எங்களுக்கு டாடா, மாருதி தான் முக்கியம், டெஸ்லாவுக்கு எல்லாம் சலுகை கிடையாதுன்னு சொன்ன மத்திய அரசு!
இந்தியா டெஸ்லா நிறுவனத்திற்காக எந்தவித சட்ட விதிமுறை மாற்றங்களையும் செய்யாது என மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சரான பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். எந்தவித சட்ட விதிமுறை மாற்றமும் இல்லாமல் சர்வதேச அளவில் இருந்து எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களின் முதலீட்டை இந்தியா ஈர்க்கும் எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
தற்போது இந்தியா உலகின் மிகப்பெரிய மூன்றாவது ஆட்டோமொபைல் நிறுவனமாக மாறி உள்ளது. அமெரிக்கா சீனாவிற்கு பிறகு இந்தியாவில் தான் அதிகமான ஆட்டோமொபைல் வாகனங்கள் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில் இந்திய மார்க்கெட்டை பிடிப்பதற்காக டெஸ்லா நிறுவனம் தற்போது முயற்சி செய்து வருகிறது. டெஸ்லா நிறுவனம் தான் தற்போது எலெக்ட்ரிக் வாகன தானியங்கிக் கார்களை தயாரிக்கும் சிறந்த நிறுவனமாக இருக்கிறது.

இந்நிறுவனம் இந்தியாவில் கார்களை விற்பனை செய்ய கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முயற்சி செய்த நிலையில் அது தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு தற்போது மீண்டும் டெஸ்ட்ல நிறுவனம் இந்தியாவிற்கு வர முயற்சி செய்து வருகிறது. டெஸ்லா நிறுவனம் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்ய அனுமதி கோரி வருகிறது. அதற்கான அனுமதி வழங்குவதில் அந்நிறுவனம் குறைவான இறக்குமதியை விதிக்க வேண்டும் எனக் கோரி உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை முழுமையாக கட்டமைக்க பட்ட காரை இந்தியாவிற்கு கொண்டுவர 100 சதவீதம் இறக்குமதி வரியை செலுத்த வேண்டும். ஆனால் டெஸ்லா நிறுவனம் தங்கள் நிறுவனத்திற்கு குறைவான இறக்குமதி வரியை செலுத்தினால் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக நிபந்தனை விதித்து வருகிறது. தற்போது இந்த விவகாரம் கடந்த சில மாதங்களாக பெரும் சர்ச்சையாக வெடித்து வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான பியூஸ் கோயல் இது குறித்து சமீபத்தில் வெளியான பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் இந்தியா எந்த ஒரு தனி நிறுவனத்திற்காகவும் தனது சட்ட விதிமுறைகளை மாற்றாது எனவும் ஆனால் தொடர்ந்து சர்வதேச அளவில் உள்ள எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களை இந்தியாவில் முதலீடு செய்ய வைக்க முயற்சி செய்யும் எனவும் கூறியுள்ளார்.
டெஸ்லா நிறுவனத்திற்கு இந்தியாவில் வாகனங்களை விற்பனை செய்ய வேண்டும் என்றால் இந்தியர்கள் மத்தியில் தங்கள் வாகனம் எடுபடுமா என்பதை சோதனை செய்து பார்க்க குறைந்த விலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய திட்டமிட்டு வருகிறது. ஆனால் டெஸ்லா நிறுவனத்திற்கு மட்டும் இப்படியான சலுகைகளை வழங்கினால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என மத்திய அரசு அதை தவிர்த்து வருகிறது.

இந்நிலையில் தான் டெஸ்லா நிறுவனம் தங்களுக்கு குறிப்பிட்ட சில காலம் மட்டும் வரிசலுகைகளை வழங்கினால் அதன் பின்னர் இந்தியாவில் முதலீடு செய்வோம் என கூறி வந்தது. ஆனால் சொன்னபடி முதலீடு செய்யவில்லை என்றால் இந்தியாவிற்கு பெரும் நஷ்டம் இந்த நஷ்டத்தை ஈடு கட்டுவது என்பது அந்நிறுவனத்தில் முடியாது என்பதால் இந்த ஆலோசனை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் டெஸ்லா நிறுவனத்திற்கு எந்தவிதமான இறக்குமதி வரி சலுகையும் கொடுக்க முடியாது என்பதை தெள்ளத்தெளிவாக கூறியுள்ளார். அது மட்டுமல்ல இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் ஆலை அமைக்க விரும்பினால் அதற்கான சலுகைகளை பெற்றுத்தர மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஆலையே அமைத்தால் உலகில் டெஸ்லா நிறுவனத்தின் ஆறாவது ஆலை இந்தியாவில் அமைய பெறும். நிறுவனத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பணத்தை இந்தியாவிற்கு முதலீட்டாக கொண்டு வருவதற்கான வரி குறைப்பு, உள்நாட்டில் வர்த்தகம் செய்வதற்கான பிரச்சினைகளை தீர்த்து வைப்பது, பண வீக்கத்தை குறைப்பது, குறைவான வட்டியில் கடன் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை டெஸ்டால் நிறுவனத்தால் பெற முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்குள் வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் இந்திய அரசு சட்ட விதிமுறைகளை மீறி டெஸ்ட் நிறுவனத்தால் உள்ளே வர முடியாது என தெரிவித்துள்ளது. சட்ட விதிமுறைக்குட்பட்டு இறக்குமதி செய்து வாகனங்களை விற்பனை செய்யலாம் அல்லது இந்தியாவிலேயே ஆலையை அமைக்கலாம் என தொடர்ந்து திட்டவட்டமாக கூறி வருகிறது.


Click it and Unblock the Notifications









