மசான் எலெக்ட்ரிக் காரில் விலை குறைவான தேர்வை களமிறக்கிய போர்ஷே.. எல்லாரையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டங்க!
பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான போர்ஷே (Porsche), அதன் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் கார் மாடலான மசான் இவி (Macan EV)-யில் இரண்டு புதிய வேரியண்டுகளை இணைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக இந்த எலெக்ட்ரிக் கார் மாடல் 'டர்போ' (Turbo) எனும் ஒற்றை தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வந்தநிலையில், அதில் புதிய தேர்வுகள் இணைக்கப்பட்டுள்ளன. புதிய தேர்வுகளாக மசான் 4, மசான் 4எஸ் ஆகியவையே இணைக்கப்பட்டு உள்ளன. மசான் எலெக்ட்ரிக் கார் மாடலின் மிகவும் குறைவான வேரியண்டாக மாசான் 4 களமிறக்கப்பட்டு இருக்கின்றது.
இது ஓர் பின் வீல் இயக்கம் வசதிக் கொண்ட தேர்வாகும். இதனால்தான் இந்த வேரியண்டை போர்ஷேவால் குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வர முடிந்திருக்கின்றது. 1.23 கோடி ரூபாயே இதற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இத்துடன், சற்று அதிக விலைக் கொண்ட தேர்வாக மசான் 4எஸ் இவி வேரியண்ட் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. இதற்கு ரூ. 1.39 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதுவும் வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதைத் தொடர்ந்து, இந்த டர்போ வேரியண்டின் விலையும் சமீபத்திலேயே உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த இரண்டு புதிய தேர்வுகளைக் களமிறக்கிய கையோடு போர்ஷே நிறுவனம் மசான் இவி-யின் உயர்நிலை தேர்வான டர்போ-வின் விலையை உயர்த்தி இருக்கின்றது. ரூ. 1.65 கோடியாக இருந்த அதன் விலையை ரூ. 1.69 கோடியாக உயர்த்தி இருக்கின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டே போர்ஷே நிறுவனம் மசான் இவி-யில் மலிவு விலை தேர்வுகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. குறிப்பாக, மசான் 4-இல் அதன் விலையை குறைவாக நிர்ணயிப்பதற்காக ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டாரையே அதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார் 360 எச்பி மற்றும் 563 என்எம் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.
மேலும், இதன் டாப் ஸ்பீட்டு மணிக்கு 220 கிமீ ஆகும். இதுமட்டுமில்லைங்க பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை வெறும் 5.7 செகண்டுகளிலேயே இந்த தேர்வு எட்டிவிடும். இத்தகைய சூப்பர் திறன் கொண்டதாகவே ஆரம்ப நிலை தேர்வு இருக்கின்றது. இதைவிட மிக சிறந்த திறனை வெளியேற்றக் கூடியதாகவே அடுத்த புதிய தேர்வான மசான் 4எஸ் வேரியண்ட் இருக்கின்றது.
ஆனால், இதில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் திறன் வெளிப்பாடு 516 எச்பி மற்றும் 820 என்எம் டார்க் ஆகும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 240 கிமீ ஆகும். மேலும், இதனால் வெறும் 4.1 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும்.
இந்த இரண்டைக் காட்டிலும் மிக மிக அதிக திறனை வெளியேற்றக் கூடியதாகவே தற்போது விலை உயர்வைப் பெற்றிருக்கும் மசான் டர்போ இருக்கின்றது. மசான் டர்போவின் டாப் ஸ்பீடு மணிக்கு 260 கிமீ ஆகும். இதனால், வெறும் 3.3 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும்.
இந்த மூன்று வேரியண்டுகளிலும் 100 kWh பேட்டரி பேக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், ரேஞ்ஜ் என வரும்போது வேரியண்டிற்கு ஏற்ப அது மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது. மசான் 4 இவி ஓர் முழு சார்ஜில் 641 கிமீ ரேஞ்ஜையும், மசான் 4எஸ் இவி 606 கிமீ ரேஞ்ஜையும் மற்றும் டர்போ இவி 591 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டே போர்ஷே நிறுவனம் இந்தியாவில் மசான் எலெக்ட்ரிக் கார் மாடலில் இரண்டு புதிய தேர்வுகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இது ஓர் சொகுசு அம்சம் நிறைந்த எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்தியாவில் இதற்கு மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








