கல்யாண ஊர்வலத்துக்கு எடுத்துட்டு போக ஏற்ற கார்.. 50யூனிட்டுகள் மட்டுமே விற்பனைக்கு! மிட்சம்மர் கார் வெளியீடு!
உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனங்களான மோர்கான் மோட்டார் கம்பெனி (Morgan Motor Company)-யும், பினின்ஃபரினா (Pininfarina)-வும் இணைந்து இரண்டு இருக்கைகளை மட்டுமேக் கொண்ட கார் மாடலை வெளியீடு செய்திருக்கின்றன. மிட் சம்மர் (Midsummer) எனும் பெயரிலேயே அது வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது.
இந்த கார் மாடல் பழைய விண்டேஜ் கார்களை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக, திருமண ஊர்வலங்களில் பயன்படுத்தப்படும் காரை பிரதிபலிக்கும் வகையிலும் அந்த கார் மாடல் காட்சியளிக்கின்றது. ஆனால், இது ஓர் அரிய வகை கார் மாடல் ஆகும். ஒட்டுமொத்தமாக விற்பனைக்கு என 50 யூனிட்டுகளை மட்டுமே இரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கி இருக்கின்றன.

இந்த காரில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க முடியும். மோர்கான் நிறுவனத்தின் முதன்மையான தயாரிப்பான பிளஸ் சிக்ஸ் (Plus Six) கார் மாடலை தழுவியே இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. பிளஸ் சிக்ஸ் ஓர் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் ஆகும். கைகளால் உருவாக்கப்பட்ட உடலைக் கொண்டே இந்த கார் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.
இந்த காரின் உருவாக்கத்தில் இரண்டு நிறுவனங்களின் வடிவமைப்பாளர்களும் இணைந்து வேலையைச் செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. தங்கள் இணைவின் 200 நூறாவது ஆண்டை முன்னிட்டே இந்த காரை தாங்கள் உருவாக்கி இருப்பதாக இரு நிறுவனங்களும் தெரிவித்து இருக்கின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் கார் உற்பத்தியை ஆட்டோமேட்டிக் எந்திரங்கள் மேற்கொள்ளும் வகையில் மாறிவிட்டன.

ஆனால், மோர்கான் நிறுவனம் இப்போதும் அதன் கார்களை கைகளாலேயே உருவாக்கி வருகின்றது. 1914 ஆம் ஆண்டுல் இந்த பணிகளை அது மேற்கொண்டு வருகின்றது. தற்போது வெளியீடு செய்யப்பட்டு இருக்கும் கார் மாடலை வெறும் 50 யூனிட்டுகளே உற்பத்தி செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
ஆனால், அவை அனைத்தும் ஏற்கனவே விற்பனையாகிவிட்டதாகவும் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. ஆகையால், இனி அந்த காரை வாங்க முடியுமா என்பது மிகப் பெரிய சந்தேகமே. இந்திய மதிப்பில் ஒவ்வொரு யூனிட்டும் ரூ. 2.11 கோடிக்கே விற்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பகழ்பெற்ற எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

அந்த எஞ்சின் அதிகபட்சமாக 340 எச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இதனால் மணிக்கு 267 கிமீ வேகத்தில் செல்ல முடியும். மேலும், வெறும் 4.2 செகண்டுகளிலேயே இந்த கார் மாடல் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும்.
இத்தகைய சூப்பரான கார் மாடலாகவே மோர்கான் மிட்சம்மர் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இந்த காரின் உற்பத்தி பணிகள் 2025 ஆண்டிற்குள் முடிவடைந்துவிடும் என கூறப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த காரை தன்னுடைய லேட்டஸ்ட் பிளாட்ஃபாரமான சிஎக்ஸ் ஜெனரேஷன் பான்டெட் அலுமினியத்திலேயே உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த காரில் இலகு ரக எடைக் கொண்ட 19 அங்குல வீலே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, தனித்துவமான ஸ்டைலைக் கொண்ட ஹெட்லைட், சில்வர் நிற அணிகலன்கள், குதிரை லாடம் வடிவிலான கிரில், நீளமான வால் பகுதி என ஏகப்பட்ட சிறப்புகளை இந்த கார் மாடல் தாங்கி இருக்கின்றது.
இத்துடன் இந்த கார் மாடலின் உட்பக்கமும் மிகவும் கவர்ச்சியானதாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. அந்தவைகிய்ல, புதிய அனலாக் பட்டன்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், அதிக பிரீமியமான லுக்கிற்காக மர பேல்களால் இதன் உட்பக்கம் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. கதவு, டேஷ்போர்டு, கியர்பாக்ஸ் இருக்கும் இடம் என பல பகுதிகளில் மரத்தலான பேனல்களைக் காண முடிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் யாரேனும் இந்த காரை வாங்கி இருக்கின்றார்களா என்பது இதுவரை தெரியவில்லை. அதேவேளையில், இந்த கார் விற்பனைக்கு வந்ததே பலருக்கு தெரியவில்லை. இந்த நிலையிலேயே ஒட்டுமொத்த யூனிட்டுகளும் விற்பனையாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரித்த அரிய வகை தயாரிப்பாக இந்த கார் மாடல் பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









