறது. பாகிஸ்தானில் ஏற்கனவே பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் ஆலைகளை மூடி விட்டார்கள். அங்கு செயல்படும் ஒரு சில வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கூட தங்கள் தொழிலை முற்றிலுமாக மூடப் போவதாக பேச்சுவார்த்தை இழந்து வருகின்றன.

அந்நிறுவனங்கள் எல்லாம் பாகிஸ்தான் இந்த பொருளாதார சிக்கல்களில் இருந்து விரைவில் மீண்டு எழுந்து வரும் என்ற நம்பிக்கையில் தொழிலை நடத்தி வருகிறது. ஆனால் நீண்ட ஆண்டுகளாக இந்த பொருளாதார நெருக்கடி என்பது பாகிஸ்தானில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் முற்றிலுமாக பாகிஸ்தானில் இருந்து வெளியேறக் கூட வாய்ப்பு இருக்கிறது.

பாகிஸ்தானில் உள்ள பொருளாதார சிக்கல் தீர்ந்தால் மட்டுமே அந்நாட்டில் வாகன விற்பனை என்பது மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பும். தற்போது அந்நாட்டில் செகண்ட் ஹாண்டில் வாகனங்களை வாங்கும் மார்க்கெட் மிகப்பெரிய அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. புதிய கார்களை வாங்க முடியாத பலர் செகண்ட் ஹேண்ட் கார்களில் கார்களை வாங்குகிறார்கள். இதனால் வரி பிரச்சனை பெரிய அளவிற்கு தவிர்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாகிஸ்தானில் ஆட்டோமொபைல் சந்தை மிக மந்தமாகி உள்ளதற்கு பொருளாதார சிக்கல் ஒரு பக்கம் காரணமாக இருந்தாலும், அரசு விதிக்கும் வரி மற்றொரு பக்கம் காரணமாக இருக்கிறது. அந்நாட்டில் சாதாரண கார்களுக்கு அதிகமான வரி செலுத்த வேண்டியது இருப்பதால் மக்கள் சாதாரண கார்களை கூட சொகுசு கார்களை வாங்கக்கூடிய பணத்தை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு அந்நாட்டு அரசு விரைவில் தீர்வு காண வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, April 26, 2024, 12:56 [IST]
English summary
Pakistan car sales march 2024 auto industry crash
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X